கோவில் 244 - உத்தரகாண்ட் ரிஷிகேஷ் கார்த்திகேயா கோவில்

 🙏🙏                                                                                                                                                                    தினம் ஒரு முருகன் ஆலயம்-244

தியானம் செய்வதற்கு உகந்த உத்தரகாண்ட் ரிஷிகேஷ் கார்த்திகேயா கோவில்

7.2.2022 திங்கள்


அருள்மிகு கார்த்திகேயா திருக்கோவில்

அவாஸ் விகாஸ் காலனி

ரிஷிகேஷ்-249201 

உத்தரகாண்ட்

இருப்பிடம்: ரிஷிகேஷ் பேருந்து நிலையத்திலியிலிருந்து 2.4 கிமீ 

மூலவர்: கார்த்திகேயா 


தலமகிமை:

உத்தரகாண்ட் மாநிலம் இமயமலை பகுதியில் புனித சிவஸ்தலம் உள்ள ரிஷிகேஷ் நகரில் மிகவும் சிறிய, அழகான கார்த்திகேயா திருக்கோவில் உள்ளது. பழனி நவபாஷாண சிலையை வடிவமைத்த போகரின் வழி வந்தவர்கள் இன்றும்  இங்கு வாழ்கின்றதாக சொல்லப்படிகிறது. 


இக்கோவில் சுவாமி ராமச்சந்திர மகாராஜ் மற்றும் அவரது சீடர்களால் நிறுவப்பட்ட தென்னிந்திய பாணி ஆசிரமம் ஆகும். இது புனிதமான கங்கை நதிக்கு மிக அருகில் உள்ளது. உலகப் புகழ் பெற்ற கங்கா ஆரத்திக்கு இங்கிருந்து நடந்து செல்லக்கூடிய தூரம்தான் என்பது சிறப்பு. கார்த்திகேய ஆசிரமத்தில் சுவாமி தண்டாயுதபாணியின் தெய்வீகத்தை அனுபவித்து மகிழலாம். இந்த முருகன் ஆசிரமத்தில் தேவைப்படுபவர்களுக்கு தங்குமிடமும் மற்றும் முன்கூட்டியே வேண்டுபவர்களுக்கு தென்னிந்திய உணவும் வழங்கப்படுகிறது.


ஒவ்வொரு அக்டோபர்/நவம்பர் மாதத்திலும் ஷஷ்டி விரதம் இருக்கும் நிறைய பேர் இங்கேயே தங்கி, சஷ்டி விரதங்களை முடித்து, கார்த்திகேயரை வணங்கி, அனைத்து பலன்களையும் பெற்று செல்கின்றனர் ரிஷிகேஷ், ஹரித்வார், டேராடூன், முசோரி, கேத்ரிநாத் போன்ற இடங்களுக்குச் செல்லும் மக்கள் இங்கு தங்கி சுப்ரமணியரை தரிசித்து செல்வர்.


தல சிறப்பு:

பழமையான கோவில் இதுவாகும்.


தல அமைப்பு:

தென்னகக் கோவில்கள் பாணியில் உள்ள இத்திருக்கோவிலின் ராஜகோபுரம் வழியாக நுழைந்த உடன் உயரமான கொடிக்கம்பம், பலிபீடம் உள்ளன. கருவறையில் மூலவர் கார்த்திகேயா நின்ற கோலத்தில் பக்த பெருமக்களுக்கு அருள்பாலிக்கின்றார். முருகப்பெருமானின் இருபுறத்திலும், வேலும், சேவற்க்கொடியும் இருப்பது அழகு. அலங்காரம் செய்யப்பட்ட முருகனை காணக் காண கொள்ளை அழகு. சஷ்டி விரதம் பிரசித்தி. 


திருவிழா:

சஷ்டி விரதம்


பிரார்த்தனை:

மன அமைதி உண்டாக, அனைத்து நற்பலன்கள் கிடைக்க


நேர்த்திக்கடன்:

அலங்காரம், சிறப்பு பூஜைகள் 


திறக்கும் நேரம்:

காலை 5 முதல் மாலை 7 வரை (வியாழன் கோவில் திறப்பதில்லை)


மன அமைதியினை தந்தருளும் உத்தரகாண்ட் ரிஷிகேஷ் கார்த்திகேயரை தொழுது அனைத்து நற்பலன்களையும் பெற்றிடுவோம்! .

 

வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


Dr K. முத்துக்குமரன் Ph. D

கோயம்புத்தூர் 25

🙏🙏



படம் 1 - மன அமைதி உண்டாக அழகிய கோலத்தில் அருளுகின்ற உத்தரகாண்ட் ரிஷிகேஷ் கார்த்திகேயா சுவாமி



படம் 2 - தியானம் செய்வதற்கு உகந்த இமயமலைப் பகுதி ரிஷிகேஷ் கார்த்திகேயா கோவில்



Comments

Popular posts from this blog

கோவில் 609 - மலேசியா கெடா சுங்கை பெடானி சுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 1056 - செங்கல்பட்டு எலப்பாக்கம் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 316 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்