கோவில் 1723 - திருப்பூர் குன்னத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-1723
இடர்கள் களைய அருளும் திருப்பூர் குன்னத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்
25.02.2026 புதன்
அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் [TM013741]
[அ/மி முருகன் கோவில்]
குன்னத்தூர் 638103
ஊத்துக்குளி வட்டம்
திருப்பூர் மாவட்டம்
இருப்பிடம்: திருப்பூர் 26 கிமீ, ஊத்துக்குளி 14 கிமீ, பெருந்துறை 20 கிமீ, அவிநாசி 21 கிமீ, கோபிச்செட்டிபாளையம் 22 கிமீ, பல்லடம் 20 கிமீ, காங்கேயம் 36 கிமீ
மூலவர்: சுப்பிரமணிய சுவாமி
உற்சவர்: சுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானை
தல மகிமை:
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி வட்டம் குன்னத்தூர் பகுதியில் இடர்கள் களைய அருளும் சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இத்திருக்கோவில் முருகன் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது.
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி வட்டம் குன்னத்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் திருப்பூர் பேருந்து நிலையத்திலிருந்து 26 கிமீ தொலைவு அல்லது ஊத்துகுளி பேருந்து நிலையத்திலிருந்து 14 கிமீ தொலைவு அல்லது பெருந்துறை பேருந்து நிலையத்திலிருந்து 20 கிமீ தொலைவு அல்லது அவிநாசி பேருந்து நிலையத்திலிருந்து 21 கிமீ தொலைவு அல்லது கோபிச்செட்டிபாளையம் பேருந்து நிலையத்திலிருந்து 22 கிமீ தொலைவு அல்லது பல்லடம் பேருந்து நிலையத்திலிருந்து 20 கிமீ தொலைவு அல்லது காங்கேயம் பேருந்து நிலையத்திலிருந்து 36 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் திருப்பூர் குன்னத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் சுப்பிரமணிய சுவாமி கையில் வேலேந்தி அருளாட்சி செய்கின்றார்.
குன்னத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூசம் வருடந்தோறும் முக்கியத் திருவிழாவாக விமரிசையாக கொண்டாடப்படுகின்றது. பங்குனி உத்திரத் திருவிழா விசேஷ பூஜைகளுடன் சிறப்பாக நடைபெறுகின்றது. மேலும் இத்திருக்கோவிலில் முருகப்பெருமானின் கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை உள்ளிட்ட அனைத்துத் திருவிழாக்களும் சிறப்பு வழிபாடுகளுடன் கொண்டாடப்படுகின்றன. சஷ்டி, கிருத்திகை திருநாட்களில் சிறப்புப் பூஜைகள் நடக்கின்றன.
தல வரலாறு:
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி வட்டம் குன்னத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மிகவும் பழமையான திருக்கோவிலாகும். இத்திருக்கோவில் நிர்வாகம் தற்போது இந்து அறநிலையத் துறை கீழ் நிர்வகிக்கப்படுகிறது.
தல அமைப்பு:
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி வட்டம் குன்னத்தூர் சுப்பிரமணிய சுவாமி ஆகம விதிகளின் படி அமைந்துள்ள திருக்கோவிலாகும். இத்திருக்கோவில் கருவறையில் மூலவர் சுப்பிரமணிய சுவாமி கையில் வேலுடன் நின்ற திருக்கோலத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். மூலவர் சுப்பிரமணிய சுவாமியின் வலது கை அபய கரம் நீட்டி அருள்பாலிப்பது சிறப்பு. மூலவர் எதிரில் மயில், பலிபீடம் உள்ளன. மேலும் விநாயகர், கோஷ்ட மூர்த்திகள், சிவபெருமான், நவக்கிரகங்கள் உள்ளிட்ட எல்லாத் தெய்வங்களும் இத்திருக்கோவிலில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, விநாயகர் சதுர்த்தி, சஷ்டி, கிருத்திகை
பிரார்த்தனை:
இடர்கள் களைய, மன மகிழ்ச்சி கிட்ட, திருமணம் வரம், குழந்தை வரம் வேண்டி, வினைகள் நீங்க, பிணிகள் தீர, குடும்பம் சிறக்க, நோய்கள் குணமடைய, செல்வம் பெருக, தொழில் மேம்பட, வியாபாரம் விருத்தியடைய, நல்லன வேண்டி, தோஷங்கள் விலகிட
நேர்த்திக்கடன்:
பால்குடம், காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
குழந்தை பாக்கியம் தந்தருளும் திருப்பூர் குன்னத்தூர் சுப்பிரமணிய சுவாமி திருப்பாதங்கள் பணிந்து வேண்டுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
சைவ சித்தாந்தச் சுடர்
சைவ நெறிச் செம்மல்
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
bamikumar@gmail.com
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
படம் 1 - 1723 இடர்கள் களைய அருளும் திருப்பூர் குன்னத்தூர் சுப்பிரமணிய சுவாமி
படம் 2 - 1723 குழந்தை பாக்கியம் தந்தருளும் திருப்பூர் குன்னத்தூர் சுப்பிரமணிய சுவாமி
Comments
Post a Comment