கோவில் 1696 - மலேசியா சிலாங்கூர் டெங்கில் மயூரநாதர் கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-1696
மங்கல வாழ்வு அருளும் மலேசியா சிலாங்கூர் டெங்கில் மயூரநாதர் கோவில்
29.01.2026 வியாழன்
அருள்மிகு மயூரநாதர் திருக்கோவில்
[அ/மி பாம்பன் சுவாமிகள் திருக்கோவில்]
அம்பர் தெனாங் கிராமம் [Jalan Kampung Ampar Tenang]
43800 டெங்கில் [Dengkil]
சிப்பாங் மாவட்டம் [Sepang District]
சிலாங்கூர் மாநிலம் [Selangor State]
மலேசியா [Malaysia]
இருப்பிடம்: கோலாலம்பூர் [Kuala Lumpur] 40 கிமீ, கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையம் [KLIA] 18 கிமீ, சிப்பாங் [Sepang] 11 கிமீ, சைபர்ஜெயா [Cyberjaya] 12 கிமீ, சாலாக் திங்கி [Salak Tinggi] 13 கிமீ, புத்ராஜெயா [Putrajaya] 17 கிமீ, நீலாய் [Nilai] 19 கிமீ, சா ஆலாம் [Shah Alam] 41 கிமீ
மூலவர்: மயூரநாதர்
உற்சவர்: மயூரநாதர் வள்ளி, தெய்வானை
தல மகிமை:
மலேசியா நாட்டில் மேற்கே அமைந்துள்ள சிலாங்கூர் மாநிலம் [Selangor State] சிப்பாங் மாவட்டம் [Sepang District] டெங்கில் [Dengkil] நகரின் அருகில் அம்பர் தெனாங் கிராமத்தில் [Jalan Kampung Ampar Tenang] மங்கல வாழ்வு அருளும் டெங்கில் மயூரநாதர் கோவில் அமைந்துள்ளது. பாம்பன் சுவாமிகளும் இத்திருக்கோவிலில் வீற்றிருந்து அருள்புரிவதால், இத்திருக்கோவில் அ/மி பாம்பன் சுவாமிகள் திருக்கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. மேலும் மூலவர் மயூரநாதர் சாநித்தியத்தால், திருக்கோவிலில் மயில்கள் வலம் வருவது இத்திருத்தலத்தின் சிறப்பம்சமாகும்.
இத்திருக்கோவில் கோலாலம்பூர் பேருந்து நிலையத்திலிருந்து [Kuala Lumpur] 40 கிமீ தொலைவு அல்லது கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்திலிருந்து [KLIA] 18 கிமீ தொலைவு அல்லது சிப்பாங் [Sepang] பேருந்து நிலையத்திலிருந்து 11 கிமீ தொலைவு அல்லது சைபர்ஜெயா [Cyberjaya] பேருந்து நிலையத்திலிருந்து 12 கிமீ தொலைவு அல்லது சாலாக் திங்கி [Salak Tinggi] பேருந்து நிலையத்திலிருந்து 13 கிமீ தொலைவு அல்லது புத்ராஜெயா [Putrajaya] பேருந்து நிலையத்திலிருந்து 17 கிமீ தொலைவு அல்லது நீலாய் [Nilai] பேருந்து நிலையத்திலிருந்து 19 கிமீ தொலைவு அல்லது சா ஆலாம் [Shah Alam] பேருந்து நிலையத்திலிருந்து 41 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் டெங்கில் மயூரநாதர் கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் மயூரநாதர் மயில் மீதமர்ந்து கருணை பொங்க அருள்பாலிக்கின்றார்.
மலேசியா சிலாங்கூர் மாநிலம் சிப்பாங் மாவட்டம் டெங்கில் மயூரநாதர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திரத் திருவிழா 3 நாட்கள் வெகுச் சிறப்பாக சிறப்புப் பூஜைகளுடன் கொண்டாடப்படுகின்றது. ஏராளமான பக்தர்கள் காவடி ஏந்தி வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். கந்த சஷ்டி திருவிழா 7 நாட்கள் வெகுச் சிறப்பாக நடைபெறுகின்றது. தினமும் மயூரநாதனுக்கு அபிஷேகம், அலங்காரம் மற்றும் சிறப்புத் தீபாரதனைகள் என விமரிசையாக நடைபெறுகின்றது. ஏராளமான பக்தர்கள் விரதமிருந்து, பெருமானை வழிபட்டு செல்கின்றனர். ஆறாம் நாள் மாலை சூரசம்ஹாரம் கோலாகலமாக நடைபெறுகின்றது. மேலும் இத்திருக்கோவிலில் முருகப்பெருமானுக்கு தைப்பூசம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை உள்ளிட்ட அனைத்துத் திருவிழாக்களும் விசேஷ பூஜைகளுடன் கொண்டாடப்படுகின்றன. சஷ்டி, கிருத்திகை முதலான திருநாட்களில் சிறப்புப் பூஜைககள் நடக்கின்றன. தமிழ், ஆங்கில வருட பிறப்பு, தீபாவளி, பொங்கல், விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, உள்ளிட்ட அனைத்து இந்து பண்டிகைகளும் விசேஷ பூஜைகளுடன் நடைபெறுகின்றன.
தல வரலாறு:
மலேசியா சிலாங்கூர் மாநிலம் சிப்பாங் மாவட்டம் டெங்கில் மயூரநாதர் கோவில் இங்குள்ள தமிழர்களால் கட்டப்பட்டு, 2002-ம் ஆண்டில் கும்பாபிஷேகம் ந்டைபெற்றது. 2000-ம் ஆண்டு வரை டெங்கில் நகர் அம்பர் தினாங் வட்டாரத்தில் திருக்கோவில்களே கிடையாது. இறைவனருளால் திருப்பரங்குன்றப் பாம்பன் சுவாமிகள் திருக்கோவில் நிறுவனர் ஸ்ரீலஸ்ரீ இராமச்சந்திர சுவாமிகள் ஆன்மீகச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மலேசியாவுக்கு வருகை தந்திருந்தார்கள். மலேசியப் பாம்பன் சுவாமிகளின் அடியார்கள் சிலர் கூடிச் சுவாமிகளை அணுகி மேற்குறிப்பிடப் பெற்ற இடத்தில் ஓர் ஆலயம் அமைப்பது குறித்து ஆலோசனை கேட்டார்கள். சுவாமிகள் அந்த இடத்துக்கு 11.12.1999 அன்று எழுந்தருளினார்கள்.
பாம்பன் சுவாமிகளின் குருவருளும், மயூர நாதப் பெருமான் திருவருளும், ஸ்ரீலஸ்ரீ இராமச்சந்திர சுவாமிகளின் நல்லாசியும் சேர்ந்த புண்ணியத்தால், 7.2.2000 அன்று மயூரநாதர் ஆலயக் கால்கோள் விழா இனிதே நடந்தேறியது. பின்னர் ஆலயத் திருப்பணிகள் 24.6.2000 அன்று தொடங்கப் பெற்றது. 20.01.2002 அன்று மயூரநாதர் ஆலய மகா கும்பாபிஷேகம் சிறப்புற நடைபெற்றது.
தல அமைப்பு:
மலேசியா சிலாங்கூர் மாநிலம் சிப்பாங் மாவட்டம் டெங்கில் மயூரநாதர் கோவில் ஆகம விதிகளின் படி கோபுரங்கள், சிற்பங்கள் என அழகுற அமைந்துள்ளன. இத்திருக்கோவில் கருவறையில் மூலவர் மயூரநாதர் வேல் ஏந்தி மயில் மீதமர்ந்து பக்தர்களுக்கு ஆற்றலுடன் அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் மயில், பலிபீடம் உள்ளன. இத்திருக்கோவிலில் விநாயகர், உற்சவர், பாம்பன் சுவாமிகள் உள்ளிட்ட அனைத்துத் தெய்வங்களும் தனி சந்நிதிகளில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, தைப்பூசம், வைகாசி விசாகம், சித்ரா பௌர்ணமி, திருக்கார்த்திகை, விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, தீபாவளி, பொங்கல், தமிழ், ஆங்கில புத்தாண்டு தினம், சஷ்டி, கிருத்திகை
பிரார்த்தனை:
மங்கல வாழ்வு அருள, மன அமைதி தர, வேண்டுவன கிடைக்க, வினைகள் போக்க, பிணிகள் அகல, குழந்தைப்பேறு உண்டாக, திருமணம் நடைபெற வேண்டி, நோய்கள் தீர, துன்பங்கள் விலக, நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்க, வியாபாரம் மேம்பட, தோஷங்கள் நீங்கிட
நேர்த்திக்கடன்:
பால்குடம், காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
திறக்கும் நேரம்:
காலை 6.30-10 மாலை 6-9.30
மன அமைதி தரும் மலேசியா சிலாங்கூர் டெங்கில் மயூரநாதர் திருவடிகள் நினைந்து பணிந்திடுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
சைவ சித்தாந்தச் சுடர்
சைவ நெறிச் செம்மல்
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
bamikumar@gmail.com
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
படம் 1 - 1696 மங்கல வாழ்வு அருளும் மலேசியா சிலாங்கூர் டெங்கில் மயூரநாதர்
Comments
Post a Comment