கோவில் 1698 - மலேசியா சிலாங்கூர் காப்பார் தண்டாயுதபாணி கோவில்

 🙏🏻🙏🏻

தினம் ஒரு முருகன் ஆலயம்-1698

சங்கடங்கள் தீர்க்கும் மலேசியா சிலாங்கூர் காப்பார் தண்டாயுதபாணி கோவில்

31.01.2026 சனி


அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவில்

Jalan Besar

42200 காப்பார் [Kapar]

கிள்ளான் மாவட்டம் [Klang District]

சிலாங்கூர் மாநிலம் [Selangor State]

மலேசியா [Malaysia]


இருப்பிடம்: கோலாலம்பூர் [Kuala Lumpur] 44 கிமீ, காப்பார் [Kapar] 1 கிமீ, மேரு [Meru] 9 கிமீ, கிள்ளான் [Klang] 23 கிமீ, சா ஆலாம் [Shah Alam] 24 கிமீ, சுபாங் ஜெயா [Subang Jaya] 33 கிமீ, பெட்டாலிங் ஜெயா [Petaling Jaya] 38 கிமீ


மூலவர்: தண்டாயுதபாணி

உற்சவர்: தண்டாயுதபாணி

சிறப்பு: 27 அடி ராஜ அலங்கார முருகன்


தல மகிமை:

மலேசியா நாட்டில் மேற்கே அமைந்துள்ள சிலாங்கூர் மாநிலம் [Selangor State] கிள்ளான் மாவட்டம் [Klang District] காப்பார் [Kapar] நகரில் சங்கடங்கள் தீர்க்கும் காப்பார் தண்டாயுதபாணி கோவில் அமைந்துள்ளது. இத்திருக்கோவில் வாயிலில் 27 அடி ராஜ அலங்கார முருகன் அருள்பாலிப்பது சிறப்பம்சமாகும்.


இத்திருக்கோவில் கோலாலம்பூர் பேருந்து நிலையத்திலிருந்து [Kuala Lumpur] 25 கிமீ தொலைவு அல்லது காப்பார் [Kapar] பேருந்து நிலையத்திலிருந்து 1 கிமீ தொலைவு அல்லது மேரு [Meru] பேருந்து நிலையத்திலிருந்து 9 கிமீ தொலைவு அல்லது கிள்ளான் [Klang] பேருந்து நிலையத்திலிருந்து 23 கிமீ ,தொலைவு அல்லது சா ஆலாம் [Shah Alam] பேருந்து நிலையத்திலிருந்து 24 கிமீ தொலைவு அல்லது சுபாங் ஜெயா [Subang Jaya] பேருந்து நிலையத்திலிருந்து 33 கிமீ தொலைவு அல்லது பெட்டாலிங் ஜெயா [Petaling Jaya] பேருந்து நிலையத்திலிருந்து 38 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் காப்பார் தண்டாயுதபாணி கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் தண்டாயுதபாணி தனது திருக்கையில் தண்டம் ஏந்தி அருள்கின்றார்.


மலேசியா சிலாங்கூர் மாநிலம் கிள்ளான் மாவட்டம் காப்பார் தண்டாயுதபாணி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திரத் திருவிழா 11 நாட்கள் மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றது. அதிக அளவில் பக்தர்கள் காவடி ஏந்தி வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். பங்குனி உத்திரத் திருநாளன்று சுவாமி ரத ஊர்வலம் இத்திருவிழாவின் சிறப்பம்சமாகும். கந்த சஷ்டி திருவிழா 6 நாட்கள் விமரிசையாக நடைபெறுகின்றது. தினமும் பெருமானுக்கு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனைகள் நடைபெறுகின்றது. பக்தர்கள் விரதமிருந்து, பெருமானை வழிபட்டு செல்கின்றனர். ஆறாம் நாள் மாலை சூரசம்ஹாரம் சிறப்பாக நடைபெறுகின்றது. மேலும் இத்திருக்கோவிலில் தண்டாயுதபாணி சுவாமிக்கு தைப்பூசம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை உள்ளிட்ட அனைத்துத் திருவிழாக்களும் சிறப்புப் பூஜைகளுடன் கொண்டாடப்படுகின்றன. சஷ்டி, கிருத்திகை, பிரதோஷம் முதலான திருநாட்களில் சிறப்புப் பூஜைககள் நடக்கின்றன. தமிழ், ஆங்கில வருட பிறப்பு, தீபாவளி, பொங்கல், விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி உள்ளிட்ட அனைத்து இந்து பண்டிகைகளும் சிறப்புப் பூஜைகளுடன் நடைபெறுகின்றன.


தல வரலாறு:

மலேசியா சிலாங்கூர் மாநிலம் கிள்ளான் மாவட்டம் காப்பார் தண்டாயுதபாணி கோவில் இங்கு வாழ்ந்த தமிழர்களால் 1940-ல் உருவாக்கப்பட்டது. இப்பகுதியில் பிரசித்திப் பெற்ற இத்திருக்கோவிலில் திருப்பணி வேலைகள் மேற்கொள்ளப்பட்டு 1956, 1986, 1998-ல் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றன.

தல அமைப்பு:

மலேசியா சிலாங்கூர் மாநிலம் கிள்ளான் மாவட்டம் காப்பார் தண்டாயுதபாணி கோவில் அழகிய கட்டிட அமைப்புடன் அமைந்துள்ளது. இத்திருக்கோவில் கருவறையில் மூலவர் தண்டாயுதபாணி தனது திருக்கையில் தண்டம் ஏந்தி நின்ற திருக்கோலத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு ஆற்றலுடன் அருள்பாலிக்கின்றார். மூலவர் தண்டாயுதபாணி சுவாமி ராஜ அலங்காரத்தில் அருள்பாலிப்பது சிறப்பம்சம். கருவறைக்கு எதிரில் மயில், பலிபீடம் உள்ளன. இத்திருக்கோவிலில் விநாயகர், உற்சவர், சிவபெருமான், அம்பாள், ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீனிவாச வெங்கடேச பெருமாள் உட்பட எல்லா தெய்வங்களும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.


மேலும் திருக்கோவில் வாயிலில் 27 அடி முருகன் சிலை ராஜ அலங்காரத்தில் அருள்பாலிக்கின்றார்.


திருவிழா:

பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, தைப்பூசம், வைகாசி விசாகம், சித்ரா பௌர்ணமி, திருக்கார்த்திகை, விநாயகர் சதுர்த்தி, தீபாவளி, பொங்கல், தமிழ், ஆங்கில புத்தாண்டு தினம், சஷ்டி, கிருத்திகை, பிரதோஷம்


பிரார்த்தனை:

சங்கடங்கள் தீர, சகல தோஷங்களும் நீங்க, வேண்டியவை கிடைக்க, வினைகள் போக்க, பிணிகள் அகல, குழந்தை பாக்கியம் வேண்டி, உடல் ஆரோக்கியம் உண்டாக, ஆனந்தம் பெற, மன மகிழ்ச்சி கிட்ட, நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்க


நேர்த்திக்கடன்:

பால்குடம், காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்


திறக்கும் நேரம்:

காலை 6-9 மாலை 6-9


சகல தோஷங்களையும் நீக்கியருளும் மலேசியா சிலாங்கூர் காப்பார் தண்டாயுதபாணியை போற்றி வணங்குவோம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


முருகாலய முரசு

சைவ சித்தாந்தச் சுடர்

சைவ நெறிச் செம்மல்

Dr K. முத்துக்குமரன் Ph. D

9489302842

bamikumar@gmail.com

கோயம்புத்தூர் 25

🙏🏻🙏🏻


படம் 1 - 1698 சங்கடங்கள் தீர்க்கும் மலேசியா சிலாங்கூர் காப்பார் தண்டாயுதபாணி


படம் 2 - 1698 சகல தோஷங்களையும் நீக்கியருளும் மலேசியா சிலாங்கூர் காப்பார் தண்டாயுதபாணி

Comments

Popular posts from this blog

கோவில் 1319 - சேலம் மல்லிகுந்தம் சின்ன பழனியாண்டவர் கோவில்

கோவில் 1326 - சேலம் K R தோப்பூர் பாலமுருகன் கோவில்

கோவில் 1341 - சேலம் பள்ளப்பட்டி பழனி பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில்