கோவில் 1694 - மலேசியா சிலாங்கூர் புக்கிட் பிளிம்பிங் சுப்ரமணிய சுவாமி கோவில்

 🙏🏻🙏🏻

தினம் ஒரு முருகன் ஆலயம்-1694

தோஷங்கள் நீக்கியருளும் மலேசியா சிலாங்கூர் புக்கிட் பிளிம்பிங் சுப்பிரமணிய சுவாமி கோவில்

27.01.2026 செவ்வாய்


அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்

புக்கிட் பிளிம்பிங் [Bukit Belimbing]

45000 கோலா சிலாங்கூர் [Kuala Selangor]

கோலா சிலாங்கூர் மாவட்டம் [Kuala Selangor District]

சிலாங்கூர் மாநிலம் [Selangor State]

மலேசியா [Malaysia]


இருப்பிடம்: கோலாலம்பூர் [Kuala Lumpur] 75 கிமீ, கோலா சிலாங்கூர் [Kuala Selangor] 9 கிமீ, தஞ்சோங் காராங் [Tanjung Karang] 15 கிமீ, பெஸ்தாரி ஜெயா [Bestari Jaya] 20 கிமீ, ரவாங் [Rawang] 46 கிமீ, சா ஆலாம் [Shah Alam] 67 கிமீ

மூலவர்: சுப்பிரமணிய சுவாமி

உற்சவர்: சுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானை


தல மகிமை:

மலேசியா நாட்டில் மேற்கே அமைந்துள்ள சிலாங்கூர் மாநிலம் [Selangor State] கோலா சிலாங்கூர் மாவட்டம் [Kuala Selangor District] கோலா சிலாங்கூர் [Kuala Selangor] நகருக்கு அருகில் உள்ள புக்கிட் பிளிம்பிங் [Bukit Belimbing] கிராமத்தில் தோஷங்கள் நீக்கியருளும் புக்கிட் பிளிம்பிங் சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இப்பகுதியில் புக்கிட் பிளிம்பிங் சுப்பிரமணிய சுவாமி கோவில் பிரசித்திப் பெற்ற பழமையான கோவில் ஆகும்.

இத்திருக்கோவில் கோலாலம்பூர் [Kuala Lumpur] பேருந்து நிலையத்திலிருந்து 75 கிமீ தொலைவு அல்லது கோலா சிலாங்கூர் [Kuala Selangor] பேருந்து நிலையத்திலிருந்து 9 கிமீ தொலைவு அல்லது தஞ்சோங் காராங் [Tanjung Karang] பேருந்து நிலையத்திலிருந்து 15 கிமீ தொலைவு அல்லது பெஸ்தாரி ஜெயா [Bestari Jaya] பேருந்து நிலையத்திலிருந்து 20 கிமீ தொலைவு அல்லது ரவாங் [Rawang] பேருந்து நிலையத்திலிருந்து 46 கிமீ தொலைவு அல்லது சா ஆலாம் [Shah Alam] 67 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் புக்கிட் பிளிம்பிங் சுப்பிரமணிய சுவாமி கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் சுப்பிரமணிய சுவாமி கையில் வேலேந்தி பொலிவான தோற்றத்தில் அருளாட்சி புரிகின்றார்.

மலேசியா சிலாங்கூர் மாநிலம் கோலா சிலாங்கூர் மாவட்டம் புக்கிட் பிளிம்பிங் சுப்ரமணிய சுவாமி கோவிலில் ஆண்டு தோறும் தைப்பூசத் திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்படுகின்றது. சிறப்பு பூஜைகள், சுவாமி தேவியருடன் ஜீவரத ஊர்வலம் (ரதோற்சவம்) முதலானவை விமரிசையாக நடைபெறுகின்றன. பக்தர்கள் காவடி ஏந்தி வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். கந்த சஷ்டி திருவிழா 7 நாட்கள் விமரிசையாக நடைபெறுகின்றது. ஆறாம் நாள் சூரசம்ஹாரம் சிறப்பாக நடைபெறும். 7-ம் நாள் சுப்ரமணிய சுவாமி வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் தொடர்ந்து அன்னதானம் நடைபெறுகின்றன.மேலும் இத்திருக்கோவிலில் முருகப்பெருமானுக்கு பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை உள்ளிட்ட அனைத்துத் திருவிழாக்களும் சிறப்புப் பூஜைகளுடன் கொண்டாடப்படுகின்றன. சஷ்டி, கிருத்திகை முதலான நன்னாட்களில் விசேஷ வழிபாடுகள் நடக்கின்றன. தமிழ், ஆங்கில வருட பிறப்பு, தீபாவளி, பொங்கல், விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, உள்ளிட்ட அனைத்து இந்து பண்டிகைகளும் விசேஷ பூஜைகளுடன் நடைபெறுகின்றன.


கோவில் தேர் ஒரு சுவாரஸ்யமான வரலாற்றையும் கொண்டுள்ளது. இதற்கு உரிமையாளர் ஜீவரதம் என்று பெயரிட்டார். தைப்பூச விழாவின் போது, சுப்பிரமணிய சுவாமி, வள்ளி, தெய்வானையுடன் வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்ட ஜீவரத்தில் அமர்ந்து, அருகிலுள்ள தோட்டங்களுக்குச் சென்று பக்தர்களுக்கு தெய்வீக ஆசீர்வாதங்களைப் பொழிவார்.


தல வரலாறு:

மலேசியா சிலாங்கூர் மாநிலம் கோலா சிலாங்கூர் மாவட்டம் புக்கிட் பிளிம்பிங் சுப்பிரமணிய சுவாமி கோவில் சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியா, இலங்கையிலிருந்து வந்த தமிழ் தோட்ட தொழிலாளர்களால் சிறிய ஆலயமாக கட்டப்பட்டது.


தல அமைப்பு:

மலேசியா சிலாங்கூர் மாநிலம் கோலா சிலாங்கூர் மாவட்டம் புக்கிட் பிளிம்பிங் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆகம விதிகளின் படி கட்டப்பட்டது. இத்திருக்கோவில் கருவறையில் மூலவர் சுப்பிரமணிய சுவாமி பொலிவான தோற்றத்தில் கையில வேல் ஏந்தி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் மயில், பலிபீடம் உள்ளன. விநாயகர், உற்சவர், மகா மாரியம்மன், முனியசாமி (சாஸ்தா). நவக்கிரகங்கள் உட்பட அனைத்துத் தெய்வங்களும் இத்திருக்கோவிலில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.


திருவிழா:

தைப்பூசம், கந்த சஷ்டி, பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், சித்ரா பௌர்ணமி, திருக்கார்த்திகை, விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, தீபாவளி, பொங்கல், தமிழ், ஆங்கில புத்தாண்டு தினம், சஷ்டி, கிருத்திகை


பிரார்த்தனை:

தோஷங்கள் நீக்கியருள, தெய்வீக உணர்வுகளை ஏற்படுத்த, மன அமைதி உண்டாக, திருமண பாக்கியம் வேண்டி, குழந்தை வரம் கிட்ட, குடும்ப ஒற்றுமை ஓங்க, உடல் ஆரோக்கியம் பெற, வினைகள் நீங்க, பிணிகள் அகல, துன்பங்கள் விலக, ஆனந்தம் பொங்க, கல்வி சிறக்க


நேர்த்திக்கடன்:

பால்குடம், காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்


திறக்கும் நேரம்:

காலை 6-9 மாலை 6-9


தெய்வீக உணர்வுகளை ஏற்படுத்தும் மலேசியா சிலாங்கூர் புக்கிட் பிளிம்பிங் சுப்ரமணிய சுவாமியை மனமுருகி பிரார்த்திப்போம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


முருகாலய முரசு

சைவ சித்தாந்தச் சுடர்

சைவ நெறிச் செம்மல்

Dr K. முத்துக்குமரன் Ph. D

9489302842

bamikumar@gmail.com

கோயம்புத்தூர் 25

🙏🏻🙏🏻


படம் 1 - 1694 தோஷங்கள் நீக்கியருளும் மலேசியா சிலாங்கூர் புக்கிட் பிளிம்பிங் சுப்பிரமணிய சுவாமி



படம் 2 - 1694 தெய்வீக உணர்வுகளை ஏற்படுத்தும் மலேசியா சிலாங்கூர் புக்கிட் பிளிம்பிங் சுப்பிரமணிய சுவாமி

Comments

Popular posts from this blog

கோவில் 1319 - சேலம் மல்லிகுந்தம் சின்ன பழனியாண்டவர் கோவில்

கோவில் 1326 - சேலம் K R தோப்பூர் பாலமுருகன் கோவில்

கோவில் 1341 - சேலம் பள்ளப்பட்டி பழனி பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில்