கோவில் 1699 - மலேசியா சிலாங்கூர் கிள்ளான் துறைமுகம் பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-1699
இருவினைகளையும் விலக்கும் மலேசியா சிலாங்கூர் கிள்ளான் துறைமுகம் பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்
1.02.2026 ஞாயிறு
அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்
1183, Jalan Limbongan
42000 கிள்ளான் துறைமுகம் [Port Klang]
கிள்ளான் மாவட்டம் [Klang District]
சிலாங்கூர் மாநிலம் [Selangor State]
மலேசியா [Malaysia]
இருப்பிடம்: கோலாலம்பூர் [Kuala Lumpur] 39 கிமீ, கிள்ளான் [Klang] 8 கிமீ, சா ஆலாம் [Shah Alam] 19 கிமீ, மேரு [Meru] 24 கிமீ, சுபாங் ஜெயா [Subang Jaya] 28 கிமீ, காப்பார் [Kapar] 30 கிமீ, பெட்டாலிங் ஜெயா [Petaling Jaya] 35 கிமீ
மூலவர்: பாலசுப்பிரமணிய சுவாமி
உற்சவர்: பாலசுப்பிரமணிய சுவாமி
தல மகிமை:
மலேசியா நாட்டில் மேற்கே அமைந்துள்ள சிலாங்கூர் மாநிலம் [Selangor State] கிள்ளான் மாவட்டம் [Klang District] கிள்ளான் துறைமுகம் [Port Klang] நகரில் இருவினைகளையும் விலக்கும் கிள்ளான் துறைமுகம் பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது.
இத்திருக்கோவில் கோலாலம்பூர் பேருந்து நிலையத்திலிருந்து [Kuala Lumpur] 39 கிமீ தொலைவு அல்லது கிள்ளான் [Klang] பேருந்து நிலையத்திலிருந்து 8 கிமீ தொலைவு அல்லது சா ஆலாம் [Shah Alam] பேருந்து நிலையத்திலிருந்து 19 கிமீ தொலைவு அல்லது மேரு [Meru] பேருந்து நிலையத்திலிருந்து 24 கிமீ தொலைவு அல்லது சுபாங் ஜெயா [Subang Jaya] பேருந்து நிலையத்திலிருந்து 28 கிமீ தொலைவு அல்லது காப்பார் [Kapar] பேருந்து நிலையத்திலிருந்து 30 கிமீ ,தொலைவு அல்லது பெட்டாலிங் ஜெயா [Petaling Jaya] பேருந்து நிலையத்திலிருந்து 35 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் கிள்ளான் துறைமுகம் பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் பாலசுப்பிரமணிய சுவாமி பாலகனாக வீற்றிருந்து அருளாட்சி செய்கின்றார்.
மலேசியா சிலாங்கூர் மாநிலம் கிள்ளான் மாவட்டம் கிள்ளான் துறைமுகம் பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் வருடந்தோறும் முக்கியத் திருவிழாவான சித்ரா பௌர்ணமி 11 நாட்கள் மிகவும் சிறப்பாக நடைபெறுகின்றது. சுவாமி ரத ஊர்வலம் முக்கிய நிகழ்வாகும். கந்த சஷ்டி திருவிழா 6 நாட்கள் விமரிசையாக நடைபெறுகின்றது. தினமும் பாலசுப்பிரமணிய சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனைகள் நடைபெறுகின்றது. பக்தர்கள் விரதமிருந்து, பாலசுப்பிரமணிய சுவாமியை வழிபட்டு நற்பலன்கள் பெற்றுச் செல்கின்றனர். ஆறாம் நாள் மாலை சூரசம்ஹார நிகழ்வு சிறப்பாக நடைபெறுகின்றது. திருக்கார்த்திகை தீபத்திருநாளும் வெகு விமரிசையாக சிறப்புப் பூஜைகளுடன் நடைபெறுகின்றது. மேலும் இத்திருக்கோவிலில் பாலசுப்பிரமணிய சுவாமிக்கு தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், உள்ளிட்ட அனைத்துத் திருவிழாக்களும் சிறப்புப் தீபாராதனைகளுடன் கொண்டாடப்படுகின்றன. சஷ்டி, கிருத்திகை, பிரதோஷம் முதலான திருநாட்களில் சிறப்புப் பூஜைககள் நடக்கின்றன. தமிழ், ஆங்கில வருட பிறப்பு, தீபாவளி, பொங்கல், விநாயகர் சதுர்த்தி, மகா சிவராத்திரி, நவராத்திரி உள்ளிட்ட அனைத்து இந்து பண்டிகைகளும் சிறப்புப் பூஜைகளுடன் நடைபெறுகின்றன.
தல வரலாறு:
மலேசியா சிலாங்கூர் மாநிலம் கிள்ளான் மாவட்டம் கிள்ளான் துறைமுகம் பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் 140 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். கிள்ளான் துறைமுகத்தில் இரயில்வே இலாக்காவில் வேலை செய்து வந்த தமிழர்கள் எல்லோரும் சேர்ந்து ஓர் அரசமரத்தடியில் வேல் ஒன்றை வைத்துத் தினமும் வணங்கி வந்தனர். பின்னர் 1948-ம் ஆண்டு கோவில் கட்டும் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு 1952-ல் பூர்த்தி செய்து 11.02.1952 திங்கட்கிழமையன்று மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. 1986-ல் கோவில் கட்டுவதற்காக நிலம் வாங்கி, அந்த இடத்தில் திருக்கோவில் கட்டி 01.021998-ல் மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
தல அமைப்பு:
மலேசியா சிலாங்கூர் மாநிலம் கிள்ளான் மாவட்டம் கிள்ளான் துறைமுகம் பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் கோவில் கோபுரங்கல் மற்றும் சிற்பங்கள் அழகுடன் அமைந்துள்ளது. இத்திருக்கோவில் கருவறையில் மூலவர் பாலசுப்பிரமணிய சுவாமி அழகு பாலகனாக நின்ற திருக்கோலத்தில் திருக்காட்சி தந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் மயில், பலிபீடம் உள்ளன. மேலும் விநாயகர், உற்சவர், சிவபெருமான், அம்பாள், நவக்கிரகங்கள் உள்ளிட்ட எல்லா தெய்வங்களும் இத்திருக்கோவிலில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
சித்ரா பௌர்ணமி, கந்த சஷ்டி, தைப்பூசம், திருக்கார்த்திகை, பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், விநாயகர் சதுர்த்தி, மகா சிவராத்திரி, நவராத்திரி, தீபாவளி, பொங்கல், தமிழ், ஆங்கில புத்தாண்டு தினம், சஷ்டி, கிருத்திகை, பிரதோஷம்
பிரார்த்தனை:
இருவினைகள் விலக, விருப்பங்கள் நிறைவேற, பிணிகள் தீர, கல்வி, ஞானம் மேம்பட, சந்தான பாக்கியம் வேண்டி, குடும்ப ஒற்றுமை ஓங்க, நோய்கள் குணமடைய, மன அமைதி கிட்ட, இடர்கள் களைய, தொழில் சிறக்க, தோஷங்கள் விலக
நேர்த்திக்கடன்:
பால்குடம், காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
திறக்கும் நேரம்:
காலை 6-12 மாலை 5-9
விருப்பங்களை நிறைவேற்றும் மலேசியா சிலாங்கூர் கிள்ளான் துறைமுகம் பாலசுப்பிரமணிய சுவாமி திருப்பாதங்கள் பணிந்து போற்றிடுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
சைவ சித்தாந்தச் சுடர்
சைவ நெறிச் செம்மல்
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
bamikumar@gmail.com
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
படம் 1 - 1699 இருவினைகளையும் விலக்கும் மலேசியா சிலாங்கூர் கிள்ளான் துறைமுகம் பாலசுப்பிரமணிய சுவாமி
Comments
Post a Comment