கோவில் 1721 - திருநெல்வேலி மகாராஜநகர் EMS Hall சுப்பிரமணிய சுவாமி கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-1721
செல்வ வளம் பெருகும் திருநெல்வேலி மகாராஜநகர் EMS Hall சுப்பிரமணிய சுவாமி கோவில்
23.02.2026 திங்கள்
அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்
[அ/மி விநாயகர் கோவில்]
EMS Hall [ஈ எம் எஸ் மகால்]
[பாம்பே தியேட்டர் அருகில்]
ஹைகிரவுண்ட் தலைமை மருத்துவமனை அருகில்
மகாராஜநகர்
திருநெல்வேலி 627011
திருநெல்வேலி மாவட்டம்
இருப்பிடம்: திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் 4 கிமீ, திருநெல்வேலி பழைய பேருந்து நிலையம் 6 கிமீ, ஹைகிரவுண்ட் தலைமை மருத்துவமனை 750 மீ
மூலவர்: சுப்பிரமணிய சுவாமி
தேவியர்: வள்ளி, தெய்வானை
மூலவர் 2: விநாயகர்
தல மகிமை:
திருநெல்வேலி மாவட்டம் திருநெல்வேலி மாநகரம் மகராஜநகர் ஹைகிரவுண்ட் தலைமை மருத்துவமனை அருகில் செல்வ வளம் பெருகும் திருநெல்வேலி மகாராஜநகர் EMS Hall சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இத்திருக்கோவில் பிரசித்திப் பெற்ற EMS கல்யாண மண்டப வளாகத்தில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு அருகில் பாம்பே திரையரங்கம் உள்ளது. இத்திருக்கோவில் விநாயகர் கோவில் [சக்தி விநாயகர் கோவில்] என்றும் அழைக்கப்படுகிறது.
திருநெல்வேலி மகாராஜநகர் EMS Hall சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்திலிருந்து 4 கிமீ தொலைவு அல்லது திருநெல்வேலி பழைய பேருந்து நிலையத்திலிருந்து 6 கிமீ தொலைவு அல்லது ஹைகிரவுண்ட் தலைமை மருத்துவமனையிலிருந்து 750 மீ தொலைவு பிரயாணம் செய்தாலும் திருநெல்வேலி மகாராஜநகர் EMS Hall சுப்பிரமணிய சுவாமி கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் சுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானை சமேதராக அருள்பாலிக்கின்றார்.
திருநெல்வேலி மகாராஜநகர் EMS Hall சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூசம் மற்றும் பங்குனி உத்திரமதிருவிழாக்கள் சிறப்புப் பூஜைகளுடன் விமரிசையாக நடைபெறுகின்றன. மேலும் முருகப்பெருமானின் கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை உள்ளிட்ட அனைத்துத் திருவிழாக்களும் இத்திருக்கோவிலில் விசேஷ வழிபாடுகளுடன் கொண்டாடப்படுகின்றன. சஷ்டி, கிருத்திகை நன்னாட்களில் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.
தல வரலாறு:
திருநெல்வேலி மகாராஜநகர் EMS Hall (கல்யாண மண்டபம்) வளாகத்தில் சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்திருப்பது சிறப்பு என்று இப்பகுதிவாசிகள் தெரிவிக்கின்றனர்.
தல அமைப்பு:
திருநெல்வேலி மகாராஜநகர் EMS Hall சுப்பிரமணிய சுவாமி கோவில் மிகச் சிறிய கோவிலாகும். இத்திருக்கோவில் கருவறையில் மூலவர் சுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானை சமேதராக அழகிய திருக்கோலத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். மேலும் அடுத்து தனி சந்நிதியில் செல்வ விநாயகர் மற்றொரு மூலவராக வீற்றிருந்து அருள்பாலிக்கின்றார்.
திருவிழா:
தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, விநாயகர் சதுர்த்தி, சஷ்டி, கிருத்திகை
பிரார்த்தனை:
செல்வ வளம் பெருக, திருமண வாழ்வு அருள, குழந்தை வரம் கிட்ட, நல்லன வேண்டி, வினைகள் நீங்க, பிணிகள் தீர, வேண்டியது கிடைக்க, தொழில், வியாபாரம் மேம்பட, தோஷங்கள் அகல
நேர்த்திக்கடன்:
பால்குடம், காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
திருமண வாழ்வு அருளும் திருநெல்வேலி மகாராஜநகர் EMS Hall சுப்பிரமணிய சுவாமியை போற்றி வணங்குவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
சைவ சித்தாந்தச் சுடர்
சைவ நெறிச் செம்மல்
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
bamikumar@gmail.com
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
படம் 1 - 1721 செல்வ வளம் பெருகும் திருநெல்வேலி மகாராஜநகர் EMS Hall சுப்பிரமணிய சுவாமி
Comments
Post a Comment