கோவில் 609 - மலேசியா கெடா சுங்கை பெடானி சுப்பிரமணிய சுவாமி கோவில்
🙏🏻🙏🏻 தினம் ஒரு முருகன் ஆலயம்-609
தெய்வீக அதிர்வை உணர்த்தும் மலேசியா கெடா சுங்கை பெடானி சுப்பிரமணிய சுவாமி கோவில்
7.2.2023 செவ்வாய்
அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்
ஜாலான் குவாலா கெட்டில் (Jalan Kuala Ketil)
08000 சுங்கை பெடானி (Sungai Petani)
கெடா மாநிலம் (Kedah State)
மலேசியா (Malaysia)
இருப்பிடம்: கெடா 63 கிமீ, சுங்கை பெடானி 2 கிமீ
மூலவர்: சுப்பிரமணிய சுவாமி
தலமகிமை:
மலேசியாவின் வடக்கே உள்ள கெடா மாநிலம் கெடா நகரிலிருந்து 63 கிமீ தொலைவில் சுங்கை பெடானி சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. கெடா மாநிலம் தாய்லாந்து நாட்டு அருகாமையில் உள்ளது. சுங்கை என்றால் ஆறு. பெடானி என்றால் விவசாயம். தமிழ் மக்கள் இவ்வூரை சுங்கை பட்டாணி என்றும் அழைக்கின்றனர். விவசாய செழிக்கும் இப்பகுதியில் சுப்பிரமணிய சுவாமி கோவில் கொண்டு மக்களை நல்வழி படுத்தி அருளுகின்றார்.
மயிகள் சூழ்ந்த இத்திருக்கோவிலுக்கு வேண்டி வரும் பக்தர்களுக்கு முருகப்பெருமான் மன அமைதி கொடுத்து அருள்கின்றார். திருமுருக கிருபானந்த வாரியார், ஸ்ரீ மதுரை ஆதீனம், ஸ்ரீ பிச்சை குருக்கள் எனப் பல புனிதர்கள் இக்கோவிலுக்குச் சென்றுள்ளனர். சுப்பிரமணியரின் ஆன்மீகக் கோட்டையின் தெய்வீக அதிர்வை அனைவரும் அனுபவித்திருக்கிறார்கள்.
தல வரலாறு:
சுங்கை பெடானி வாழ் முருக பக்தர்களால் இக்கோவில் கட்டுமானம் 1914-ல் ஆரம்பிக்கபட்டது. முதல் மகா கும்பாபிஷேகம் 1924-ல் நடைபெற்றது. இரண்டாவது மகா கும்பாபிஷேகம் 1997-ல் நடைபெற்றது. ஒரு சமயம் சிங்கப்பூரிலிருந்து வந்த செவிலியர் ஒருவருக்கு புற்றுநோய் ஏற்பட்டது. இந்த முருகப்பெருமானை வேண்டி வழிபட்ட உடன் அதிசயமாக புற்றுநோயிலீருந்து காப்பாற்றப்பட்டார். அது போல இங்கு வந்து வேண்டிய கெட்டவர்கள், ரவுடிகளைக் கூட முருகப்பெருமான் நல்வழி படுத்தியதாக வரலாறு.
தல அமைப்பு:
கோவிலின் ராஜகோபுரம் கம்பீரமாக உள்ளது. 2 வேல்கள் பிரமாண்டமாக உள்ளன. இக்கோவிலின் சுப்பிரமணிய சுவாமி சிலை முதலில் இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்டு லண்டனுக்கு அனுப்பப்பட்டது. பின்னர் சிலை தற்போதைய இடத்திற்கு வந்தது. எனவே இக்கோவிலின் சுப்பிரமணிய சுவாமி லண்டன் முருகர் என்றும் அன்புடன் அழைக்கப்படுகிறார். சுப்பிரமணிய சுவாமி ஆண்டிக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். மேலும் விநாயகர், முனீஸ்வரர், நவக்கிரகங்கள் அருளுகின்றனர்.
திருவிழா:
தைப்பூசம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், பங்குனி உத்திரம், கிருத்திகை, சஷ்டி
பிரார்த்தனை:
தெய்வீக அதிர்வை உணர்த்த, கெட்டவர்களை திருத்த, நல்லன நடக்க
நேர்த்திக்கடன்:
பால்குடம், காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
கெட்டவர்களையும் திருத்தும் மலேசியா கெடா சுங்கை பெடானி சுப்பிரமணிய சுவாமியை போற்றி வணங்குவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்
Dr K. முத்துக்குமரன் Ph. D
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
படம் 1 - 609 தெய்வீக அதிர்வை உணர்த்தும் மலேசியா கெடா சுங்கை பெடானி சுப்பிரமணிய சுவாமி கோவில் 2 வேல்கள்
படம் 2 - 609 கெட்டவர்களையும் திருத்தும் மலேசியா கெடா சுங்கை பெடானி சுப்பிரமணிய சுவாமி கோவில்
Comments
Post a Comment