கோவில் 1795 - கேரளா திருச்சூர் பரப்புக்கற சுப்பிரமணிய சுவாமி கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-1795
பழவினைகளை நீக்கியருளும் கேரளா திருச்சூர் பரப்புக்கற சுப்பிரமணிய சுவாமி கோவில்
8.05.2026 வெள்ளி
அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்
Mapranam-Nandikkara Road
பரப்புக்கற 680310 [Parappukkara]
திருச்சூர் மாவட்டம் [Thrissur]
கேரளா மாநிலம் [Kerala]
இருப்பிடம்: திருச்சூர் 19 கிமீ, கொடுங்களூர் 25 கிமீ, கொச்சி விமான நிலையம் 37 கிமீ, குருவாயூர் 42 கிமீ, ஷோரனூர் 52 கிமீ, ஏர்ணாகுளம் 62 கிமீ, பாலக்காடு 77 கிமீ
மூலவர்: சுப்பிரமணிய சுவாமி
உற்சவர்: சுப்பிரமணிய சுவாமி
தல மகிமை:
கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டம் பரப்புக்கற கிராமத்தில் பழவினைகளை நீக்கியருளும் பரப்புக்கற சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது.
திருச்சூர் பேருந்து நிலையத்திலிருந்து 19 கிமீ தொலைவு அல்லது கொடுங்களூர் பேருந்து நிலையத்திலிருந்து 25 கிமீ தொலைவு அல்லது கொச்சி விமான நிலையத்திலிருந்து 37 கிமீ தொலைவு அல்லது குருவாயூர் பேருந்து நிலையத்திலிருந்து 42 கிமீ தொலைவு அல்லது ஷோரனூர் பேருந்து நிலையத்திலிருந்து 52 கிமீ தொலைவு அல்லது ஏர்ணாகுளம் பேருந்து நிலையத்திலிருந்து 62 கிமீ தொலைவு அல்லது பாலக்காடு பேருந்து நிலையத்திலிருந்து 77 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் திருச்சூர் பரப்புக்கற சுப்பிரமணிய சுவாமி கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் சுப்பிரமணிய சுவாமி கையில் வேலுடன் ஆற்றலுடன் வீற்றிருந்து அருள்புரிகின்றார்.
திருச்சூர் பரப்புக்கற சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூசத் திருவிழா வருடந்தோறும் சிறப்புப் பூஜைகளுடன் விமரிசையாக நடைபெறுகின்றது. காவடி திருவிழா இக்கோவிலின் சிறப்பு. கந்த சஷ்டி திருவிழா சிறப்பாக நடைபெறுகின்றது. மேலும் இத்திருக்கோவிலில் முருகப்பெருமானின் பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை உள்ளிட்ட அனைத்துத் திருவிழாக்களும் விசேஷப் பூஜைகளுடன் கொண்டாடப்படுகின்றன. சஷ்டி, கிருத்திகை போன்ற திருநாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன.
தல வரலாறு:
கேரள மாநிலம் திருச்சூர் பரப்புக்கற சுப்பிரமணிய சுவாமி கோவில் இப்பகுதியில் மிகவும் பழமையான முருகப்பெருமான் திருக்கோவிலாகும்.
தல அமைப்பு:
திருச்சூர் பரப்புக்கற சுப்பிரமணிய சுவாமி கோவில் கேரள பாணியில் கட்டப்பட்டுள்ளது. இத்திருக்கோவில் கருவறையில் மூலவர் சுப்பிரமணிய சுவாமி கையில் வேலுடன் ஆற்றலுடன் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். மேலும் இத்திருக்கோவிலில் கணபதி, உற்சவர், ஐயப்பன், சிவபெருமான், பகவதி உள்ளிட்ட அனைத்துத் தெய்வங்களும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர். கோவிலுக்கு வெளியில் நின்ற திருக்கோலத்தில் சுப்பிரமணிய சுவாமி சிலை வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார்.
திருவிழா:
தைப்பூசம், கந்த சஷ்டி, பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, சஷ்டி, கிருத்திகை
பிரார்த்தனை:
பழவினைகள் நீங்க, மன அமைதி பெற, நல்லன அருள, கேட்டது கிடைக்க, குழந்தைப்பேறு வேண்டி, நல்லன அருள, உடல் ஆரோக்கியம் உண்டாக, வினைகள் தீர, பிணிகள் விலக, நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்க, தோஷங்கள் அகல
நேர்த்திக்கடன்:
காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
திறக்கும் நேரம்:
காலை 6-9 மாலை 5-7
மன அமைதி தரும் திருச்சூர் பரப்புக்கற சுப்பிரமணிய சுவாமியை போற்றி வணங்குவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
சைவ சித்தாந்தச் சுடர்
சைவ நெறிச் செம்மல்
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
bamikumar@gmail.com
🙏🏻🙏🏻
படம் 1 - 1795 பழவினைகளை நீக்கியருளும் கேரளா திருச்சூர் பரப்புக்கற சுப்பிரமணிய சுவாமி கோவில்
Comments
Post a Comment