கோவில் 1796 - கேரளா திருச்சூர் புத்தூர் சுப்பிரமணியர் கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-1796
சங்கடம் தீர்க்கும் கேரளா திருச்சூர் புத்தூர் சுப்பிரமணியர் கோவில்
9.05.2026 சனி
அருள்மிகு சுப்பிரமணியர் திருக்கோவில்
புத்தூர் 680546 [Puthur]
Kaiparamba PO [கைபரம்பா]
திருச்சூர் மாவட்டம் [Thrissur]
கேரளா மாநிலம் [Kerala]
இருப்பிடம்: திருச்சூர் 15 கிமீ, குருவாயூர் 15 கிமீ, ஷோரனூர் 34 கிமீ, கொச்சி விமான நிலையம் 65 கிமீ, பாலக்காடு 78 கிமீ, ஏர்ணாகுளம் 90 கிமீ
மூலவர்: சுப்பிரமணியர்
உற்சவர்: சுப்பிரமணியர்
தல மகிமை:
கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டம் புத்தூர் கிராமத்தில் சங்கடம் தீர்க்கும் புத்தூர் சுப்பிரமணியர் கோவில் அமைந்துள்ளது.
திருச்சூர் பேருந்து நிலையத்திலிருந்து 15 கிமீ தொலைவு அல்லது குருவாயூர் பேருந்து நிலையத்திலிருந்து 15 கிமீ தொலைவு அல்லது ஷோரனூர் பேருந்து நிலையத்திலிருந்து 34 கிமீ தொலைவு அல்லது கொச்சி விமான நிலையத்திலிருந்து 65 கிமீ தொலைவு அல்லது பாலக்காடு பேருந்து நிலையத்திலிருந்து 78 கிமீ தொலைவு அல்லது ஏர்ணாகுளம் பேருந்து நிலையத்திலிருந்து 90 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் திருச்சூர் புத்தூர் சுப்பிரமணியர் கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் சுப்பிரமணியர் மூலவராக வீற்றிருந்ந்து அருள்கின்றார்.
திருச்சூர் புத்தூர் சுப்பிரமணியர் கோவிலில் தைப்பூசம் மற்றும் கந்த சஷ்டி திருவிழாக்கள் மிகவும் சிறப்பாக நடைபெறுகின்றன. மேலும் இத்திருக்கோவிலில் முருகப்பெருமானின் பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை உள்ளிட்ட அனைத்துத் திருவிழாக்களும் விசேஷப் பூஜைகளுடன் கொண்டாடப்படுகின்றன. சஷ்டி, கிருத்திகை போன்ற திருநாட்களில் விசேஷ வழிபாடுகள் நடக்கின்றன.
தல வரலாறு:
கேரள மாநிலம் திருச்சூர் புத்தூர் சுப்பிரமணியர் கோவில் இப்பகுதியில் 1800 ஆண்டுகள் பழமையான முருகப்பெருமான் திருக்கோவிலாகும்.
தல அமைப்பு:
திருச்சூர் புத்தூர் சுப்பிரமணியர் கோவில் கேரள பாணியில் பொலிவுடன் அமைக்கப்பட்டுள்ளது. இத்திருக்கோவில் கருவறையில் மூலவர் சுப்பிரமணியர் கையில் வேலுடன் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். மேலும் இத்திருக்கோவிலில் கணபதி, உற்சவர், ஐயப்பன், சிவபெருமான், பகவதி உட்பட எல்லா பரிவார மூர்த்திகளும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
தைப்பூசம், கந்த சஷ்டி, பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, சஷ்டி, கிருத்திகை
பிரார்த்தனை:
சங்கடம் தீர, வினைகள் போக்க, எண்ணியது நிறைவேற, பிணிகள் அகல, திருமண வரம் வேண்டி, குழந்தை வரம் கிட்ட, குடும்ப வாழ்வு சிறக்க, உடல் நிலை சீராக, நல்ல எண்ணங்கள் உண்டாக, வியாபாரம் விருத்தியடைய, மன மகிழ்ச்சி உண்டாக, தொல்லைகள் குறைய, தோஷங்கள் விலக
நேர்த்திக்கடன்:
காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
வினைகள் போக்கும் திருச்சூர் புத்தூர் சுப்பிரமணியர் திருவடி பணிந்து தொழுதிடுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
சைவ சித்தாந்தச் சுடர்
சைவ நெறிச் செம்மல்
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
bamikumar@gmail.com
🙏🏻🙏🏻
படம் 1 - 1796 சங்கடம் தீர்க்கும் கேரளா திருச்சூர் புத்தூர் சுப்பிரமணியர் கோவில்
Comments
Post a Comment