கோவில் 688 - ராமநாதபுரம் மாவட்டம் கமுதி நீராவி கரிசல்குளம் சுப்பிரமணிய சுவாமி கோவில்

 🙏🏻🙏🏻                                                                                                                                               தினம் ஒரு முருகன் ஆலயம்-688

கஷ்டங்கள் தீர்க்கும் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி நீராவி கரிசல்குளம் சுப்பிரமணிய சுவாமி கோவில்

27.4.2023 வியாழன்

அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்

நீராவி கரிசல்குளம்-623603

கமுதி

ராமநாதபுரம் மாவட்டம்

இருப்பிடம்: கமுதி 15 கிமீ


மூலவர்: சுப்பிரமணிய சுவாமி

தேவியர்: வள்ளி, தெய்வானை


தலமகிமை:

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியிலிருந்து 15 கிமீ தொலைவில் நீராவி கரிசல்குளம் எனும் கிராமத்தில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் வள்ளி, தெய்வானை சமேதராக சுப்பிரமணிய சுவாமி அருள்பாலிக்கின்றார்.


பங்குனி உத்திர திருவிழா ஆண்டு தோறும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது, திருவிழா நாளன்று விநாயகர் கோவிலிலிருந்து காப்பு கட்டிய பக்தர்கள் பால்குடம், காவடி, அக்னி சட்டி, அலகு, வேல் குத்தி கிராமத்தின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வருவர். பின்னர் மூலவர் சுப்பிரமணிய சுவாமிக்கு பாலபிஷேகம் உட்பட 16 வகை அபிஷேகங்கள் நடைபெற்று அலங்காரம், சிறப்பு பூஜைகள் நடைபெறும். இதே போல கந்த சஷ்டி, தைப்பூசம், வைகாசி விசாக திருநாட்களும் வெகு விமரிசையாக நடைபெறுகின்றன. மேலும் கிருத்திகை, சஷ்டி தினங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.


தல வரலாறு:

கமுதி மற்றும் நீராவி கரிசல்குளம் முருக பக்தர்கள், புரவலர்கள் இணைந்து இக்கோவிலை எழுப்பியதாக வரலாறு.


தல அமைப்பு:

திருக்கோவில் கருவறையில் வள்ளி, தெய்வானை உடனுறை சுப்பிரமணிய சுவாமி நின்ற கோலத்தில் திருக்காட்சியருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். வித விதமான அலங்காரங்களில் முருகப்பெருமான் ஜொலிக்கின்றார். விநாயகர் உட்பட அனைத்து தெய்வங்களும் அருளுகின்றனர்.


திருவிழா:

பங்குனி உத்திரம், தைப்பூசம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், கிருத்திகை, சஷ்டி


பிரார்த்தனை:

கஷ்டங்கள் தீர, திருமண தடையை நீக்க, குழந்தை வேண்டி, வேண்டிய வரம் அருள


நேர்த்திக்கடன்:

பால்குடம், காவடி, அலகு குத்துதல், அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் அணிவித்தல்


திருமண தடையை நீக்கி அருளும் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி நீராவி கரிசல்குளம் சுப்பிரமணிய சுவாமியை தரிசித்து பலன் பெறுவோம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்


Dr K. முத்துக்குமரன் Ph. D

கோயம்புத்தூர் 25

🙏🏻🙏🏻


படம் 1 - 688 கஷ்டங்கள் தீர்க்கும் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி நீராவி கரிசல்குளம்  சுப்பிரமணிய சுவாமி


படம் 2 - 688 திருமண தடையை நீக்கி அருளும் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி நீராவி கரிசல்குளம் சுப்பிரமணிய சுவாமி



Comments

Popular posts from this blog

கோவில் 1319 - சேலம் மல்லிகுந்தம் சின்ன பழனியாண்டவர் கோவில்

கோவில் 316 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 1201 - கொழும்பு மாண்புமிகு பண்டாரநாயக்க மாவத்தை சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்