கோவில் 1656 - மலேசியா பேராக் லங்காப் சுப்பிரமணியர் கோவில்

 🙏🏽🙏🏽

தினம் ஒரு முருகன் ஆலயம்-1656

சங்கடங்கள் தீர்க்கும் மலேசியா பேராக் லங்காப் சுப்பிரமணியர் கோவில்

20.12.2025 சனி


அருள்மிகு சுப்பிரமணியர் திருக்கோவில்

Jalan Kampar

36700 லங்காப் [Langkap]

ஈலிர் பேராக் மாவட்டம் [Hilir Perak District]

பேராக் மாநிலம் [Perak]

மலேசியா [Malaysia]

இருப்பிடம்: கோலாலம்பூர் [Kuala Lumpur] 158 கிமீ, தெலுக் இந்தான் [Teluk Intan] 27 கிமீ, சுங்கை [Sungkai] 64 கிமீ, பீடோர் [Bidor] 67 கிமீ, தாப்பா [Tapah] 67 கிமீ, ஈப்போ [Ipoh] 125 கிமீ, பினாங்கு [Penang] 224 கிமீ


மூலவர்: சுப்பிரமணியர்

உற்சவர்: சுப்பிரமணியர் வள்ளி, தெய்வானி


தல மகிமை:

மலேசியா நாட்டின் தலைநகரம் கோலாலம்பூருக்கு வடக்கே அமைந்துள்ள பேராக் [Perak] மாநிலம் ஈலிர் பேராக் மாவட்டத்தில் [Hilir Perak District] உள்ள லங்காப் [Ternoh] நகரில் சங்கடங்கள் சங்கடங்கள் தீர்க்கும் லங்காப் சுப்பிரமணியர் கோவில் அமைந்துள்ளது.


இத்திருக்கோவில் மலேசியா நாட்டின் தலைநகரம் கோலாலம்பூர் [Kuala Lumpur] பேருந்து நிலையத்திலிருந்து 158 கிமீ தொலைவு அல்லது தெலுக் இந்தான் [Teluk Intan] பேருந்து நிலையத்திலிருந்து 27 கிமீ தொலைவு அல்லது சுங்கை [Sungkai] பேருந்து நிலையத்திலிருந்து 64 கிமீ தொலைவு அல்லது பீடோர் [Bidor] பேருந்து நிலையத்திலிருந்து 67 கிமீ தொலைவு அல்லது தாப்பா [Tapah] பேருந்து நிலையத்திலிருந்து 67 கிமீ தொலைவு அல்லது ஈப்போ [Ipoh] பேருந்து நிலையத்திலிருந்து 125 கிமீ தொலைவு அல்லது பினாங்கு [Penang] பேருந்து நிலையத்திலிருந்து 224 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் லங்காப் சுப்பிரமணியர் கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் சுப்பிரமணியர் அபய கரம் நீட்டி அளித்து அருளாட்சி புரிகின்றார்.


மலேசியா பேராக் மாநிலம் ஈலிர் பேராக் மாவட்டம் லங்காப் சுப்பிரமணியர் கோவிலில் தைப்பூசத் திருவிழா ஆண்டு தோறும் சிறப்புப் பூஜைகளுடன் விமரிசையாக நடைபெறுகின்றது. பக்தர்கள் காவடி ஏந்தி வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். கந்த சஷ்டி திருவிழா தினமும் அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகளுடன் சிறப்பாக நடைபெறுகின்றது. ஆறாம் நாள் மாலை நடைபெறும் சூரம்சம்ஹாரம் முக்கிய நிகழ்வாகும். மேலும் இத்திருக்கோவிலில் முருகப்பெருமானின் பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், மாசி மகம், திருக்கார்த்திகை, சித்ரா பௌர்ணமி உள்ளிட்ட அனைத்து திருவிழாக்களும் சிறப்புப் பூஜைகளுடன் கொண்டாடப்படுகின்றன. சஷ்டி, கிருத்திகை திருநாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. தமிழ், ஆங்கில வருட பிறப்பு, தீபாவளி, பொங்கல், நவராத்திரி, விநாயகர் சதுர்த்தி, மகா சிவராத்திரி, உள்ளிட்ட அனைத்து இந்து பண்டிகைகளும் விசேஷ வழிபாடுகளுடன் நடைபெறுகின்றன.

தல வரலாறு:

மலேசியா பேராக் மாநிலம் ஈலிர் பேராக் மாவட்டம் லங்காப் சுப்பிரமணியர் கோவில் 1960-களில் ஆரம்பிக்கப்பட்டது. 2005-ல் இப்பகுதியில் கோவில் விஸ்தாராமாக அமைக்கப்பட்டது. இப்பகுதியில் இக்கோவில் முக்கியமான கோவிலாகும்.


தல அமைப்பு:

மலேசியா பேராக் மாநிலம் ஈலிர் பேராக் மாவட்டம் லங்காப் சுப்பிரமணியர் கோவில் ஆகம விதிகளின் படி அமைந்துள்ளது. இக்கோவிலினுள் நுழைந்தவுடன் அழகிய கொடிமரம் உள்ளது. இத்திருக்கோவில் கருவறையில் சுப்பிரமணியர் வலக்கரம் அபயம் அளிக்கும் திருக்கோலத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் மயில், பலிபீடம் உள்ளன. மேலும் இத்திருக்கோவிலில் விநாயகர், உற்சவர், சிவபெருமான், முனீஸ்வரர், நவக்கிரகங்கள் உட்பட அனைத்துத் தெய்வங்களும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.


திருவிழா:

தைப்பூசம், கந்த சஷ்டி, பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, சித்ரா பௌர்ணமி, மாசி மகம், மகா சிவராத்திரி, நவராத்திரி, விநாயகர் சதுர்த்தி, தீபாவளி, பொங்கல், தமிழ், ஆங்கில புத்தாண்டு தினம், பிரதோஷம், சஷ்டி, கிருத்திகை


பிரார்த்தனை:

சங்கடங்கள் தீர, வாழ்வில் திருப்பங்கள் ஏற்பட, இரு வினைகள் போக்க, பிணிகள் அகல, சந்தான பாக்கியம் வேண்டி, குடும்ப வாழ்வு சிறக்க, தீராத நோய்கள் குணமாக, மனத் தெளிவு உண்டாக, நல்லன அருள, கல்வி சிறக்க, நேர்மறை எண்ணங்கள் உண்டாக, ஆனந்தம் கிடைக்க, தோஷங்கள் அகல

நேர்த்திக்கடன்:

பால்குடம், காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்


திறக்கும் நேரம்:

காலை 6.30-9 மாலை 6-9


வாழ்வில் திருப்பங்கள் ஏற்பட அருளும் மலேசியா பேராக் லங்காப் சுப்பிரமணியரை போற்றி வணங்குவோம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


முருகாலய முரசு

சைவ சித்தாந்தச் சுடர்

சைவ நெறிச் செம்மல்

Dr K. முத்துக்குமரன் Ph. D

9489302842

bamikumar@gmail.com

கோயம்புத்தூர் 25

🙏🏽🙏🏽


படம் 1 - 1656 சங்கடங்கள் தீர்க்கும் மலேசியா பேராக் லங்காப் சுப்பிரமணியர்



படம் 2 - 1656 வாழ்வில் திருப்பங்கள் ஏற்பட அருளும் மலேசியா பேராக் லங்காப் சுப்பிரமணியர்

Comments

Popular posts from this blog

கோவில் 1319 - சேலம் மல்லிகுந்தம் சின்ன பழனியாண்டவர் கோவில்

கோவில் 1326 - சேலம் K R தோப்பூர் பாலமுருகன் கோவில்

கோவில் 316 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்