கோவில் 1482 - சென்னை வில்லிவாக்கம் சிட்கோ நகர் சுப்பிரமணிய சுவாமி கோவில்

 🙏🏻🙏🏻

தினம் ஒரு முருகன் ஆலயம்-1482

நல்லன அருளும் சென்னை வில்லிவாக்கம் சிட்கோ நகர் சுப்பிரமணிய சுவாமி கோவில்

29.06.202 ஞாயிறு


அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்

834, 3-வது மெயின் ரோடு

சிட்கோ நகர் (SIDCO Nagar)

வில்லிவாக்கம்

சென்னை 600049


இருப்பிடம்: சென்னை சென்ட்ரல் 11 கிமீ, சென்னை கிளாம்பாக்கம் பே. நி 38 கிமீ, பெரம்பூர் 4 கிமீ, கோயம்பேடு 7 கிமீ, சென்னை எழும்பூர் 10 கிமீ, தி. நகர் 11 கிமீ


மூலவர்: சுப்பிரமணிய சுவாமி

தேவியர்: வள்ளி, தெய்வானை

உற்சவர்: சுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானை


தல மகிமை:

சென்னை மாநகரம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து 11 கிமீ தொலைவில் உள்ள வில்லிவாக்கம் சிட்கோ நகரில் நல்லன அருளும் சென்னை வில்லிவாக்கம் சிட்கோ நகர் சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. மேலும் சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து 38 கிமீ தொலைவு அல்லது சென்னை பெரம்பூர் பேருந்து நிலையத்திலிருந்து 4 கிமீ தொலைவு அல்லது கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து 7 கிமீ தொலைவு அல்லது சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து 10 கிமீ தொலைவு அல்லது தி. நகர் பேருந்து நிலையத்திலிருந்து 11 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் சென்னை வில்லிவாக்கம் சிட்கோ நகர் சுப்பிரமணிய சுவாமி கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் சுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானையுடன் அருள்பாலிக்கின்றார்.


சென்னை வில்லிவாக்கம் சிட்கோ நகர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வருடந்தோறும் தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி திருவிழாக்கள் முக்கிய திருவிழாக்களாகக் கொண்டாடப்படுகின்றன. மேலும் முருகப்பெருமானின் வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, ஆடிக்கிருத்திகை உள்ளிட்ட அனைத்துத் திருவிழாக்களும் சிறப்பாகக் நடைபெறுகின்றன. சஷ்டி, கிருத்திகை திருநாட்களில் விசேஷ வழிபாடுகள் நடக்கின்றன.


தல வரலாறு:

சென்னை வில்லிவாக்கம் வாழ் புரவலர்கள் மற்றும் முருக பக்தர்கள் பொருளுதவியுடன் சிட்கோ நகரில் சுப்பிரமணிய சுவாமி கோவில் நிறுவப்பட்டுள்ளது.


தல அமைப்பு:

சென்னை வில்லிவாக்கம் சிட்கோ நகர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கருவறையில் மூலவர் சுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானையுடன் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் கொடிமரம், மயில், பலிபீடம் உள்ளன. மேலும் விநாயகர், தட்சிணாமூர்த்தி, விஷ்ணு, துர்க்கை, சிவபெருமான், அம்பாள், நவக்கிரகங்கள் உள்ளிட்ட அனைத்து பரிவார மூர்த்திகளும் இக்கோவிலில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.


திருவிழா:

தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, சஷ்டி, கிருத்திகை


பிரார்த்தனை:

நல்லன அருள, நினைத்தது நடைபெற, திருமணத்தடை நீங்க, சந்தான பாக்கியம் வேண்டி, சகல பிணிகள் விலக, மன மகிழ்ச்சி உண்டாக, தொல்லைகள் விலக, தோஷங்கள் அகல


நேர்த்திக்கடன்:

அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்


திறக்கும் நேரம்:

காலை 6-10 மாலை 5-8


நினைத்ததை நிறைவேற்றும் சென்னை வில்லிவாக்கம் சிட்கோ நகர் சுப்பிரமணிய சுவாமி திருவடிகளை பணிந்து தொழுவோம்!

வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


முருகாலய முரசு

Dr K. முத்துக்குமரன் Ph. D

9489302842

bamikumar@gmail.com

கோயம்புத்தூர் 25

🙏🏻🙏🏻


படம் 1 - 1482 நல்லன அருளும் சென்னை வில்லிவாக்கம் சிட்கோ நகர் சுப்பிரமணிய சுவாமி கோவில்


படம் 2 - 1482 நினைத்ததை நிறைவேற்றும் சென்னை வில்லிவாக்கம் சிட்கோ நகர் சுப்பிரமணிய சுவாமி கோவில்







Comments

Popular posts from this blog

கோவில் 1319 - சேலம் மல்லிகுந்தம் சின்ன பழனியாண்டவர் கோவில்

கோவில் 1326 - சேலம் K R தோப்பூர் பாலமுருகன் கோவில்

கோவில் 1341 - சேலம் பள்ளப்பட்டி பழனி பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில்