கோவில் 1722 - திருப்பூர் குமார்நாதபுரம் பாலமுருகன் கோவில்

 🙏🏻🙏🏻

தினம் ஒரு முருகன் ஆலயம்-1722

மன அமைதி தரும் திருப்பூர் குமார்நாதபுரம் பாலமுருகன் கோவில்

24.02.2026 செவ்வாய்


அருள்மிகு பாலமுருகன் திருக்கோவில்

[அ/மி செல்வ விநாயகர் கோவில்]

குமார்நாதபுரம் 641602

திருப்பூர் 641602

திருப்பூர் வட்டம்

திருப்பூர் மாவட்டம்


இருப்பிடம்: திருப்பூர் 4 கிமீ, அவிநாசி 12 கிமீ, பல்லடம் 20 கிமீ, காங்கேயம் 31 கிமீ, கோயம்புத்தூர் காந்திபுரம் 54 கிமீ


மூலவர்: பாலமுருகன்

மூலவர் 2: செல்வ விநாயகர்


தல மகிமை:

திருப்பூர் மாவட்டம் திருப்பூர் மாநகரம் குமார்நாதபுரம் பகுதியில் மன அமைதி தரும் திருப்பூர் குமார்நாதபுரம் பாலமுருகன் கோவில் அமைந்துள்ளது. இத்திருக்கோவில் செல்வ விநாயகர் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது.


திருப்பூர் குமார்நாதபுரம் பாலமுருகன் திருக்கோவில் திருப்பூர் பேருந்து நிலையத்திலிருந்து 4 கிமீ தொலைவு அல்லது அவிநாசி பேருந்து நிலையத்திலிருந்து 6 கிமீ தொலைவு அல்லது பல்லடம் பேருந்து நிலையத்திலிருந்து 20 கிமீ தொலைவு அல்லது காங்கேயம் பேருந்து நிலையத்திலிருந்து 31 கிமீ தொலைவு அல்லது கோயம்புத்தூர் காந்திபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 53 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் திருப்பூர் குமார்நாதபுரம் பாலமுருகன் கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் பாலமுருகன் கையில் வேலுடன் அருள்கின்றார்.


திருப்பூர் குமார்நாதபுரம் பாலமுருகன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசத் திருவிழா சிறப்புத் தீபாரதனைகளுடன் விமரிசையாக நடைபெறுகின்றது. பங்குனி உத்திரம் மற்றும் கந்த சஷ்டி திருவிழாக்கள் சிறப்புப் பூஜைகளுடன் நடைபெறுகின்றன. மேலும் இத்திருக்கோவிலில் முருகப்பெருமானின் வைகாசி விசாகம், திருக்கார்த்திகை உள்ளிட்ட அனைத்துத் திருவிழாக்களும் சிறப்பு வழிபாடுகளுடன் கொண்டாடப்படுகின்றன. சஷ்டி, கிருத்திகை திருநாட்களில் விசேஷ பூஜைகள் நடக்கின்றன.


தல வரலாறு:

திருப்பூர் மாநகரில் பிரசித்திப் பெற்ற குமார்நாதபுரம் பாலமுருகன் கோவில் அமைந்துள்ளது.

தல அமைப்பு:

திருப்பூர் குமார்நாதபுரம் பாலமுருகன் கோவில் அழகிய கோபுரங்கள் மற்றும் சிற்பங்களுடன் அமைந்துள்ள கோவிலாகும். இத்திருக்கோவில் கருவறையில் மூலவர் பாலமுருகன் கையில் வேலுடன் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். மூலவர் எதிரில் மயில், பலிபீடம் உள்ளன. அடுத்து தனி சந்நிதியில் செல்வ விநாயகர் மற்றொரு மூலவராக வீற்றிருந்து அருள்பாலிக்கின்றார். மேலும் சிவபெருமான், கோஷ்ட மூர்த்திகள், நவக்கிரகங்கள் உள்ளிட்ட அனைத்துத் தெய்வங்களும் இத்திருக்கோவிலில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.


திருவிழா:

தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, விநாயகர் சதுர்த்தி, சஷ்டி, கிருத்திகை


பிரார்த்தனை:

மன அமைதி பெற, குழந்தை பாக்கியம் வேண்டி, திருமணம் நடைபெற, வினைகள் போக்க, பிணிகள் அகல, நோய்கள் நீங்கிட, சகல ஐஸ்வர்யங்களும் கிட்ட, தொல்லைகள் விலக, நேர்மறை எண்ணங்கள் உண்டாக, வியாபாரம் மேம்பட, தோஷங்கள் விலக


நேர்த்திக்கடன்:

பால்குடம், காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்


குழந்தை பாக்கியம் தந்தருளும் திருப்பூர் குமார்நாதபுரம் பாலமுருகனை மனமுருகி பிரார்த்திப்போம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


முருகாலய முரசு

சைவ சித்தாந்தச் சுடர்

சைவ நெறிச் செம்மல்

Dr K. முத்துக்குமரன் Ph. D

9489302842

bamikumar@gmail.com

கோயம்புத்தூர் 25

🙏🏻🙏🏻


படம் 1 - 1722 மன அமைதி தரும் திருப்பூர் குமார்நாதபுரம் பாலமுருகன் கோவில்


படம் 2 - 1722 குழந்தை பாக்கியம் தந்தருளும் திருப்பூர் குமார்நாதபுரம் பாலமுருகன் கோவில்

Comments

Popular posts from this blog

கோவில் 1319 - சேலம் மல்லிகுந்தம் சின்ன பழனியாண்டவர் கோவில்

கோவில் 1341 - சேலம் பள்ளப்பட்டி பழனி பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில்

கோவில் 1326 - சேலம் K R தோப்பூர் பாலமுருகன் கோவில்