Posts

Showing posts from August, 2024

கோவில் 1181 - இலங்கை மாத்தளை கதிர்வேலாயுத சுவாமி கோவில்

Image
  🙏 🙏 தினம் ஒரு முருகன் ஆலயம்-1181 கவலைகள் நீக்கும் இலங்கை மாத்தளை கதிர்வேலாயுத சுவாமி கோவில் 1.9.2024 ஞாயிறு அருள்மிகு கதிர்வேலாயுத சுவாமி கோவில் மாத்தளை [Matale] மாத்தளை மாவட்டம் [Matale] மத்திய மாகாணம் [Central Province] இலங்கை இருப்பிடம்: மாத்தளை பேருந்து நிலையம் 500 மீ, கொழும்பு 152 கிமீ, கண்டி 26 கிமீ மூலவர்: கதிர்வேலாயுத சுவாமி தேவியர்: வள்ளி, தெய்வானை தல மகிமை: இலங்கை மத்திய மாகாணம் மாத்தளை மாவட்டத்தில் மாத்தளை நகர மையத்தில் (மாத்தளை பேருந்து நிலையத்திலிருந்து 500 மீ) கவலைகள் நீக்கும் கதிர்வேலாயுத சுவாமி கோவில் அமைந்துள்ளது. இலங்கை தலைநகரம் கொழும்பு மாநகரிலிருந்து 152 கிமீ தொலைவு அல்லது கண்டி மாநகரிலிருந்து 26 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் நாட்டுக்கோட்டை நகரத்தார்களால் நிர்வகிக்கப்படும் மாத்தளை கதிர்வேலாயுத சுவாமி கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் கதிர்வேலாயுத சுவாமி வள்ளி, தெய்வானை சமேதராக அருள்பாலிக்கின்றார். இலங்கையில் மிகவும் பிரசித்தி பெற்ற மாத்தளை முத்துமாரி அம்மன்

கோவில் 1180 - இலங்கை அம்பாறை அக்கறைப்பற்று முருகன் மலை முருகன் கோவில்

Image
  🙏 🙏 தினம் ஒரு முருகன் ஆலயம்-1180 எதிரிகள் தொல்லைகள் அகல அருளும் இலங்கை அம்பாறை அக்கறைப்பற்று முருகன் மலை முருகன் கோவில் 31.8.2024 சனி அருள்மிகு முருகன் மலை முருகன் கோவில் கண்ணகி கிராமம் அக்கறைப்பற்று [Akkaraipattu] அம்பாறை மாவட்டம் [Ampara] கிழக்கு மாகாணம் [Eastern Province] இலங்கை இருப்பிடம்: அம்பாறை 36 கிமீ, அக்கறைப்பற்று 10 கிமீ, திருக்கோவில் சித்திர வேலாயுத சுவாமி கோவில் 15 கிமீ, மட்டக்களப்பு 72 கிமீ மூலவர்: முருகன் தேவியர்: வள்ளி, தெய்வானை தல மகிமை: இலங்கை கிழக்கு மாகாணம் அம்பாறை மாவட்டத்தில் அம்பாறை நகரத்திலிருந்து 36 கிமீ தொலைவில் உள்ள கரையோர நகரமான அக்கறைப்பற்று பகுதியில் உள்ள கண்ணகி கிராமத்தில் எதிரிகள் தொல்லைகள் அகல அருளும் அக்கறைப்பற்று முருகன் மலை முருகன் கோவில் அமைந்துள்ளது. அக்கறைப்பற்று நகரிலிருந்து 10 கிமீ தொலைவு அல்லது மிகவும் பிரசித்திப் பெற்ற திருக்கோவில் சித்திர வேலாயுத சுவாமி கோவிலிலிருந்து 15 கிமீ தொலைவு அல்லது மட்டக்களப்பு நகரத்திலிருந்து 72 கிமீ தொலைவு பிரயாணம

கோவில் 1179 - இலங்கை அம்பாறை கல்முனை முருகன் கோவில்

Image
  🙏 🙏 தினம் ஒரு முருகன் ஆலயம்-1179 மன அமைதி தரும் இலங்கை அம்பாறை கல்முனை முருகன் கோவில் 30.8.2024 வெள்ளி அருள்மிகு கல்முனை முருகன் கோவில் ஆர்.கே.எம் வீதி கல்முனை [Kalmunai] அம்பாறை மாவட்டம் [Ampara] கிழக்கு மாகாணம் [Eastern Province] இலங்கை இருப்பிடம்: அம்பாறை 28 கிமீ, திருக்கோவில் சித்திர வேலாயுத சுவாமி கோவில் 36 கிமீ, மட்டக்களப்பு 42 கிமீ மூலவர்: முருகன் தேவியர்: வள்ளி, தெய்வானை உற்சவர்: ஆறுமுகப்பெருமான் தல மகிமை: இலங்கை கிழக்கு மாகாணம் அம்பாறை மாவட்டத்தில் அம்பாறை நகர் பேருந்து நிலையத்திலிருந்து 28 கிமீ தொலைவில் உள்ள கரையோர நகரமான கல்முனையில் மன அமைதி தரும் கல்முனை முருகன் கோவில் அமைந்துள்ளது. மிகவும் பிரசித்திப் பெற்ற திருக்கோவில் சித்திர வேலாயுத சுவாமி கோவிலிலிருந்து 36 கிமீ தொலைவு அல்லது மட்டக்களப்பு நகரத்திலிருந்து 42 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் அம்பாறை கல்முனை முருகன் கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் முருகன் வள்ளி, தெய்வானை சகிதம் அருள்கின்றார். வருடாந்திர

கோவில் 1178 - இலங்கை புத்தளம் சேகுவந்தீவு முருகன் கோவில்

Image
  🙏 🙏 தினம் ஒரு முருகன் ஆலயம்-1178 இகபர சுகமருளும் இலங்கை புத்தளம் சேகுவந்தீவு முருகன் கோவில் 29.8.2024 வியாழன் அருள்மிகு சேகுவந்தீவு முருகன் கோவில் சேகுவந்தீவு [Seguvantheevu] [மணல்தீவு] புத்தளம் மாவட்டம் [Puttalam] வட மேற்கு மாகாணம் [North Western Province] இலங்கை இருப்பிடம்: புத்தளம் 2 கிமீ, கல்பிட்டி 48 கிமீ, கொழும்பு 135 கிமீ, அனுராதபுரம் 75 கிமீ, கண்டி 128 கிமீ, மூலவர்: முருகன் தேவியர்: வள்ளி, தெய்வானை தல மகிமை: இலங்கை வட மேற்கு மாகாணம் புத்தளம் மாவட்டத்தில் புத்தளம் நகர் பேருந்து நிலையத்திலிருந்து 2 கிமீ தொலைவில் உள்ள சேகுவந்தீவு [மணல்தீவு] பகுதியில் இகபர சுகமருளும் சேகுவந்தீவு முருகன் கோவில் அமைந்துள்ளது. கல்பிட்டி துறைமுக நகரிலிருந்து 48 கிமீ தொலைவு அல்லது இலங்கை தலைநகரம் கொழும்பு நகரத்திலிருந்து 135 கிமீ தொலைவு அல்லது அனுராதபுரம் நகரிலிருந்து 75 கிமீ தொலைவு அல்லது கண்டி நகரிலிருந்து 128 கிமீ பிரயாணம் செய்தாலும் புத்தளம் சேகுவந்தீவு முருகன் கோவிலை அடையலாம். இக்கோவிலில் மூலவர் முருகன்

கோவில் 1177 - இலங்கை புத்தளம் தில்லையடி சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்

Image
  🙏 🙏 தினம் ஒரு முருகன் ஆலயம்-1177 வேண்டியதை தந்தருளும் இலங்கை புத்தளம் தில்லையடி சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் 28.8.2024 புதன் அருள்மிகு தில்லையடி சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் தில்லையடி [Thillaiyadi] [தில்லையாடி] புத்தளம் மாவட்டம் [Puttalam] வட மேற்கு மாகாணம் [North Western Province] இலங்கை இருப்பிடம்: புத்தளம் 5 கிமீ, கொழும்பு 131 கிமீ, அனுராதபுரம் 78 கிமீ, கண்டி 131 கிமீ மூலவர்: சிவசுப்பிரமணிய சுவாமி தேவியர்: வள்ளி, தெய்வானை தல மகிமை: இலங்கை வட மேற்கு மாகாணம் புத்தளம் மாவட்டத்தில் புத்தளம்-கொழும்பு வீதியில் புத்தளம் நகரிலிருந்து 5 கிமீ தொலைவில் உள்ள தில்லையடி [தில்லையாடி] நகரத்தில் வேண்டியதை தந்தருளும் தில்லையடி சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இலங்கை தலைநகரம் கொழும்பு நகரத்திலிருந்து 131 கிமீ தொலைவு அல்லது அனுராதபுரம் நகரிலிருந்து 78 கிமீ தொலைவு அல்லது கண்டி நகரிலிருந்து 131 கிமீ பிரயாணம் செய்தாலும் புத்தளம் தில்லையடி சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலை அடையலாம். இத

கோவில் 1176 - இலங்கை கொடிகாமம் கச்சாய் முருகன் கோவில்

Image
  🙏 🙏 தினம் ஒரு முருகன் ஆலயம்-1176 இடர்கள் களையும் இலங்கை கொடிகாமம் கச்சாய் முருகன் கோவில் 27.8.2024 செவ்வாய் அருள்மிகு கச்சாய் முருகன் கோவில் கச்சாய் [Kachchai] கொடிகாமம் [Kodikamam] யாழ்ப்பாணம் மாவட்டம் [Jaffina] வடக்கு மாகாணம் [Northern Province] இலங்கை இருப்பிடம்: யாழ்ப்பாணம் 25 கிமீ, கொடிகாமம் 5 கிமீ, சாவகச்சேரி 11 கிமீ, திருநெல்வேலி (இலங்கை) 25 கிமீ மூலவர்: முருகன் (வேல்) தல மகிமை: இலங்கை வடக்கு மாகாணம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் யாழ்ப்பாணம்-கண்டி வீதியில் யாழ்ப்பாணம் நகரிலிருந்து 25 கிமீ தொலைவில் உள்ள கச்சாய் கிராமத்தில் இடர்கள் களையும் கச்சாய் முருகன் கோவில் (கொடிகாமம் அருகில்) அமைந்துள்ளது. மேலும் கொடிகாமம் நகரிலிருந்து 5 கிமீ தொலைவு அல்லது சாவகச்சேரி பகுதியிலிருந்து 11 கிமீ தொலைவு அல்லது திருநெல்வேலி (இலங்கை) பகுதியிலிருந்து 25 கிமீ பிரயாணம் செய்தாலும் கொடிகாமம் கச்சாய் முருகன் கோவிலை அடையலாம். இக்கோவிலில் மூலவர் வேல் (முருகன்) ஆற்றலுடன் அருள்கின்றது. இக்கோவிலில் கந்த சஷ்டி திருவ

கோவில் 1175 - இலங்கை மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி செட்டிபாளையம் முருகன் கோவில்

Image
  🙏 🙏 தினம் ஒரு முருகன் ஆலயம்-1175 கவலைகள் தீர்க்கும் இலங்கை மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி செட்டிபாளையம் முருகன் கோவில் 26.8.2024 திங்கள் அருள்மிகு செட்டிபாளையம் முருகன் கோவில் களுவாஞ்சிக்குடி [Kaluwanchikudy] மட்டக்களப்பு [Batticaloa] மட்டக்களப்பு மாவட்டம் [Batticaloa] கிழக்கு மாகாணம் [Eastern Province] இலங்கை இருப்பிடம்: மட்டக்களப்பு 21 கிமீ, அம்பாறை 46 கிமீ மூலவர்: குமாரத்தன் முருகன் உற்சயர்: முருகன் வள்ளி, தெய்வானை தல மகிமை: இலங்கை கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு நகரிலிருந்து 21 கிமீ தொலைவில் உள்ள களுவாஞ்சிக்குடி நகரத்தில் கவலைகள் தீர்க்கும் செட்டிபாளையம் முருகன் கோவில் அமைந்துள்ளது. அம்பாறை நகரிலிருந்து இருந்து 46 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி செட்டிபாளையம் முருகன் கோவிலை அடையலாம். இக்கோவிலில் மூலவர் முருகன் தேவியருடன் அருள்புரிகின்றார். இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மஹோற்சவம் 10 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறுகிறது. கந்த சஷ்டி