கோவில் 1797 - கேரளா திருச்சூர் பெரும்பிளவு சண்முகர் கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-1797
நோய்களை குணமாக்கும் கேரளா திருச்சூர் பெரும்பிளவு சண்முகர் கோவில்
10.05.2026 ஞாயிறு
அருள்மிகு சண்முகர் திருக்கோவில்
[அஞ்சம்பலம் முருகன் கோவில்]
பெரும்பிளவு 680519 [Perumpilavu]
திருச்சூர் மாவட்டம் [Thrissur]
கேரளா மாநிலம் [Kerala]
இருப்பிடம்: திருச்சூர் 29 கிமீ, குருவாயூர் 15 கிமீ, ஷோரனூர் 33 கிமீ, கொச்சி விமான நிலையம் 65 கிமீ
மூலவர்: சண்முகர்
உற்சவர்: சண்முகர்
தல மகிமை:
கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டம் பெரும்பிளவு கிராமத்தில் சங்கடம் தீர்க்கும் பெரும்பிளவு சண்முகர் கோவில் அமைந்துள்ளது.
திருச்சூர் பேருந்து நிலையத்திலிருந்து 29 கிமீ தொலைவு அல்லது குருவாயூர் பேருந்து நிலையத்திலிருந்து 15 கிமீ தொலைவு அல்லது ஷோரனூர் பேருந்து நிலையத்திலிருந்து 33 கிமீ தொலைவு அல்லது கொச்சி விமான நிலையத்திலிருந்து 65 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் திருச்சூர் பெரும்பிளவு சண்முகர் கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் சண்முகர் நின்ற திருக்கோலத்தில் வீற்றிருந்து அருளாட்சி புரிகின்றார்.
திருச்சூர் பெரும்பிளவு சண்முகர் கோவிலில் ஒவ்வொரு வருடமும் தைப்பூசத் திருவிழா சிறப்புப் பூஜைகளுடன் விமரிசையாக நடைபெறுகிறது. கந்த சஷ்டி திருவிழா 6 நாட்கள் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்ள விமரிசையாக நடைபெறுகின்றது. மேலும் இத்திருக்கோவிலில் முருகப்பெருமானின் பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை உள்ளிட்ட அனைத்துத் திருவிழாக்களும் சிறப்பு பூஜைகளுடன் கொண்டாடப்படுகின்றன. சஷ்டி, கிருத்திகை போன்ற நன்னாட்களில் விசேஷ வழிபாடுகள் நடக்கின்றன.
தல வரலாறு:
கேரள மாநிலம் திருச்சூர் பெரும்பிளவு சண்முகர் கோவில் இப்பகுதியில் 1800 ஆண்டுகள் மிகவும் பழமையான முருகப்பெருமான் திருக்கோவிலாகும்.
தல அமைப்பு:
திருச்சூர் பெரும்பிளவு சண்முகர் கோவில் அழகாக கட்டப்பட்டுள்ளது. இத்திருக்கோவில் கருவறையில் மூலவர் சண்முகர் கையில் வேலுடன் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். மேலும் இத்திருக்கோவிலில் கணபதி, உற்சவர், ஐயப்பன், சிவபெருமான், பகவதி, விஷ்ணு மாயா, மகா விஷ்ணு, நாகராஜர், நாக யாழி, பத்ரகாளி மூகாம்பிகை உட்பட அனைத்துத் தெய்வங்களும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
.
திருவிழா:
தைப்பூசம், கந்த சஷ்டி, பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, சஷ்டி, கிருத்திகை
பிரார்த்தனை:
நோய்கள் குணமாக, மன மகிழ்ச்சி கிடைக்க, வேண்டிய வரம் கிட்ட, வினைகள் அகல, பிணிகள் போக்க, திருமணம் நடைபெற வேண்டி, குழந்தை பாக்கியம் வேண்டி, குடும்ப ஒற்றுமை ஓங்க, அல்லல்கள் அகற்ற, நல்லன அருள, ஆன்ந்தம் பொங்க, தோஷங்கள் விலக
நேர்த்திக்கடன்:
காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
வினைகள் போக்கும் திருச்சூர் பெரும்பிளவு சண்முகர் திருவடி பணிந்து தொழுதிடுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
சைவ சித்தாந்தச் சுடர்
சைவ நெறிச் செம்மல்
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
bamikumar@gmail.com
🙏🏻🙏🏻
படம் 1 - 1797 நோய்களை குணமாக்கும் கேரளா திருச்சூர் பெரும்பிளவு சண்முகர் கோவில்
Comments
Post a Comment