கோவில் 1180 - இலங்கை அம்பாறை அக்கறைப்பற்று முருகன் மலை முருகன் கோவில்

 🙏🙏

தினம் ஒரு முருகன் ஆலயம்-1180

எதிரிகள் தொல்லைகள் அகல அருளும் இலங்கை அம்பாறை அக்கறைப்பற்று முருகன் மலை முருகன் கோவில்

31.8.2024 சனி


அருள்மிகு முருகன் மலை முருகன் கோவில்

கண்ணகி கிராமம்

அக்கறைப்பற்று [Akkaraipattu]

அம்பாறை மாவட்டம் [Ampara]

கிழக்கு மாகாணம் [Eastern Province]

இலங்கை

இருப்பிடம்: அம்பாறை 36 கிமீ, அக்கறைப்பற்று 10 கிமீ, திருக்கோவில் சித்திர வேலாயுத சுவாமி கோவில் 15 கிமீ, மட்டக்களப்பு 72 கிமீ


மூலவர்: முருகன்

தேவியர்: வள்ளி, தெய்வானை


தல மகிமை:

இலங்கை கிழக்கு மாகாணம் அம்பாறை மாவட்டத்தில் அம்பாறை நகரத்திலிருந்து 36 கிமீ தொலைவில் உள்ள கரையோர நகரமான அக்கறைப்பற்று பகுதியில் உள்ள கண்ணகி கிராமத்தில் எதிரிகள் தொல்லைகள் அகல அருளும் அக்கறைப்பற்று முருகன் மலை முருகன் கோவில் அமைந்துள்ளது. அக்கறைப்பற்று நகரிலிருந்து 10 கிமீ தொலைவு அல்லது மிகவும் பிரசித்திப் பெற்ற திருக்கோவில் சித்திர வேலாயுத சுவாமி கோவிலிலிருந்து 15 கிமீ தொலைவு அல்லது மட்டக்களப்பு நகரத்திலிருந்து 72 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் அம்பாறை அக்கறைப்பற்று முருகன் மலை முருகன் கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் முருகன் வள்ளி, தெய்வானையுடன் அருளாட்சி புரிகின்றார்.


அழகிய இயற்கை சூழலில் அமைந்துள்ள இந்த அமைதியான திருக்கோவிலில் முருகப்பெருமானின் கந்த சஷ்டி, பங்குனி உத்திரம், தைப்பூசம், திருக்கார்த்திகை திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன். மேலும் கார்த்திகை, சஷ்டி, செவ்வாய், வெள்ளி திருநாட்களில் விசேஷ பூஜைகள் நடக்கின்றன.

தல வரலாறு:

அம்பாறை மாவட்டத்தில் அக்கறைப்பற்று முருகன் மலை முருகன் கோவில் பழமையானதாகவும், ஆற்றல் மிக்க முருகன் கோவிலாகவும் கருதப்படுகிறது.


தல அமைப்பு:

முருகன் மலையடிவாரத்தில் அழகிய நுழைவு வாயில் உள்ளது. முருகன் மலை மேல் உள்ள முருகன் கோவிலுக்கு செல்ல படிக்கட்டுகள் உள்ளன. அருகில் அழகிய சுனை ஒன்று உள்ளது. கோவிலுக்கு செல்லும் வழியில் விநாயகர், முருகன், சிவலிங்கம் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர். மலை மேல் ஏறிய உடன் பிரமாண்ட முருகன் சிலை வேலேந்தி வலது கரம் அபய முத்திரை காட்டியும், இடது கரம் இடுப்பில் வைத்த படியும் திருக்காட்சி தந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறையில் முருகன் வள்ளி, தெய்வானை சமேதராக வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். மேலும் இக்கோவிலில் விநாயகர், பைரவர் உள்ளிட்ட பரிவார மூர்த்திகளும் அருள்பாலிக்கின்றனர்.


திருவிழா:

கந்த சஷ்டி, பங்குனி உத்திரம், தைப்பூசம், திருக்கார்த்திகை, கார்த்திகை, சஷ்டி


பிரார்த்தனை:

எதிரிகள் தொல்லைகள் அகல, நேர்மறை ஆற்றல் அதிகரிக்க, கவலைகள் போக்க, வினைகள் நீங்க, பிணிகள் அகன்றிட, திருமணம், குழந்தை வேண்டி


நேர்த்திக்கடன்:

அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்


நேர்மறை ஆற்றல் அதிகரிக்க அருளும் இலங்கை அம்பாறை அக்கறைப்பற்று முருகன் மலை முருகனை மனமுருக பிரார்த்திப்போம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


முருகாலய முரசு

Dr K. முத்துக்குமரன் Ph. D

9489302842

கோயம்புத்தூர் 25

🙏🙏


படம் 1 - 1180 எதிரிகள் தொல்லைகள் அகல அருளும் இலங்கை அம்பாறை அக்கறைப்பற்று முருகன் மலை முருகன் கோவில்


படம் 2 - 1180 நேர்மறை ஆற்றல் அதிகரிக்க அருளும் இலங்கை அம்பாறை அக்கறைப்பற்று முருகன் மலை பிருமாண்ட முருகன்



Comments

Popular posts from this blog

கோவில் 609 - மலேசியா கெடா சுங்கை பெடானி சுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 1056 - செங்கல்பட்டு எலப்பாக்கம் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 316 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்