கோவில் 1663 - மலேசியா பினாங்கு புக்கித் மெர்த்தாஜாம் தண்டாயுதபாணி கோவில்

 🙏🏻🙏🏻

தினம் ஒரு முருகன் ஆலயம்-1663

சங்கடங்கள் தீர்க்கும் மலேசியா பினாங்கு புக்கித் மெர்த்தாஜாம் தண்டாயுதபாணி கோவில்

27.12.2025 சனி


அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவில்

[அ/மி சுங்குரும்பை நகரத்தார் தண்டாயுதபாணி திருக்கோவில்]

[அ/மி Sungurambai Nagarathar Thendayuthapani Temple]

Jalan Datok Ooh Chooi Cheng

14000 புக்கித் மெர்த்தாஜாம் [Bukit Mertajam]

மத்திய செபராங் பிறை மாவட்டம் [Central Seberang Perai District]

பினாங்கு மாநிலம் [Penang State]

மலேசியா [Malaysia]


இருப்பிடம்: கோலாலம்பூர் [Kuala Lumpur] 337 கிமீ, பிறை [Perai] 8 கிமீ, சிம்பாங் அம்பாட் [Simpang Ampat] 13 கிமீ, பினாங்கு/ஜார்ஜ் டவுண் [Penang] 17 கிமீ, வால்டோர் [Val d'Or] 21 கிமீ, பட்டர்வொர்த் [Butterworth] 21 கிமீ, சுங்கை ஜாவி [Sungai Jawi] 28 கிமீ,


மூலவர்: தண்டாயுதபாணி

உற்சவர்: தண்டாயுதபாணி & முருகன் வள்ளி, தெய்வானை

தோற்றம்: 1897


தல மகிமை:

மலேசியா நாட்டில் பினாங்கு மாநிலம் மத்திய செபராங் பிறை மாவட்டத்தில் உள்ள புக்கித் மெர்த்தாஜாம் [Bukit Mertajam] நகரில் சங்கடங்கள் தீர்க்கும் புக்கித் மெர்த்தாஜாம் தண்டாயுதபாணி கோவில் அமைந்துள்ளது. இத்திருக்கோவில் நகரத்தார் சமூகத்தினரால் 1894-ல் தோற்றுவிக்கப்பட்டது. எனவே இத்திருக்கோவில் அ/மி சுங்குரும்பை நகரத்தார்/நாட்டுக்கோட்டை செட்டியார் தண்டாயுதபாணி திருக்கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. மேலும் இக்கோவிலுக்கு அருகில் மிகவும் பிரசித்திப் பெற்ற மகா மங்கலநாயகி அம்மன் கோவில் அமைந்திருப்பது கூடுதல் சிறப்பம்சமாகும்.

இத்திருக்கோவில் கோலாலம்பூர் [Kuala Lumpur] பேருந்து நிலையத்திலிருந்து 337 கிமீ தொலைவு அல்லது பிறை [Perai] பேருந்து நிலையத்திலிருந்து 8 கிமீ தொலைவு அல்லது சிம்பாங் அம்பாட் [Simpang Ampat] பேருந்து நிலையத்திலிருந்து 13 கிமீ தொலைவு அல்லது பினாங்கு//ஜார்ஜ் டவுண் [Penang] பேருந்து நிலையத்திலிருந்து 17 கிமீ தொலைவு அல்லது வால்டோர் [Val d'Or] பேருந்து நிலையத்திலிருந்து 20 கிமீ தொலைவு அல்லது பட்டர்வொர்த் [Butterworth] பேருந்து நிலையத்திலிருந்து 21 கிமீ தொலைவு சுங்கை ஜாவி [Sungai Jawi] அல்லது பேருந்து நிலையத்திலிருந்து 28 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் புக்கித் மெர்த்தாஜாம் தண்டாயுதபாணி கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் தண்டாயுதபாணி கையில் தண்டம் கொண்டு நின்ற திருக்கோலத்தில் திருக்காட்சி அருள்கின்றார்.


மலேசியா பினாங்கு மாநிலம் மத்திய செபராங் பிறை மாவட்டம் புக்கித் மெர்த்தாஜாம் தண்டாயுதபாணி கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி உத்திரத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுகின்றது. பங்குனி உத்திரத் திருநாளன்று தண்டாயுதபாணி சுவாமிக்கு நடைபெறும் அலங்காரம், அபிஷேகம், சிறப்பு தீபாராதனைகள் மிகவும் சிறப்பாக நடைபெறுகின்றன. மேலும் 128 ஆண்டுகளாக, ஆண்டு தோறும் நடைபெறும் தைப்பூசத் திருவிழா மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகின்றது. தைப்பூசத்தன்று நடைபெறும் தேரோட்டம் இந்நிகழ்வின் சிறப்பம்சமாகும். கந்த சஷ்டி திருவிழா 7 நாட்கள் விமரிசையாக நடைபெறுகிறது. முதல் 6 நாட்கள் தண்டாயுதபாணி சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு தீபாராதனைகளுடன் மிகவும் விமரிசையாக நடைபெறுகின்றது. 6-ம் நாள் மாலை சூரசம்ஹாரம் நிகழ்வு சிறப்பாக நடைபெறும். 7-ம் நாள் காலை நடைபெறும் சுவாமி திருக்கல்யாணம் ஏராளமான பக்தர்களுடன் சிறப்பாக நடைபெறு, அன்னதானம் நடைபெறும். மேலும் முருகப்பெருமானின் வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, சித்ரா பௌர்ணமி, மாசி மகம் உள்ளிட்ட எல்லா திருவிழாக்களும் இத்திருக்கோவிலில் சிறப்புடன் கொண்டாடப்படுகின்றன. சஷ்டி, கிருத்திகை திருநாட்களில் விசேஷ பூஜைகள் நடைபெறுகின்றன. தமிழ், ஆங்கில வருட பிறப்பு, தீபாவளி, பொங்கல், விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி உள்ளிட்ட அனைத்து இந்து பண்டிகைகளும் சிறப்பு வழிபாடுகளுடன் நடைபெறுகின்றன.

தல வரலாறு:

தமிழகத்திலிருந்து வாணிபம் செய்ய மலேசியா நாடு வந்த நகரத்தார்கள் சமூகத்தினர் இப்பகுதிலும் குடியேறினர். சிறந்த முருக பக்தர்களான நாட்டுக்கோட்டை செட்டியார்கள் மலேசியா பினாங்கு மாநிலம் மத்திய செபராங் பிறை மாவட்டம் புக்கித் மெர்த்தாஜாம் நகரில் தண்டாயுதபாணி கோவிலை 1897-ல் நிறுவினார்கள். இவ்வாலயத்தில் எழுந்தருளி இருக்கும் கந்தனுக்கு பங்குனி உத்தரத்தில் விழா நடத்துவார்கள். அப்போது ஏராளமான அன்பர்கள் வந்து தரிசித்துப் பலன் பெறுவர். அவர்களுக்கு நகரத்தார் அன்னதானம் இடுவார்கள். தற்போதும் இக்கோவில் நிர்வாகத்தை நகரத்தார் சமூகத்தினர் சிறப்பாக நிர்வகித்து வருகின்றனர்.


தல அமைப்பு:

மலேசியா பினாங்கு மாநிலம் மத்திய செபராங் பிறை மாவட்டம் புக்கித் மெர்த்தாஜாம் தண்டாயுதபாணி கோவிலில் அழகிய கோபுரங்கள் மற்றும் சிற்பங்கள் உள்ளன. கோவிலினுள் கொடிமரம் உள்ளது. இத்திருக்கோவில் கருவறையில் மூலவர் தண்டாயுதபாணி வலது திருக்கரத்தில் தண்டமும், இடது திருக்கரத்தை இடுப்பில் வைத்தும் நின்ற திருக்கோலத்தில் திருக்காட்சியருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் வேல், மயில், பலிபீடம் உள்ளன. மேலும் இத்திருக்கோவிலில் விநாயகர், உற்சவர்கள், கோஷ்ட தெய்வங்கள், மாரியம்மன், சிவபெருமான், இடும்பன், நவக்கிரகங்கள் உள்ளிட்ட அனைத்து பரிவார மூர்த்திகளும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.


திருவிழா:

பங்குனி உத்திரம், தைப்பூசம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, சித்ரா பௌர்ணமி, மாசி மகம், நவராத்திரி, விநாயகர் சதுர்த்தி, தீபாவளி, பொங்கல், தமிழ், ஆங்கில புத்தாண்டு தினம், பிரதோஷம், சஷ்டி, கிருத்திகை


பிரார்த்தனை:

சங்கடங்கள் தீர, மன அமைதி பெற, நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்க, நினைத்தது நடைபெற, வினைகள் விலக, பிணிகள் போக்க, குழந்தைப்பேறு வேண்டி, குடும்ப வாழ்வு சிறக்க, நோய்கள் குணமாக, வியாபாரம், செல்வம் பெருக, தொழில் விருத்தியடைய, மன மகிழ்ச்சி கிடைக்க, நல்லன உண்டாக, தோஷங்கள் அகல

நேர்த்திக்கடன்:

பால்குடம், காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்


திறக்கும் நேரம்:

காலை 7-12 மாலை 7-9


மன அமைதி தரும் மலேசியா பினாங்கு புக்கித் மெர்த்தாஜாம் தண்டாயுதபாணியை மனமுருகி பிரார்த்திப்போம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


முருகாலய முரசு

சைவ சித்தாந்தச் சுடர்

சைவ நெறிச் செம்மல்

Dr K. முத்துக்குமரன் Ph. D

9489302842

bamikumar@gmail.com

கோயம்புத்தூர் 25

🙏🏻🙏🏻


படம் 1 - 1663 சங்கடங்கள் தீர்க்கும் மலேசியா பினாங்கு புக்கித் மெர்த்தாஜாம் தண்டாயுதபாணி


படம் 2 - 1663 மன அமைதி தரும் மலேசியா பினாங்கு புக்கித் மெர்த்தாஜாம் தண்டாயுதபாணி

Comments

Popular posts from this blog

கோவில் 1319 - சேலம் மல்லிகுந்தம் சின்ன பழனியாண்டவர் கோவில்

கோவில் 1326 - சேலம் K R தோப்பூர் பாலமுருகன் கோவில்

கோவில் 1341 - சேலம் பள்ளப்பட்டி பழனி பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில்