கோவில் 1658 - மலேசியா கோலாலம்பூர் பெரிய மருத்துவமனை திருமுருகன் கோவில்

🙏🏽🙏🏽                                                                                                                                                         

தினம் ஒரு முருகன் ஆலயம்-1658

கேட்டதை கொடுத்தருளும் மலேசியா கோலாலம்பூர் பெரிய மருத்துவமனை திருமுருகன் கோவில்

22.12.2025 திங்கள்


அருள்மிகு திருமுருகன் திருக்கோவில்

Lorong Raja Muda 

பெரிய மருத்துவமனை KL [General Hospital KL]

 50400 கோலாலம்பூர் Kuala Lumpur] 

கோலாலம்பூர் கூட்டரசு பிரதேசம் [Federal Territory of Kuala Lumpur] 

மலேசியா [Malaysia]

இருப்பிடம்: கோலாலம்பூர் விமான நிலையம் [Kuala Lumpur Airport] 61 கிமீ, கோலாலம்பூர் பேருந்து நிலையம் [Kuala Lumpur Bus Terminal Station] 8 கிமீ,  மலாக்கா [Malacca] 153 கிமீ, ஈப்போ [Ipoh] 209 கிமீ, பினாங்கு [Penang] 354 கிமீ 


மூலவர்: திருமுருகன்

உற்சவர்: திருமுருகன் & திருமுருகன் வள்ளி, தெய்வானை


தல மகிமை:

மலேசியா தலைநகரம் கோலாலம்பூரில் உள்ள  பெரிய மருத்துவமனை வட்டாரத்தில் கேட்டதை கொடுத்தருளும் கோலாலம்பூர் பெரிய மருத்துவமனை திருமுருகன் கோவில் அமைந்துள்ளது. 


இத்திருக்கோவில் மலேசியா தலைநகரம் கோலாலம்பூர் [Kuala Lumpur] விமான நிலையத்திலிருந்து 61 கிமீ தொலைவு அல்லது கோலாலம்பூர் [Kuala Lumpur] பேருந்து நிலையத்திலிருந்து 8 கிமீ தொலைவு அல்லது ஈப்போ [Ipoh] பேருந்து நிலையத்திலிருந்து 153 கிமீ தொலைவு அல்லது பினாங்கு [Penang] பேருந்து நிலையத்திலிருந்து 354 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் கோலாலம்பூர் பெரிய மருத்துவமனை திருமுருகன் கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் திருமுருகன் கையில் வேலுடன் நின்ற திருக்கோலத்தில் வீற்றிருந்து அருள்புரிகின்றார். 


மலேசியா கோலாலம்பூர் பெரிய மருத்துவமனை திருமுருகன் கோவிலில் ஆண்டு தோறும் சித்ரா பௌர்ணமி 10 நாட்கள் சிறப்புப் பூஜைகளுடன் விமரிசையாக நடைபெறுகின்றது. தைப்பூசத் திருவிழா விசேஷ பூஜைகளுடன் கோலாகலமாக நடைபெறுகின்றது. பக்தர்கள் காவடி ஏந்தி வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். கந்த சஷ்டி திருவிழா தினமும் அபிஷேகம், அலங்காரம், சிறப்பு தீபாராதனைகளுடன் நடைபெறுகின்றது. சூரம்சம்ஹாரம் முக்கிய நிகழ்வாகும். மேலும் இத்திருக்கோவிலில் முருகப்பெருமானின் பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், மாசி மகம், திருக்கார்த்திகை உள்ளிட்ட எல்லா திருவிழாக்களும் சிறப்புப் பூஜைகளுடன் கொண்டாடப்படுகின்றன. சஷ்டி, கிருத்திகை திருநாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. தமிழ், ஆங்கில வருட பிறப்பு, தீபாவளி, பொங்கல், விநாயகர் சதுர்த்தி, மகா சிவராத்திரி, உள்ளிட்ட அனைத்து இந்து பண்டிகைகளும் விசேஷ வழிபாடுகளுடன் நடைபெறுகின்றன.

 

தல வரலாறு:

மலேசியா கோலாலம்பூர் பெரிய மருத்துவமனை திருமுருகன் கோவில் நகரின் மையத்தில் அமைந்த முக்கியமான முருகன் கோவிலாகும்.


தல அமைப்பு: 

மலேசியா கோலாலம்பூர் பெரிய மருத்துவமனை கோவிலில் அழகிய கோபுரங்கள் மற்றும் சிற்பங்கள் அமைந்துள்ளன. இக்கோவிலினுள் நுழைந்தவுடன் கருவறை எதிரில் அழகிய கொடிமரம் உள்ளது.  இத்திருக்கோவில் கருவறையில் மூலவர் திருமுருகன் கையில் வேலுடன் நின்ற திருக்கோலத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் மயில், பலிபீடம் உள்ளன. மேலும் இத்திருக்கோவிலில் விநாயகர், உற்சவர்கள், கோஷ்ட தெய்வங்கள், சிவபெருமான், உமையம்மை, துர்க்கை, மாரியம்மன், முனீஸ்வரர், பைரவர், நவக்கிரகங்கள் உட்பட எல்லா தெய்வங்களும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர். 


திருவிழா: 

சித்ரா பௌர்ணமி, தைப்பூசம், கந்த சஷ்டி, பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, மாசி மகம், மகா சிவராத்திரி, விநாயகர் சதுர்த்தி, தீபாவளி, பொங்கல், தமிழ், ஆங்கில புத்தாண்டு தினம், பிரதோஷம், சஷ்டி, கிருத்திகை


பிரார்த்தனை:

கேட்டதை கொடுத்தருள, ஐஸ்வர்யங்கள் பெருக, வினைகள் தீர, பிணிகள் விலக, திருமண வரம், குழந்தை வரம் வேண்டி, குடும்ப ஒற்றுமை ஓங்க, நோய்கள் குணமாக, நல்லன நடைபெற, மன மகிழ்ச்சி கிடைக்க, ஆனந்தம் அருள, தோஷங்கள் அகல 

   

நேர்த்திக்கடன்:

பால்குடம், காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்


ஐஸ்வர்யங்கள் பெருக அருளும் மலேசியா கோலாலம்பூர் பெரிய மருத்துவமனை திருமுருகன் திருவடிகள் பணிந்து வணங்குவோம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


முருகாலய முரசு

சைவ சித்தாந்தச் சுடர்

சைவ நெறிச் செம்மல்

Dr K. முத்துக்குமரன் Ph. D

9489302842

bamikumar@gmail.com 

கோயம்புத்தூர் 25

🙏🏽🙏🏽


படம் 1 - 1658 கேட்டதை கொடுத்தருளும் மலேசியா கோலாலம்பூர் பெரிய மருத்துவமனை திருமுருகன்



படம் 2 - 1658 ஐஸ்வர்யங்கள் பெருக அருளும் மலேசியா கோலாலம்பூர் பெரிய மருத்துவமனை திருமுருகன்


 

Comments

Popular posts from this blog

கோவில் 1319 - சேலம் மல்லிகுந்தம் சின்ன பழனியாண்டவர் கோவில்

கோவில் 1326 - சேலம் K R தோப்பூர் பாலமுருகன் கோவில்

கோவில் 316 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்