கோவில் 602 - கிருஷ்ணகிரி பர்கூர் ஜெகதேவி பாலமுருகன் கோவில்
🙏🏻🙏🏻 தினம் ஒரு முருகன் ஆலயம்-602
தடைகளை நீக்கும் கிருஷ்ணகிரி பர்கூர் ஜெகதேவி பாலமுருகன் கோவில்
31.1.2023 செவ்வாய்
அருள்மிகு பாலமுருகன் திருக்கோவில்
ஜெகதேவி-635203
பர்கூர் வட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டம்
இருப்பிடம்: பர்கூர் 8 கிமீ கிருஷ்ணகிரி 16 கிமீ
மூலவர்: பாலமுருகன்
தலமகிமை:
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் வட்டம் பர்கூருக்கு தென்மேற்கே பர்கூர்-ஊத்தங்கரை சாலையில் 8 கிமீ தொலைவில் உள்ள ஜெகதேவி பகுதியில் ஆடிக்கிருத்திகை திருவிழாவிற்கு பிரசித்தி பெற்ற பாலமுருகன் கோவில் அமைந்துள்ளது. கிருஷ்ணகிரியிலிருந்து 16 கிமீ பிரயாணம் செய்தாலும் ஜெகதேவி பாலமுருகன் கோவிலை அடையலாம்.
77 ஆண்டுகளாக இத்தலத்தில் ஆடிக்கிருத்திகை திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. திருவிழா முதல் நாள் படிபூஜை, வாஸ்து பூஜை, கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. மறு நால் ஆடிக்கிருத்திகையன்று யாகசாலை பூஜை, பாலமுருகனுக்கு பாலாபிஷேகம் உட்பட அனைத்து வித அபிஷேகங்கள், அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. காலை 11 மணிக்கு இடும்பன் பூஜை முடிந்து பால் காவடி, மலர் காவடி, மயில் காவடி, 100 அடி வரை வேல் போட்டுக் கொள்ளுதல், 100 அடி வரை அலகு, சடல், தேர், கல் உரல், கார் இழுத்தல், இரும்பு சங்கிலியை முதுகில் குத்திக் கொண்டு தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். பல்லாயிர கணக்கான சுற்று வட்டார பக்தர்கள் கலந்து கொள்வர் மாலை பாலமுருகன் வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இரவில் தேவியருடன் சுவாமி புஷ்பப் பல்லக்கில் உலா வருதல் சிறப்பம்சம். முருகனுக்குரிய மற்ற விசேஷங்களும் கொண்டாடப்படுகின்றன.
தல வரலாறு:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இக்கோவில் பிரசித்தி பெற்ற கோவிலாகும். ஆடிக்கிருத்திகை முக்கியமான திருவிழாவாகும்.
தல அமைப்பு:
இக்கோவில் ஒரு சிறிய குன்றின் மீது அமைந்துள்ளது. 70 படிகள் உள்ளன, கோவில் கருவறையில் மூலவர் பாலமுருகன் நின்ற கோலத்தில் அழகிய காட்சி அருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறையின் இடப்புறம் சந்நிதியில் காசி விசுவநாதரும், வலப்புறம் சந்நிதியில் விநாயகப்பெருமானும் அருள்பாலிக்கின்றனர். பிரகாரத்தின் வலப்புறத்தில் நவக்கிரகங்கள் அருள்கின்றனர்.
திருவிழா:
ஆடிக்கிருத்திகை, தைப்பூசம், கந்த சஷ்டி, பங்குனி உத்திரம்
பிரார்த்தனை:
தடைகள் நீங்க, நினைத்தது நிறைவேற, திருமணப்பேறு, குழந்தைப்பேறு வேண்டி
நேர்த்திக்கடன்:
பால் காவடி, மலர் காவடி, மயில் காவடி, வேல் போட்டுக் கொள்ளுதல், அலகு குத்துதல், சடல், தேர், கல் உரல், கார் இழுத்தல், இரும்பு சங்கிலியை குத்திக்கொள்ளுதல், அபிஷேகம், அலங்காரம், பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
நினைத்தது நிறைவேற அருளும் கிருஷ்ணகிரி பர்கூர் ஜெகதேவி பாலமுருகனை மனமுருக தரிசித்து மகிழ்வோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்
Dr K. முத்துக்குமரன் Ph. D
கோயம்புத்தூர் 25 இத்
🙏🏻🙏🏻
படம் 1 - 602 தடைகளை நீக்கும் கிருஷ்ணகிரி பர்கூர் ஜெகதேவி பாலமுருகன்
படம் 2 - 602 நினைத்தது நிறைவேற அருளும் கிருஷ்ணகிரி பர்கூர் ஜெகதேவி பாலமுருகன் கோவில் ஆடிக்கிருத்திகை திருவிழா
Comments
Post a Comment