கோவில் 1668 - மலேசியா நெகிரி செம்பிலான் சிரம்பான் பழனிமலை முருகன் கோவில்

 🙏🏻🙏🏻

தினம் ஒரு முருகன் ஆலயம்-1668

சகல ஞானங்களையும் அருளும் மலேசியா நெகிரி செம்பிலான் சிரம்பான் பழனிமலை முருகன் கோவில்

01.01.2026 வியாழன்


அருள்மிகு பழனிமலை முருகன் திருக்கோவில்

284 உலூ தெமியாங் [Jalan Ulu Temiang]

70200 சிரம்பான் [Seremban]

சிரம்பான் மாவட்டம் [Seremban District]

நெகிரி செம்பிலான் மாநிலம் [Negeri Sembilan State]

மலேசியா [Malaysia]


இருப்பிடம்: கோலாலம்பூர் [Kuala Lumpur] 65 கிமீ, போர்ட் டிக்சன் [Port Dickson] 34 கிமீ, சிப்பாங் [Sepang] 34 கிமீ, கோலா பிலா [Kuala Pilah] 42 கிமீ, காஜாங் [Kajang] 42 கிமீ, புத்ராஜெயா [Putrajaya] 58 கிமீ, மலாக்கா [Malacca] 91 கிமீ


மூலவர்: பழனிமலை முருகன்

உற்சவர்: சண்முகநாதர் வள்ளி, தெய்வானை


தல மகிமை:

மலேசியா நாட்டில் நெகிரி செம்பிலான் மாநிலம் [Negeri Sembilan State] சிரம்பான் மாவட்டம் தலைநகரம் சிரம்பான் [Seremban] நகரில் சகல ஞானங்களையும் அருளும் சிரம்பான் பழனிமலை முருகன் கோவில் அமைந்துள்ளது. நெகிரி செம்பிலான் மாநிலம் [Negeri Sembilan State] தலைநகரமும் சிரம்பான் [Seremban] நகரம் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும். .

இத்திருக்கோவில் கோலாலம்பூர் [Kuala Lumpur] பேருந்து நிலையத்திலிருந்து 65 கிமீ தொலைவு அல்லது போர்ட் டிக்சன் [Port Dickson] பேருந்து நிலையத்திலிருந்து 34 கிமீ தொலைவு அல்லது சிப்பாங் [Sepang] பேருந்து நிலையத்திலிருந்து 34 கிமீ தொலைவு அல்லது கோலா பிலா [Kuala Pilah] பேருந்து நிலையத்திலிருந்து 42 கிமீ தொலைவு அல்லது காஜாங் [Kajang] பேருந்து நிலையத்திலிருந்து 42 கிமீ தொலைவு அல்லது புத்ராஜெயா [Putrajaya] பேருந்து நிலையத்திலிருந்து 58 கிமீ தொலைவு அல்லது மலாக்கா [Malacca] பேருந்து நிலையத்திலிருந்து 91 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் சிரம்பான் பழனிமலை முருகன் கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் பழனிமலை முருகன் நம் பழனி தண்டாயுதபாணி சுவாமியை போல கையில் தண்டத்துடன் திருக்காட்சி தந்து பேராற்றலுடன் அருள்புரிகின்றார்.


மலேசியா நெகிரி செம்பிலான் மாநிலம் சிரம்பான் மாவட்டம் சிரம்பான் பழனிமலை முருகன் கோவிலில் ஆவணி மாதம் வருடாபிஷேகம் விசேஷ பூஜைகளுடன் நடக்கின்றது. தைப்பூசம் மற்றும் கந்த சஷ்டி திருவிழாக்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. கந்த சஷ்டி பெருவிழாவில் 6-ம் நாள் மாலை சூரசம்ஹாரம் மற்றும் 7-ம் நாள் சண்முகநாதர் வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெறுகின்றன. மேலும் இத்திருக்கோவிலில் பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கிருத்திகை, சித்ரா பௌர்ணமி, மாசி மகம் உள்ளிட்ட முருகப்பெருமானின் அனைத்துத் திருவிழாக்களும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. சஷ்டி, கிருத்திகை, பிரதோஷம் நன்னாட்களில் விசேஷ வழிபாடுகள் நடக்கின்றன. தமிழ், ஆங்கில வருட பிறப்பு, தீபாவளி, பொங்கல், விநாயகர் சதுர்த்தி, மகா சிவராத்திரி, நவராத்திரி உள்ளிட்ட அனைத்து இந்து பண்டிகைகளும் சிறப்புப் பூஜைகளுடன் நடைபெறுகின்றன.


தல வரலாறு:

மலேசியா நெகிரி செம்பிலான் மாநிலம் சிரம்பான் மாவட்டம் சிரம்பான் பழனிமலை முருகன் கோவிலை தமிழ்நாட்டில் இருந்து இங்கு வந்த சைவப் பெரியவர் சதாய் டி/ஓ ராமசாமி என்ற மாபெரும் முருக பக்தர் நிறுவினார். இவரது பக்தியை மெச்சி இப்பகுதி பக்தர்கள் இவரை 'சாமி அம்மா’ என்று அழைக்க ஆரம்பித்தனர். இக்கோவிலும் 'சாமி அம்மா முருகன் கோயில்' என்று பிரபலமாக அறியப்படுகிறது,


இக்கோவில் இடம் இவருடைய பெயருக்கு 1956-ல் மாற்றப்பட்டது. பல பக்தர்களின் உதவியுடன், 1957 ஆம் ஆண்டு RM 15,000.00 செலவில் கருவறை மற்றும் ஒரு மர மண்டபம் கட்டப்பட்டன. 18.06.1964-ல் சிவானந்த ஆசிரமம் தலைவர் ஸ்ரீ சித்தானந்த சரஸ்வதி சுவாமிகளால் திறக்கப்பட்டது. மேலும் திருக்கோவில் பணம் சேர, சேர கட்டப்பட்டது. 'சாமி அம்மா’ வயோதிகம் காரணமாக இத்திருக்கோவிலை பரமாரிக்க 1985-ல் அறங்காவலர் குழுவை நியமித்தார். கோவில் தரவுகள் படி 31.08.2014-ல் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. சிரம்பான் பழனிமலை முருகன் கோவில் சிரம்பான் நகரில் மிகவும் பிரசித்திப் பெற்றக் கோவிலாக திகழ்கின்றது.

.

தல அமைப்பு:

மலேசியா நெகிரி செம்பிலான் மாநிலம் சிரம்பான் மாவட்டம் சிரம்பான் பழனிமலை முருகன் கோவில் செல்ல அழகிய படிக்கட்டுகள் உள்ளன. பழனிமலை முருகன் கோவில் கோபுரங்களும், சிற்பங்களும் சிறப்புற அமைந்துள்ளது. இத்திருக்கோவில் கருவறையில் மூலவர் பழனிமலை முருகன் கையில் தண்டத்துடன் பழனி பெருமானை போலவே நின்ற திருக்கோலத்தில் திருக்காட்சி தந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். இத்திருக்கோவில் மூலவர் பழனிமலை முருகன் ஆண்டி கோலம் மற்றும் ராஜ கோலத்தில் திருக்காட்சி தந்து அருளுவது சிறப்பம்சமாகும். கருவறைக்கு எதிரில் மயில், பலிபீடம் உள்ளன. மேலும் விநாயகர், உற்சவர் வள்ளி, தெய்வானை சமேத சண்முகநாதர், சிவபெருமான், இடும்பன், நவக்கிரகங்கள் உள்ளிட்ட உள்ளிட்ட அனைத்துத் தெய்வங்களும் இத்திருக்கோவிலில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.


திருவிழா:

தைப்பூசம், கந்த சஷ்டி, பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, சித்ரா பௌர்ணமி, மாசி மகம், விநாயகர் சதுர்த்தி, மகா சிவராத்திரி, நவராத்திரி, தீபாவளி, பொங்கல், தமிழ், ஆங்கில புத்தாண்டு தினம், சஷ்டி, கிருத்திகை


பிரார்த்தனை:

சகல ஞானங்களை அருள, ஐஸ்வர்யங்கள் பெருக, கேட்டது பெற்றிட, வினைகள் விலக, பிணிகள் போக்க, திருமணம் நடைபெற, குழந்தை பாக்கியம் வேண்டி, நோய்கள் குணமாக, நல்லன நடைபெற, நேர்மறை எண்ணங்கள் உண்டாக்க, கவலைகள் தீர, தோஷங்கள் அகல


நேர்த்திக்கடன்:

பால்குடம், காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்


திறக்கும் நேரம்:

காலை 6-9 மாலை 6-9


ஐஸ்வர்யங்கள் பெருக அருளும் மலேசியா நெகிரி செம்பிலான் சிரம்பான் பழனிமலை முருகன் திருவடிகள் பணிந்து தொழுவோம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


முருகாலய முரசு

சைவ சித்தாந்தச் சுடர்

சைவ நெறிச் செம்மல்

Dr K. முத்துக்குமரன் Ph. D

9489302842

bamikumar@gmail.com

கோயம்புத்தூர் 25

🙏🏻🙏🏻


படம் 1 - 1668 சகல ஞானங்களையும் அருளும் மலேசியா நெகிரி செம்பிலான் சிரம்பான் பழனிமலை முருகன்


படம் 2 - 1668 ஐஸ்வர்யங்கள் பெருக அருளும் மலேசியா நெகிரி செம்பிலான் சிரம்பான் பழனிமலை முருகன்

Comments

Popular posts from this blog

கோவில் 1319 - சேலம் மல்லிகுந்தம் சின்ன பழனியாண்டவர் கோவில்

கோவில் 1326 - சேலம் K R தோப்பூர் பாலமுருகன் கோவில்

கோவில் 1341 - சேலம் பள்ளப்பட்டி பழனி பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில்