கோவில் 1724 - திருப்பூர் தாளப்பதி முருகன் கோவில்

 🙏🏻🙏🏻                                                                                                                                                       

தினம் ஒரு முருகன் ஆலயம்-1724

மன அமைதி தந்தருளும் திருப்பூர் தாளப்பதி முருகன் கோவில்

26.02.2026 வியாழன் 


அருள்மிகு முருகன்  திருக்கோவில் 

தாளப்பதி 

சுண்டக்கம்பாளையம் 638103

ஊத்துக்குளி  வட்டம்

திருப்பூர் மாவட்டம் 


இருப்பிடம்: திருப்பூர் 58 கிமீ, செங்கப்பள்ளி 4 கிமீ, குன்னத்தூர் 5 கிமீ,  ஊத்துக்குளி  14 கிமீ, பெருந்துறை 23 கிமீ, அவிநாசி 23 கிமீ, கோபிச்செட்டிபாளையம் 27 கிமீ, காங்கேயம் 31 கிமீ


மூலவர்: முருகன்

உற்சவர்: முருகன் வள்ளி, தெய்வானை 


தல மகிமை:

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி  வட்டம் சுண்டக்கம்பாளையம் கிராமத்திற்கு அருகில்  தாளப்பதி பகுதியில் மன அமைதி தந்தருளும் தாளப்பதி முருகன்  கோவில் அமைந்துள்ளது. இத்திருக்கோவில் கும்பாபிஷேகம் 2024-ல் நடைபெற்றது.


திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி  வட்டம் தாளப்பதி முருகன் திருக்கோவில் திருப்பூர் பேருந்து நிலையத்திலிருந்து 58 கிமீ தொலைவு அல்லது செங்கப்பள்ளி பேருந்து நிலையத்திலிருந்து 4 கிமீ தொலைவு அல்லது குன்னத்தூர் பேருந்து நிலையத்திலிருந்து 5 கிமீ தொலைவு அல்லது ஊத்துக்குளி பேருந்து நிலையத்திலிருந்து  14 கிமீ தொலைவு அல்லது பெருந்துறை பேருந்து நிலையத்திலிருந்து 23 கிமீ தொலைவு அல்லது அவிநாசி பேருந்து நிலையத்திலிருந்து 23 கிமீ தொலைவு அல்லது, கோபிச்செட்டிபாளையம் பேருந்து நிலையத்திலிருந்து 27 கிமீ தொலைவு அல்லது, காங்கேயம் பேருந்து நிலையத்திலிருந்து 31 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் தாளப்பதி முருகன் கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் முருகன் கையில் வேல் தாங்கி அருளாட்சி புரிகின்றார்.


தாளப்பதி முருகன் கோவிலில் ஒவ்வொரு வருடமும் தைப்பூசத்  திருவிழா சிறப்புப் பூஜைகளுடன் கொண்டாடப்படுகின்றது. பங்குனி உத்திரத் திருவிழா விமரிசையாக நடைபெறுகின்றது. மேலும் இத்திருக்கோவிலில் கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை உள்ளிட்ட முருகப்பெருமானின் எல்லாத் திருவிழாக்களும் விசேஷ வழிபாடுகளுடன் கொண்டாடப்படுகின்றன. சஷ்டி, கிருத்திகை நன்னாட்களில் சிறப்புப் பூஜைகள் நடக்கின்றன. 


தல வரலாறு:

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி  வட்டம் தாளப்பதி முருகன் கோவில் மிகவும் பழமையானது ஆகும். இரண்டு வருடங்களுக்கு முன்னர் கோவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு 2024-ல் கும்பாபிஷேகம் நடைபெற்றது. 

 

தல அமைப்பு: 

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி  வட்டம் தாளப்பதி முருகன் திருக்கோவில் அழகிய கோபுரங்கள் மற்றும் சிற்பங்களுடன் அமைந்துள்ளன. இத்திருக்கோவில் கருவறையில் மூலவர் முருகன் கையில் வேலுடன் நின்ற திருக்கோலத்தில் திருக்காட்சி தந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். மூலவர். கருவறைக்கு எதிரில் மயில், பலிபீடம் உள்ளன. மேலும் விநாயகர், தட்சிணாமூர்த்தி, துர்க்கை, சிவபெருமான், அம்பாள், நாகர்கள், பைரவர், நவக்கிரகங்கள் உள்ளிட்ட அனைத்துத் தெய்வங்களும் இத்திருக்கோவிலில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர். 


திருவிழா: 

தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, விநாயகர் சதுர்த்தி, சஷ்டி, கிருத்திகை  


பிரார்த்தனை:

மன அமைதி பெற, நினைத்தது நிறைவேற, தோஷங்கள் நீங்க, நல்லன வேண்டி, குழந்தை பாக்கியம் கிட்ட, குடும்ப வாழ்வு மேம்பட, வினைகள் விலக, பிணிகள் தீர, உடல் ஆரோக்கியம் உண்டாக, ஐஸ்வர்யங்கள் பெருக, விவசாயம் செழிக்க, துன்பங்கள் அகல 


நேர்த்திக்கடன்:

பால்குடம், காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்


நினைத்ததை நிறைவேற்றி அருளும் திருப்பூர் தாளப்பதி முருகன் திருவருள் வேண்டி பிரார்த்திப்போம்! 


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


முருகாலய முரசு

சைவ சித்தாந்தச் சுடர்

சைவ நெறிச் செம்மல்

Dr K. முத்துக்குமரன் Ph. D

9489302842

bamikumar@gmail.com 

கோயம்புத்தூர் 25

🙏🏻🙏🏻


படம் 1- 1724 மன அமைதி தந்தருளும் திருப்பூர் தாளப்பதி முருகன் கோவில்



படம் 2 - 1724 நினைத்ததை நிறைவேற்றி அருளும் திருப்பூர் தாளப்பதி முருகன் கோவில்







Comments

Popular posts from this blog

கோவில் 1319 - சேலம் மல்லிகுந்தம் சின்ன பழனியாண்டவர் கோவில்

கோவில் 1341 - சேலம் பள்ளப்பட்டி பழனி பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில்

கோவில் 1326 - சேலம் K R தோப்பூர் பாலமுருகன் கோவில்