கோவில் 1720 - திருப்பூர் சென்னிமலைபாளையம் முருகன் கோவில்

 🙏🏻🙏🏻

தினம் ஒரு முருகன் ஆலயம்-1720

நல்லன அருளும் திருப்பூர் சென்னிமலைபாளையம் முருகன் கோவில்

22.02.2026 ஞாயிறு


அருள்மிகு முருகன் திருக்கோவில்

சென்னிமலைபாளையம் 641606

திருப்பூர் வட்டம்

திருப்பூர் மாவட்டம்


இருப்பிடம்: திருப்பூர் 14 கிமீ, காங்கேயம் 20 கிமீ, அவிநாசி 23 கிமீ, பல்லடம் 33 கிமீ, வெள்ளக்கோவில் 39 கிமீ


மூலவர்: முருகன்

உற்சவர்: முருகன்


தல மகிமை:

திருப்பூர் மாவட்டம் திருப்பூர் வட்டம் சென்னிமலைபாளையம் கிராமத்தில் நல்லன அருளும் சென்னிமலைபாளையம் முருகன் கோவில் அமைந்துள்ளது.


சென்னிமலைபாளையம் முருகன் திருக்கோவில் திருப்பூர் பேருந்து நிலையத்திலிருந்து 14 கிமீ தொலைவு அல்லது காங்கேயம் பேருந்து நிலையத்திலிருந்து 20 கிமீ தொலைவு அல்லது அவிநாசி பேருந்து நிலையத்திலிருந்து 23 கிமீ தொலைவு அல்லது பல்லடம் பேருந்து நிலையத்திலிருந்து 33 கிமீ தொலைவு அல்லது வெள்ளக்கோவில் பேருந்து நிலையத்திலிருந்து 39 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் சென்னிமலைபாளையம் முருகன் கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் முருகன் பெருங்கருணையுடன் அருள்புரிகின்றார்.


திருப்பூர் மாவட்டம் திருப்பூர் வட்டம் சென்னிமலைபாளையம் முருகன் கோவிலில் தைப்பூம் வருடந்தோறும் சிறப்புப் பூஜைகளுடன் விமரிசையாக நடைபெறுகின்றது. பங்குனி உத்திரம் மற்றும். கந்த சஷ்டி திருவிழாக்களும் வெகுச் சிறப்புகளுடன் ந்டக்கின்றன. மேலும் முருகப்பெருமானின் வைகாசி விசாகம், திருக்கார்த்திகை உள்ளிட்ட அனைத்துத் திருவிழாக்களும் இத்திருக்கோவிலில் சிறப்பு பூஜைகளுடன் கொண்டாடப்படுகின்றன. சஷ்டி, கிருத்திகை நாட்களில் விசேஷ பூஜைகள் நடைபெறுகின்றன.


தல வரலாறு:

திருப்பூர் மாவட்டம் திருப்பூர் வட்டம் சென்னிமலைபாளையம் முருகன் கோவில் இப்பகுதியில் சிறப்பு மிக்க முருகன் கோவில் ஆகும்.


தல அமைப்பு:

சென்னிமலைபாளையம் முருகன் கோவில் கோபுரங்கள் அழகுற அமைந்துள்ளன. கோவிலில் அழகிய தீபஸ்தம்பம் உள்ளது. இத்திருக்கோவில் கருவறையில் மூலவர் முருகன் கையில் வேலேந்தி அழகிய திருக்கோலத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் மயில், பலிபீடம் உள்ளன. மேலும் விநாயகர், உற்சவர், உள்ளிட்ட அனைத்து தெய்வங்களும் இத்திருக்கோவிலில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.


திருவிழா:

தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, விநாயகர் சதுர்த்தி, சஷ்டி, கிருத்திகை


பிரார்த்தனை:

நல்லன அருள, விருப்பங்கள் நிறைவேற, நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்க், வினைகள் தீர, பிணிகள் நீங்க, குழந்தை பாக்கியம் வேண்டி, உடல் ஆரோக்கியம் உண்டாக, மன மகிழ்ச்சி கிட்ட, கஷ்டங்கள் விலக, விவசாயம் செழிக்க, தோஷங்கள் போக்க


நேர்த்திக்கடன்:

பால்குடம், காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்


விருப்பங்களை நிறைவேற்றும் திருப்பூர் சென்னிமலைபாளையம் முருகனை திருவடிகள் வணங்கி மகிழ்வோம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


முருகாலய முரசு

சைவ சித்தாந்தச் சுடர்

சைவ நெறிச் செம்மல்

Dr K. முத்துக்குமரன் Ph. D

9489302842

bamikumar@gmail.com

கோயம்புத்தூர் 25 🙏🏻🙏🏻🙏🏻


படம் 1 - 1720 ருப்பங்களை நிறைவேற்றும் திருப்பூர் சென்னிமலைபாளையம் முருகன்



படம் 2 - 1720 விருப்பங்களை நிறைவேற்றும் திருப்பூர் சென்னிமலைபாளையம் முருகன்

Comments

Popular posts from this blog

கோவில் 1319 - சேலம் மல்லிகுந்தம் சின்ன பழனியாண்டவர் கோவில்

கோவில் 1341 - சேலம் பள்ளப்பட்டி பழனி பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில்

கோவில் 1326 - சேலம் K R தோப்பூர் பாலமுருகன் கோவில்