கோவில் 1662 - மலேசியா பினாங்கு பத்து கவான் பாலதண்டாயுதபாணி கோவில்

 🙏🏻🙏🏻

தினம் ஒரு முருகன் ஆலயம்-1662

சகல ஐஸ்வர்யங்களையும் அருளும் மலேசியா பினாங்கு பத்து கவான் பாலதண்டாயுதபாணி கோவில்

26.12.2025 வெள்ளி


அருள்மிகு பாலதண்டாயுதபாணி திருக்கோவில்

[அ/மி கங்கமலை பாலதண்டாயுதபாணி திருக்கோவில்]

14100 பத்து கவான் [Batu Kawan]

Simpang Ampat (அருகில்)

தென் செபராங் பிறை மாவட்டம் [South Seberang Perai District]

பினாங்கு மாநிலம் [Penang State]

மலேசியா [Malaysia]


இருப்பிடம்: கோலாலம்பூர் [Kuala Lumpur] 330 கிமீ, பினாங்கு/ஜார்ஜ் டவுண் [Penang] 11 கிமீ, வால்டோர் [Val d'Or] 14 கிமீ, சுங்கை ஜாவி [Sungai Jawi] 21 கிமீ, பட்டர்வொர்த் [Butterworth] 32 கிமீ


மூலவர்: பாலதண்டாயுதபாணி

உற்சவர்: பாலதண்டாயுதபாணி & முருகன் வள்ளி, தெய்வானை

கும்பாபிஷேகம்: 19.02.2016


தல மகிமை:

மலேசியா நாட்டில் பினாங்கு மாநிலம் தென் செபராங் பிறை மாவட்டத்தில் உள்ள பத்து கவான் [Batu Kawan] நகரில் சகல ஐஸ்வர்யங்களையும் அருளும் பத்து கவான் பாலதண்டாயுதபாணி கோவில் அமைந்துள்ளது. இத்திருக்கோவில் புதுப்பிக்கப்பட்டு 2016-ல் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இத்திருக்கோவில் கோலாலம்பூர் [Kuala Lumpur] பேருந்து நிலையத்திலிருந்து 330 கிமீ தொலைவு அல்லது பினாங்கு//ஜார்ஜ் டவுண் [Penang] பேருந்து நிலையத்திலிருந்து 11 கிமீ தொலைவு அல்லது வால்டோர் [Val d'Or] பேருந்து நிலையத்திலிருந்து 14 கிமீ தொலைவு அல்லது சுங்கை ஜாவி [Sungai Jawi] பேருந்து நிலையத்திலிருந்து 21 கிமீ தொலைவு அல்லது பட்டர்வொர்த் [Butterworth] பேருந்து நிலையத்திலிருந்து 32 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் பத்து கவான் பாலதண்டாயுதபாணி கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் பாலதண்டாயுதபாணி தண்டம் ஏந்தி நின்ற திருக்கோலத்தில் அருளாட்சி புரிகின்றார்.


மலேசியா பினாங்கு மாநிலம் தென் செபராங் பிறை மாவட்டம் பத்து கவான் பாலதண்டாயுதபாணி கோவிலில் ஒவ்வொரு வருடமும் பங்குனி உத்திரம் முக்கிய திருவிழாவாக மிக சிறப்புடன் நடைபெறுகின்றது தைப்பூத் திருவிழா சிறப்புப் பூஜைகளுடன் நடகின்றது. கந்த சஷ்டி திருவிழா 7 நாட்கள் விமரிசையாக நடைபெறுகிறது. முதல் 6 நாட்கள் பாலதண்டாயுதபாணி சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு தீபாராதனைகளுடன் மிகவும் விமரிசையாக நடைபெறுகின்றது. சூரசம்ஹாரம் மற்றும் திருக்கல்யாணம் முக்கிய நிகழ்வுகளாகும். மேலும் முருகப்பெருமானின் வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, சித்ரா பௌர்ணமி, மாசி மகம் உள்ளிட்ட எல்லா திருவிழாக்களும் இத்திருக்கோவிலில் சிறப்புடன் கொண்டாடப்படுகின்றன. சஷ்டி, கிருத்திகை திருநாட்களில் விசேஷ பூஜைகள் நடைபெறுகின்றன. தமிழ், ஆங்கில வருட பிறப்பு, தீபாவளி, பொங்கல், விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி உள்ளிட்ட அனைத்து இந்து பண்டிகைகளும் சிறப்பு வழிபாடுகளுடன் நடைபெறுகின்றன.

தல வரலாறு:

மலேசியா பினாங்கு மாநிலம் தென் செபராங் பிறை மாவட்டம் பத்து கவான் பாலதண்டாயுதபாணி கோவில் பிரிட்டிஷ் கால கட்டத்தில் தமிழகத்தில் இருந்து குடி பெயர்ந்த தோட்டத் தொழிலாளர்களால் ஒரு சிறிய குடிலாக அமைக்கப்பட்டு, வேல் வழிபாட்டுத் தலமாக இருந்து வந்தது. இந்த இடம் பத்து கவான் மலை மேடுகளின் 'கங்கமலை' என்று அழைக்கப்பட்டுவந்த மலையில் மீது அமைந்துள்ளது. இவ்வாலயத்தில் 200 ஆண்டுகளுக்கும் முன்னர் வேல் வடிவிலான தாமரைக் குளம் சரவணப்பொய்கை அமைந்துள்ளது என்கிறது வரலாறு.


இவ்வாலயத்தில் 35 அடி உயரம் கொண்ட முருகன் சிலை வடிவில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றார், 75 அடி உயரம் கொண்ட வேல் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. பத்து கவான் பாலதண்டாயுதபாணி திருக்கோவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கும்பாபிஷேகம் 19.2.2016 அன்று நடைபெற்றது.


தல அமைப்பு:

மலேசியா பினாங்கு மாநிலம் தென் செபராங் பிறை மாவட்டம் பத்து கவான் பாலதண்டாயுதபாணி கோவில் அழகிய கோபுரங்களுடன் அமைந்துள்ளது. கோவிலில் 35 அடி உயரம் கொண்ட முருகன் சிலை வடிவில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றார். உடன் 75 அடி உயரம் கொண்ட வேல் ஒன்றும் உள்ளது இத்திருக்கோவிலின் சிறப்பம்சமாகும். கோவிலில் அழகிய சுதை சிற்பங்கள், ஓவியங்கள் மற்றும் கொடிமரம் உள்ளன. இத்திருக்கோவில் கருவறையில் மூலவர் பாலதண்டாயுதபாணி கையில் தண்டம் ஏந்தி நின்ற திருக்கோலத்தில் திருக்காட்சி தந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் மயில், பலிபீடம் உள்ளன. மேலும் இத்திருக்கோவிலில் விநாயகர், உற்சவர்கள், மாரியம்மன், இடும்பன், நவக்கிரகங்கள் உள்ளிட்ட எல்லா தெய்வங்களும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.


திருவிழா:

பங்குனி உத்திரம், தைப்பூசம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, சித்ரா பௌர்ணமி, மாசி மகம், நவராத்திரி, விநாயகர் சதுர்த்தி, தீபாவளி, பொங்கல், தமிழ், ஆங்கில புத்தாண்டு தினம், பிரதோஷம், சஷ்டி, கிருத்திகை


பிரார்த்தனை:

சகல ஐஸ்வர்யங்களையும் அருள, வாழ்வில் ஏற்றங்கள் ஏற்பட, வினைகள் போக்க, பிணிகள் விலக, குழந்தை வரம் வேண்டி, கல்வி, ஞானம் மேம்பட, நோய்கள் தீர, மன தைரியம் கிட்ட, விருப்பங்கள் நிறைவேற,, நல்லன நடக்க, இடர்கள் களைய, தோஷங்கள் அகல

நேர்த்திக்கடன்:

பால்குடம், காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்


திறக்கும் நேரம்:

காலை 7-12 மாலை 7-9


வாழ்வில் ஏற்றங்கள் ஏற்பட அருளும் மலேசியா பினாங்கு பத்து காவான் பாலதண்டாயுதபாணி போற்றி வணங்குவோம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


முருகாலய முரசு

சைவ சித்தாந்தச் சுடர்

சைவ நெறிச் செம்மல்

Dr K. முத்துக்குமரன் Ph. D

9489302842

bamikumar@gmail.com

கோயம்புத்தூர் 25

🙏🏻🙏🏻


படம் 1 - 1662 சகல ஐஸ்வர்யங்களையும் அருளும் மலேசியா பினாங்கு பத்து கவான் பாலதண்டாயுதபாணி


படம் 2 - 1662 வாழ்வில் ஏற்றங்கள் ஏற்பட அருளும் மலேசியா பினாங்கு பத்து காவான் பாலதண்டாயுதபாணி கோவில் உற்சவர் முருகப்பெருமான் தேவியருடன்

Comments

Popular posts from this blog

கோவில் 1319 - சேலம் மல்லிகுந்தம் சின்ன பழனியாண்டவர் கோவில்

கோவில் 1326 - சேலம் K R தோப்பூர் பாலமுருகன் கோவில்

கோவில் 1341 - சேலம் பள்ளப்பட்டி பழனி பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில்