கோவில் 1697 - மலேசியா சிலாங்கூர் காஜாங் சுப்பிரமணிய சுவாமி கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-1697
இகபர சௌபாக்கியங்கள் அருளும் மலேசியா சிலாங்கூர் காஜாங் சுப்பிரமணிய சுவாமி கோவில்
30.01.2026 வெள்ளி
அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்
ஜாலன் ரெக்கோ [Jalan Reko]
43000 காஜாங் [Kajang]
உலு லங்காட் மாவட்டம் [Hulu Langat District]
சிலாங்கூர் மாநிலம் [Selangor State]
மலேசியா [Malaysia]
இருப்பிடம்: கோலாலம்பூர் [Kuala Lumpur] 25 கிமீ, செர்டாங் [Serdang] 17 கிமீ, புத்ராஜெயா [Putrajaya] 18 கிமீ, செராஸ் [Cheras] 19 கிமீ, சைபர்ஜெயா [Cyberjaya] 24 கிமீ, சாலாக் திங்கி [Salak Tinggi] 28 கிமீ, நீலாய் [Nilai] 33 கிமீ, பெட்டாலிங் ஜெயா [Petaling Jaya] 33 கிமீ, சுபாங் ஜெயா [Subang Jaya] 34 கிமீ, சிப்பாங் [Sepang] 37 கிமீ, சா ஆலாம் [Shah Alam] 41 கிமீ
மூலவர்: சுப்பிரமணிய சுவாமி
தேவியர்: வள்ளி, தெய்வானை
உற்சவர்: சுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானை
பழமை: 120 ஆண்டுகள்
கும்பாபிஷேகம்: 06.07.2022
தல மகிமை:
மலேசியா நாட்டில் மேற்கே அமைந்துள்ள சிலாங்கூர் மாநிலம் [Selangor State] உலு லங்காட் மாவட்டம் [Sepang District] காஜாங் [Kajang] நகரின் அருகில் ஜாலன் ரெக்கோ [Jalan Reko] பகுதியில் இகபர சௌபாக்கியங்கள் அருளும் காஜாங் சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. நூறாண்டுகளுக்கும் மேல் பழமையான இக்கோவிலின் கும்பாபிஷேகம் 06.07.2022 அன்று சிறப்பாக நடைபெற்றது.
இத்திருக்கோவில் கோலாலம்பூர் பேருந்து நிலையத்திலிருந்து [Kuala Lumpur] 25 கிமீ தொலைவு அல்லது செர்டாங் [Serdang] பேருந்து நிலையத்திலிருந்து 17 கிமீ தொலைவு அல்லது புத்ராஜெயா [Putrajaya] பேருந்து நிலையத்திலிருந்து 18 கிமீ தொலைவு அல்லது செராஸ் [Cheras] பேருந்து நிலையத்திலிருந்து 19 கிமீ ,தொலைவு அல்லது சைபர்ஜெயா [Cyberjaya] பேருந்து நிலையத்திலிருந்து 24 கிமீ தொலைவு அல்லது சாலாக் திங்கி [Salak Tinggi] பேருந்து நிலையத்திலிருந்து 28 கிமீ தொலைவு அல்லது நீலாய் [Nilai] பேருந்து நிலையத்திலிருந்து 33 கிமீ, பெட்டாலிங் ஜெயா [Petaling Jaya] பேருந்து நிலையத்திலிருந்து 33 கிமீ தொலைவு அல்லது சுபாங் ஜெயா [Subang Jaya] பேருந்து நிலையத்திலிருந்து 34 கிமீ தொலைவு அல்லது சிப்பாங் [Sepang] பேருந்து நிலையத்திலிருந்து 37 கிமீ தொலைவு அல்லது சா ஆலாம் [Shah Alam] பேருந்து நிலையத்திலிருந்து 41 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் காஜாங் சுப்பிரமணிய சுவாமி கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் சுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானையுடன் அருள்புரிகின்றார்.
மலேசியா சிலாங்கூர் மாநிலம் உலு லங்காட் மாவட்டம் காஜாங் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் முக்கிய திருவிழாவாக தைப்பூசம் சிறப்புடன் கொண்டாடப்படுகின்றது. அதிக அளவில் பக்தர்கள் காவடி ஏந்தி வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். பலர் பால்குடம் ஏந்தி வருகின்றனர். இக்கோவிலில் தைப்பூசம் தேரோட்டம் இத்திருவிழாவின் சிறப்பம்சமாகும். கந்த சஷ்டி திருவிழா 7 நாட்கள் விமரிசையாக நடைபெறுகின்றது. தினமும் பெருமானுக்கு அபிஷேகம், அலங்காரம் மற்றும் சிறப்புத் பூஜைகள் நடைபெறுகின்றது. பக்தர்கள் விரதமிருந்து, பெருமானை வழிபட்டு செல்கின்றனர். ஆறாம் நாள் மாலை சூரசம்ஹாரம் சிறப்பாக நடைபெறுகின்றது. மேலும் இத்திருக்கோவிலில் முருகப்பெருமானுக்கு பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை உள்ளிட்ட அனைத்துத் திருவிழாக்களும் சிறப்புப் பூஜைகளுடன் கொண்டாடப்படுகின்றன. சஷ்டி, கிருத்திகை, பிரதோஷம் முதலான திருநாட்களில் சிறப்புப் பூஜைககள் நடக்கின்றன. தமிழ், ஆங்கில வருட பிறப்பு, தீபாவளி, பொங்கல், விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, உள்ளிட்ட அனைத்து இந்து பண்டிகைகளும் சிறப்புப் பூஜைகளுடன் நடைபெறுகின்றன.
தல வரலாறு:
மலேசியா சிலாங்கூர் மாநிலம் உலு லங்காட் மாவட்டம் காஜாங் சுப்பிரமணிய சுவாமி கோவில் சுமார் 120 ஆண்டுகள் பழமையான, பிரசித்திப் பெற்றக் கோவிலாகும். இங்குள்ள தமிழர்கள் 1905-ம் ஆண்டில் ஒரு சிறிய முருகன் கோவிலாக கட்டி, வழிபட்டு வந்தனர். பின்னர் 1952-ல் புதுப்பிக்கப்பட்டது. மேலும் 1975-ல் மீண்டும் புதிப்பிக்கப்பட்டன. பின்னர் 2022-ல் திருக்கோவில் திருப்பணி வேலைகள் மேற்கொள்ளப்பட்டு 06.07.2022 அன்று மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
தல அமைப்பு:
மலேசியா சிலாங்கூர் மாநிலம் உலு லங்காட் மாவட்டம் காஜாங் சுப்பிரமணிய சுவாமி கோவில் தமிழக கோவில்களை போலவே கட்டப்பட்டுள்ளது. இத்திருக்கோவில் கருவறையில் மூலவர் சுப்பிரமணிய சுவாமி கையில் வேல் கொண்டு வள்ளி, தெய்வானை சமேதராக வீற்றிருந்து பக்தர்களுக்கு ஆற்றலுடன் அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் கொடிமரம், மயில், பலிபீடம் உள்ளன. இத்திருக்கோவிலில் விநாயகர், உற்சவர், ஆறுமுக சுவாமி, ராஜராஜேஸ்வரி அம்மன், சந்தான கோபாலன், நாக தம்பிரான், பைரவர், நவக்கிரகங்கள் உட்பட அனைத்துத் தெய்வங்களும் சந்நிதிகளில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
தைப்பூசம், கந்த சஷ்டி, பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், சித்ரா பௌர்ணமி, திருக்கார்த்திகை, விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, தீபாவளி, பொங்கல், தமிழ், ஆங்கில புத்தாண்டு தினம், சஷ்டி, கிருத்திகை, பிரதோஷம்
பிரார்த்தனை:
இகபர சௌபாக்கியங்கள் வேண்டி, நல்லன அருள, நினைத்தது நிறைவேற, வினைகள் விலக, பிணிகள் போக்க, மன அமைதி பெற, திருமண வரம் மற்றும் குழந்தை வரம் கிட்ட, நோய்கள் குணமடைய, தொல்லைகள் தீர, தொழில் மேம்பட, தோஷங்கள் அகல
நேர்த்திக்கடன்:
பால்குடம், காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
திறக்கும் நேரம்:
காலை 7-9.30 மாலை 6.30-9.30
நல்லன அருளும் மலேசியா சிலாங்கூர் காஜாங் சுப்பிரமணிய சுவாமியை மனமுருகி வேண்டுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
சைவ சித்தாந்தச் சுடர்
சைவ நெறிச் செம்மல்
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
bamikumar@gmail.com
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
படம் 1 - 1697 இகபர சௌபாக்கியங்கள் அருளும் மலேசியா சிலாங்கூர் காஜாங் சுப்பிரமணிய சுவாமி
Comments
Post a Comment