கோவில் 1748 - திருப்பூர் தேவனூர்புதூர் பாலமுருகன் கோவில்

 🙏🏻🙏🏻

தினம் ஒரு முருகன் ஆலயம்-1748

தீராத பிரச்னைகளை தீர்க்கும் திருப்பூர் தேவனூர்புதூர் பாலமுருகன் கோவில்

22.03.2026 ஞாயிறு


அருள்மிகு பாலமுருகன் திருக்கோவில் [TM013562]

[அ/மி விநாயகர் திருக்கோவில்]

தேவனூர்புதூர் 642207

உடுமலைப்பேட்டை வட்டம்

திருப்பூர் மாவட்டம்


இருப்பிடம்: திருப்பூர் 83 கிமீ, பொள்ளாச்சி 13 கிமீ, ஆனைமலை 19 கிமீ, உடுமலைப்பேட்டை 20 கிமீ


மூலவர்: பாலமுருகன்

உற்சவர்: பாலமுருகன்


தல மகிமை:

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வட்டம் தேவனூர்புதூர் கிராமத்தில் தீராத பிரச்னைகளை தீர்க்கும் தேவனூர்புதூர் பாலமுருகன் கோவில் அமைந்துள்ளது. இத்திருக்கோவிலில் விநாயகப்பெருமானும் முக்கிய தெய்வமாக அருள்பாலிப்பதால், இக்கோவில் விநாயகர் திருக்கோவில் என்றும் அழைக்கப்படுகின்றது.


திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வட்டம் தேவனூர்புதூர் பாலமுருகன் கோவில் திருப்பூர் பேருந்து நிலையத்திலிருந்து 83 கிமீ தொலைவு அல்லது பொள்ளாச்சி பேருந்து நிலையத்திலிருந்து 13 கிமீ தொலைவு அல்லது ஆனைமலை பேருந்து நிலையத்திலிருந்து 19 கிமீ தொலைவு அல்லது உடுமலைப்பேட்டை பேருந்து நிலையத்திலிருந்து 20 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் தேவனூர்புதூர் பாலமுருகன் கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் பாலமுருகன் அழகு பாலகனாக அருளாட்சி புரிகின்றார்.


திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வட்டம் தேவனூர்புதூர் பாலமுருகன் கோவிலில் முக்கியத் திருவிழாவாக தைப்பூசம் ஒவ்வொரு வருடமும் விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றது. மேலும் இத்திருக்கோவிலில் பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை உள்ளிட்ட முருகப்பெருமானின் எல்லாத் திருவிழாக்களும் சிறப்பு பூஜைகளுடன் கொண்டாடப்படுகின்றன. சஷ்டி, கிருத்திகை போன்ற திருநாட்களில் விசேஷ வழிபாடுகள் நடக்கின்றன. விநாயகர் சதுர்த்தி திருவிழாவும் சிறப்புப் பூஜைகளுடன் ந்டைபெறுகின்றது.


தல வரலாறு:

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வட்டம் தேவனூர்புதூர் பாலமுருகன் கோவில் மிகவும் பழமையான கோவிலாகும். இத்திருக்கோவில் நிர்வாகத்தை இந்து அறநிலையத்துறை தற்போது நிர்வகித்து வருகிறது.


தல அமைப்பு:

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வட்டம் தேவனூர்புதூர் பாலமுருகன் கோவில் அழகிய கோபுரத்தைக் கொண்டுள்ளது. இத்திருக்கோவில் கருவறையில் மூலவர் பாலமுருகன் அழகு பாலகனாக கையில் வேலுடன் ஆற்றலுடன் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் மயில், பலிபீடம் உள்ளன. மேலும் இத்திருக்கோவிலில் விநாயகர், உற்சவர் உள்ளிட்ட தெய்வங்களும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.


திருவிழா:

தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, விநாயகர் சதுர்த்தி, சஷ்டி, கிருத்திகை


பிரார்த்தனை:

தீராத பிரச்னைகள் தீர, வேண்டியதை தந்தருள, இரு வினைகள் அகல, சகல பிணிகள் போக்க, கல்வி, ஞானம் மேம்பட, குழந்தை வரம் வேண்டி, குடும்ப ஒற்றுமை ஓங்க, உடல் நிலை சீராக, மன நிம்மதி பெற, நல்வாழ்வு கிட்ட, வியாபாரம் சிறக்க, தோஷங்கள் விலக

நேர்த்திக்கடன்:

பால்குடம், காவடி அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்


வேண்டியதை தந்தருளும் திருப்பூர் தேவனூர்புதூர் பாலமுருகனை தாள் பணிந்திடுவோம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


முருகாலய முரசு

சைவ சித்தாந்தச் சுடர்

சைவ நெறிச் செம்மல்

Dr K. முத்துக்குமரன் Ph. D

9489302842

bamikumar@gmail.com

🙏🏻🙏🏻


படம் 1 - 1748 தீராத பிரச்னைகளை தீர்க்கும் திருப்பூர் தேவனூர்புதூர் பாலமுருகன் கோவில்


படம் 2 - 1748 வேண்டியதை தந்தருளும் திருப்பூர் தேவனூர்புதூர் பாலமுருகன் கோவில்

Comments

Popular posts from this blog

கோவில் 1319 - சேலம் மல்லிகுந்தம் சின்ன பழனியாண்டவர் கோவில்

கோவில் 1341 - சேலம் பள்ளப்பட்டி பழனி பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில்

கோவில் 1326 - சேலம் K R தோப்பூர் பாலமுருகன் கோவில்