கோவில் 716 - கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சுப்பிரமணிய சுவாமி கோவில்
🙏🏻🙏🏻 தினம் ஒரு முருகன் ஆலயம்-716
இகபர சுகம் அருளும் கும்பாபிஷேகம் கண்ட (24.5.23) கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சுப்பிரமணிய சுவாமி கோவில்
25.5.2023 வியாழன்
அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்
ஊத்தங்கரை-635207
கிருஷ்ணகிரி மாவட்டம்
இருப்பிடம்: கிருஷ்ணகிரி 49 கிமீ, திருப்பத்தூர் 27 கிமீ, சேலம் 91 கிமீ
மூலவர்: சுப்பிரமணிய சுவாமி
தேவியர்: வள்ளி, தெய்வானை
உற்சவர்: சுப்பிரமணிய சுவாமி உடன் வள்ளி, தெய்வானை
தலமகிமை:
கிருஷ்ணகிரி மாவட்டம் கிருஷ்ணகிரி நகரிலிருந்து 49 கிமீ தொலைவிலிருந்து உள்ள கல்வி நகரமான ஊத்தங்கரையில் 24.5.23 புதன் கிழமையன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்ற இகபர சுகம் அருளும் சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இத்திருத்தலத்தில் மூலவரான சுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானை சமேதராக அருள்பாலிக்கின்றார். மேலும் திருப்பத்தூரிலிருந்து 27 கிமீ பிரயாணம் செய்தாலும், சேலம் நகரிலிருந்து 91 கிமீ பிரயாணம் செய்தாலும் இக்கோவிலை அடையலாம்.
ஆகம விதிகளின் படி 24.5.23 அன்று நடைபெற்ற கும்பாபிஷேகத்திற்கு பின்னர் மாலை உற்சவர் சுப்பிரமணிய சுவாமி- வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் ஏராளமான பக்தர்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திரம், தைப்பூசம், கந்த சஷ்டி முதலிய முருகப்பெருமானின் விழாக்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.
தல வரலாறு:
சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆகம விதிகளின் படி புனரமைக்கப்பட்டு, 24.5.23-ல் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
தல அமைப்பு:
அழகிய வண்ண சிற்பங்களுடைய கோவில் கருவறையில் வள்ளி, தெய்வானை உடனுறை சுப்பிரமணிய சுவாமி மூலவராக பொலிவுடன் வீற்றிருந்து நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி தந்து அருள்பாலிக்கின்றார். உற்சவர் சுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானையுடன் அருள்புரிகின்றார். மேலும் விநாயகர், சிவன், அம்பாள், தட்சிணாமூர்த்தி, துர்க்கை, நவக்கிரகங்கள் உள்ளிட்ட தெய்வங்கள் அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
பங்குனி உத்திரம், தைப்பூசம், வைகாசி விசாகம், கந்த சஷ்டி, கிருத்திகை, சஷ்டி,
பிரார்த்தனை:
இகபர சுகம் பெற, திருமணம் வேண்டி, குழந்தை வேண்டி, நினைத்தது நிறைவேற, நல்லன நடக்க, நேர்மறை அதிர்வுகள் ஏற்பட
நேர்த்திக்கடன்:
அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் அணிவித்தல்
நினைத்ததை நிறைவேற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சுப்பிரமணிய சுவாமியை மனமுருகி வணங்கி பயன்பெறுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
Dr K. முத்துக்குமரன் Ph. D
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
படம் 1 - 716 இகபர சுகம் அருளும் கும்பாபிஷேகம் கண்ட (24.5.23) கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாணம்
படம் 2 - 716 நினைத்ததை நிறைவேற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகம் (24.5.23)
Comments
Post a Comment