கோவில் 1056 - செங்கல்பட்டு எலப்பாக்கம் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்

 🙏🏻🙏🏻                                                                                                       

தினம் ஒரு முருகன் ஆலயம்-1056

வினைகள் தீர்க்கும் செங்கல்பட்டு எலப்பாக்கம் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் 

29.4.2024 திங்கள்


அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்

எலப்பாக்கம்-603201

மதுராந்தகம் வட்டம்

செங்கல்பட்டு மாவட்டம் 

இருப்பிடம்: செங்கல்பட்டு 42 கிமீ, மதுராந்தகம் 29 கிமீ, மேல்மருவத்தூர் 15 கிமீ அச்சரபாக்கம் 12 கிமீ, 


மூலவர்: சிவசுப்பிரமணிய சுவாமி

தேவியர்: வள்ளி, தெய்வானை

புராணப்பெயர்: சதனபுரி

பழமை: 1912 (செவி வழி செய்தி)


தல மகிமை:

செங்கல்பட்டு மாவட்டம் செங்கல்பட்டு நகரிலிருந்து 42 கிமீ தொலைவில் மதுராந்தகம் வட்டத்தில் உள்ள எலப்பாக்கம் கிராமத்தில் வினைகள் தீர்க்கும் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. மதுராந்தகத்திலிருந்து 29 கிமீ தூரமும், மேல்மருவத்தூரிலிருந்து 15 கிமீ தூரமும் பிரயாணம் செய்தால் இக்கோவிலை அடையலாம். இக்கோவிலில் வள்ளி, தெய்வானை சமேத சிவசுப்பிரமணிய சுவாமி அருளாட்சி செய்கின்றார். இத்திருத்தலம் நான்கு புறமும் சிறப்பு மிக்க திருத்தலங்கள் இருப்பது சிறப்பம்சம். 


பேறை நகர் (பெரும்பேர் கண்டிகை) வள்ளி, தெய்வானை சமேத சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் [அடியேனின் முருகன் ஆலயம் 143] மேற்கிலும், ஓரத்தி பர்வதாம்பிகை உடனுறை பரசுராமேஸ்வரர் கோவில் வடக்கிலும், எய்பாக்கம் விசாலாட்சி அம்பிகை உடனுறை திருவந்தீஸ்வரர் கோவில் கிழக்கிலும், வேலாமூர் புவனேஸ்வரி உடனுறை அகத்தீஸ்வரர் கோவில் தெற்கிலும் அமையப் பெற்றுள்ள திருத்தலங்களுக்கு நடுநாயகமாக வேண்டுவோருக்கு வேண்டும் வரம் தரும் எலப்பாக்கம் (சதனபுரி) சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் விளங்குகின்றது. 36 வருடங்களாக பங்குனி உத்திர திருவிழா (2 நாட்கள்) வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. இக்கோவிலில் முருகப்பெருமானின் அனைத்து திருவிழாக்களும் சிறப்பாக நடைபெறுகின்றன. கார்த்திகை, சஷ்டி, செவ்வாய் தினங்களில் விசேஷ பூஜைகள் நடக்கின்றன.

       

தல வரலாறு:

நூறு ஆண்டுகளுக்கும் மேல் பழமையான இக்கோவிலின் மகா கும்பாபிஷேகம் 9.2.2014-ல் மிக சிறப்பாக நடைபெற்றது.


தல அமைப்பு:

அழகிய அமைப்புடன் இக்கோவில் கருவறையில் சிவசுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானையுடன் ஒரே கற்பீடத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். மேலும் விநாயகர், தட்சிணாமூர்த்தி, துர்க்கை, சிவபெருமான், சக்தி, பைரவர், நவக்கிரகங்கள் உள்ளிட்ட அனைத்து தெய்வங்களும் அருள்பாலிக்கின்றனர்.  


திருவிழா:

கந்த சஷ்டி, பங்குனி உத்திரம், தைப்பூசம், ஆடிக்கிருத்திகை, கார்த்திகை, சஷ்டி, செவ்வாய்


பிரார்த்தனை:

வினைகள் தீர, வேண்டியது நிறைவேற, குடும்ப ஒற்றுமை ஓங்க, நல்லன நடக்க, திருமண வரம், குழந்தை வரம் வேண்டி


நேர்த்திக்கடன்:

அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல்


வேண்டியதை நிறைவேற்றும் செங்கல்பட்டு எலப்பாக்கம் சிவசுப்பிரமணிய சுவாமியை போற்றி வணங்குவோம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


முருகாலய முரசு

Dr K. முத்துக்குமரன் Ph. D

9489302842

கோயம்புத்தூர் 25

🙏🏻🙏🏻


படம் 1 - 1056 வினைகள் தீர்க்கும் செங்கல்பட்டு எலப்பாக்கம் சிவசுப்பிரமணிய சுவாமி


படம் 2 - 1056 வேண்டியதை நிறைவேற்றும் செங்கல்பட்டு எலப்பாக்கம் சிவசுப்பிரமணிய சுவாமி


Comments

Popular posts from this blog

கோவில் 609 - மலேசியா கெடா சுங்கை பெடானி சுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 316 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்