கோவில் 1665 - மலேசியா பினாங்கு செபெராங் ஜெயா பாலமுருகன் கோவில்

 🙏🏻🙏🏻

தினம் ஒரு முருகன் ஆலயம்-1665

நேர்மறை அதிர்வுகளை உண்டாக்கும் மலேசியா பினாங்கு செபெராங் ஜெயா பாலமுருகன் கோவில்

29.12.2025 திங்கள்


அருள்மிகு பாலமுருகன் திருக்கோவில்

9, Lorong Jelawat

13700 செபெராங் ஜெயா [Seberang Jaya]

மத்திய செபராங் பிறை மாவட்டம் [Central Seberang Perai District]

பினாங்கு மாநிலம் [Penang State]

மலேசியா [Malaysia]


இருப்பிடம்: கோலாலம்பூர் [Kuala Lumpur] 344 கிமீ, பிறை [Perai] 5 கிமீ, பட்டர்வொர்த் [Butterworth] 8 கிமீ, சிம்பாங் அம்பாட் [Simpang Ampat] 24 கிமீ, பினாங்கு/ஜார்ஜ் டவுண் [Penang] 26 கிமீ, பத்து கவான் [Batu Kawan] 28 கிமீ, வால்டோர் [Val d'Or] 29 கிமீ, சுங்கை ஜாவி [Sungai Jawi] 35 கிமீ


மூலவர்: பாலமுருகன்

உற்சவர்: முருகன் வள்ளி, தெய்வானை

தோற்றம்: 1968

கும்பாபிஷேகம்: 09.02.2025


தல மகிமை:

மலேசியா நாட்டில் பினாங்கு மாநிலம் மத்திய செபராங் பிறை மாவட்டத்தில் உள்ள செபெராங் ஜெயா [Nibong Tebal] நகரில் மன மகிழ்ச்சி தந்தருளும் செபெராங் ஜெயா பாலமுருகன் கோவில் அமைந்துள்ளது.

இத்திருக்கோவில் கோலாலம்பூர் [Kuala Lumpur] பேருந்து நிலையத்திலிருந்து 344 கிமீ தொலைவு அல்லது பிறை [Perai] பேருந்து நிலையத்திலிருந்து 5 கிமீ தொலைவு அல்லது பட்டர்வொர்த் [Butterworth] பேருந்து நிலையத்திலிருந்து 8 கிமீ தொலைவு அல்லது சிம்பாங் அம்பாட் [Simpang Ampat] பேருந்து நிலையத்திலிருந்து 24 கிமீ தொலைவு அல்லது பினாங்கு//ஜார்ஜ் டவுண் [Penang] பேருந்து நிலையத்திலிருந்து 26 கிமீ தொலைவு அல்லது பத்து கவான் [Batu Kawan] பேருந்து நிலையத்திலிருந்து 28 கிமீ தொலைவு அல்லது வால்டோர் [Val d'Or] பேருந்து நிலையத்திலிருந்து 29 கிமீ தொலைவு அல்லது சுங்கை ஜாவி [Sungai Jawi] பேருந்து நிலையத்திலிருந்து 35 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் செபெராங் ஜெயா பாலமுருகன் கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் பாலமுருகன் மயில் மீதமர்ந்து இளையோனாக அருளாட்சி செய்கின்றார்.


மலேசியா பினாங்கு மாநிலம் மத்திய செபராங் பிறை மாவட்டம் செபெராங் ஜெயாபால முருகன் கோவிலில் ஒவ்வொரு வருடமும் தைப்பூசத் திருவிழா மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றது. சித்ரா பௌர்ணமி 11 நாட்கள் சிறப்புடன் நடைபெறுகின்றது. பக்தர்கள் பால்குடம், காவடி ஏந்தி தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றுகின்றனர். கந்த சஷ்டி பெருவிழா 6 நாட்களும் அபிஷேகம், அலங்காரம் மற்றும் சிறப்புப் பூஜைகளுடன் விமரிசையாக நடைபெறுகின்றன. 6-ம் நாள் மாலை சூரசம்ஹார நிகழ்வு சிறப்பாக நடைபெறும். மறு நாள் சுவாமிக்கு திருக்கல்யாணம் விமரிசையாக நடக்கின்றது. மேலும் முருகப்பெருமானின் பங்குனி உத்திரம், மற்றும வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, மாசி மகம் உள்ளிட்ட எல்லா திருவிழாக்களும் இத்திருக்கோவிலில் சிறப்புடன் கொண்டாடப்படுகின்றன. சஷ்டி, கிருத்திகை திருநாட்களில் விசேஷ பூஜைகள் நடைபெறுகின்றன. தமிழ், ஆங்கில வருட பிறப்பு, தீபாவளி, பொங்கல், விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி உள்ளிட்ட அனைத்து இந்து பண்டிகைகளும் சிறப்பு வழிபாடுகளுடன் நடைபெறுகின்றன. ஒவ்வொரு பௌர்ணமி பூஜைக்கும் மாதா மாதம் சிறப்பாக பாலமுருகனுக்கு அபிஷேக, ஆராதனை, அன்னதானம் நடைபெறும்.

தல வரலாறு:

மலேசியா பினாங்கு மாநிலம் மத்திய செபராங் பிறை மாவட்டம் செபெராங் ஜெயாபால முருகன் கோவில் 1964-ல் இப்பகுதி வாழ் தமிழர்களால் கட்டப்பட்ட முருகன் கோவிலாகும். பாலமுருகன் ஆலயம் படிப்படியாக வளர்ச்சி கண்டது. 1977 மற்றும் 1986-ம் ஆண்டுகளில் ஆலயம் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. 2025-ல் கோவில் திருப்பணி வேலைகள் முடிவடைந்து 09.02.2025 அன்று திருக்கோவில் கும்பாபிஷேகம் சிறபாக நடைபெற்றது.


தல அமைப்பு:

மலேசியா பினாங்கு மாநிலம் மத்திய செபராங் பிறை மாவட்டம் செபெராங் ஜெயா பாலமுருகன் கோவில் தமிழக கோவில்களை போலவே ஆகம விதிகளின் படி கட்டப்பட்டுள்ளது. இத்திருக்கோவில் கருவறையில் மூலவர் பாலமுருகன் மயில் மீதமர்நத படி அழகு பாலகனாக வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் வேல், மயில், பலிபீடம் உள்ளன. மேலும் செல்வ கணபதி, உற்சவர், பாம்பு தேவி, துணைவியர்களுடன் சனீஸ்வரர், நவக்கிரகங்கள் உள்ளிட்ட எல்லாத் தெய்வங்களும் இத்திருக்கோவிலில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.


திருவிழா:

தைப்பூசம், சித்ரா பௌர்ணமி, கந்த சஷ்டி, திருக்கார்த்திகை, பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, தீபாவளி, பொங்கல், தமிழ், ஆங்கில புத்தாண்டு தினம், சஷ்டி, கிருத்திகை


பிரார்த்தனை:

நேர்மறை அதிர்வுகள் உண்டாக, வாழ்வில் திருப்பங்கள் தர, வேண்டுவன கிடைக்க, இரு வினைகள் போக்க, பிணிகள் தீர, குழந்தை பாக்கியம் கிட்ட, உடல் ஆரோக்கியம் வேண்டி, நல்லன அருள, கஷ்டங்கள் விலக, கல்வி, ஞானம் மேம்பட, தோஷங்கள் மறைய


நேர்த்திக்கடன்:

பால்குடம், காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்


வாழ்வில் திருப்பங்கள் தரும் மலேசியா பினாங்கு செபெராங் ஜெயா பாலமுருகன் திருத்தாள் பணிந்திடுவோம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


முருகாலய முரசு

சைவ சித்தாந்தச் சுடர்

சைவ நெறிச் செம்மல்

Dr K. முத்துக்குமரன் Ph. D

9489302842

bamikumar@gmail.com

கோயம்புத்தூர் 25

🙏🏻🙏🏻


படம் 1 - 1665 நேர்மறை அதிர்வுகளை உண்டாக்கும் மலேசியா பினாங்கு செபெராங் ஜெயா பாலமுருகன்



படம் 2 - 1665 வாழ்வில் திருப்பங்கள் தரும் மலேசியா பினாங்கு செபெராங் ஜெயா பாலமுருகன்

Comments

Popular posts from this blog

கோவில் 1319 - சேலம் மல்லிகுந்தம் சின்ன பழனியாண்டவர் கோவில்

கோவில் 1326 - சேலம் K R தோப்பூர் பாலமுருகன் கோவில்

கோவில் 1341 - சேலம் பள்ளப்பட்டி பழனி பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில்