கோவில் 1655 - மலேசியா பேராக் துரோனோ சுப்பிரமணியர் கோவில்
🙏🏽🙏🏽
தினம் ஒரு முருகன் ஆலயம்-1655
வாழ்வில் ஏற்றம் தரும் மலேசியா பேராக் துரோனோ சுப்பிரமணியர் கோவில்
19.12.2025 வெள்ளி
அருள்மிகு சுப்பிரமணியர் திருக்கோவில்
Kampung Merbau
31750 துரோனோ ரோடு [Ternoh]
கிந்தா மாவட்டம் [Kinta District]
பேராக் மாநிலம் [Perak]
மலேசியா [Malaysia]
இருப்பிடம்: கோலாலம்பூர் [Kuala Lumpur] 211 கிமீ, பத்து காஜா [Batu Gajah] 12 கிமீ, ஈப்போ [Ipoh] 29 கிமீ, தாப்பா [Tapah] 49 கிமீ, தம்புன் [Tambun] 42 கிமீ, பீடோர் [Bidor] 60 கிமீ, கோலா கங்சார் [Kuala Kangsar] 64 கிமீ, பினாங்கு [Penang] 183 கிமீ
மூலவர்: சுப்பிரமணியர்
உற்சவர்: சுப்பிரமணியர்
தல மகிமை:
மலேசியா நாட்டின் தலைநகரம் கோலாலம்பூருக்கு வடக்கே அமைந்துள்ள பேராக் [Perak] மாநிலம் கிந்தா மாவட்டத்தில் Kinta District] உள்ள துரோனோ [Ternoh] நகரில் சங்கடங்கள் வாழ்வில் ஏற்றம் தரும் துரோனோ சுப்பிரமணியர் கோவில் அமைந்துள்ளது.
இத்திருக்கோவில் மலேசியா நாட்டின் தலைநகரம் கோலாலம்பூர் [Kuala Lumpur] பேருந்து நிலையத்திலிருந்து 211 கிமீ தொலைவு அல்லது பத்து காஜா [Batu Gajah] பேருந்து நிலையத்திலிருந்து 12 கிமீ தொலைவு அல்லது ஈப்போ [Ipoh] பேருந்து நிலையத்திலிருந்து 29 கிமீ தொலைவு அல்லது தம்புன் [Tambun] பேருந்து நிலையத்திலிருந்து 42 கிமீ தொலைவு அல்லது பீடோர் [Bidor] பேருந்து நிலையத்திலிருந்து 60 கிமீ தொலைவு அல்லது கோலா கங்சார் [Kuala Kangsar]] பேருந்து நிலையத்திலிருந்து 64 கிமீ தொலைவு அல்லது பினாங்கு [Penang] பேருந்து நிலையத்திலிருந்து 183 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் துரோனோ சுப்பிரமணியர் கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் சுப்பிரமணியர் கையில் வேலுடன் அபய கரம் நீட்டி அழகிய திருக்கோலத்தில் அருளாட்சி செய்கின்றார்.
மலேசியா பேராக் மாநிலம் கிந்தா மாவட்டம் துரோனோ சுப்பிரமணியர் கோவிலில் வருடந்தோறும் சித்ரா பௌர்ணமி 10 நாட்கள் முக்கிய திருவிழாவாக் சிறப்புப் பூஜைகளுடன் கொண்டாடப்படுகின்றது. தைப்பூசத் திருவிழா மிகவும் விமரிசையாக நடைபெறுகின்றது. முக்கிய திருவிழாக்களில் பக்தர்கள் காவடி ஏந்தி வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். கந்த சஷ்டி பெருவிழா தினமும் அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகளுடன் சிறப்பாக நடைபெறுகின்றது. ஆறாம் நாள் மாலை நடைபெறும் சூரம்சம்ஹாரம் முக்கிய நிகழ்வாகும். மேலும் இத்திருக்கோவிலில் பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், மாசி மகம், திருக்கார்த்திகை உள்ளிட்ட முருகப்பெருமானின் அனைத்து திருவிழாக்களும் சிறப்புப் பூஜைகளுடன் கொண்டாடப்படுகின்றன. தமிழ், ஆங்கில வருட பிறப்பு, தீபாவளி, பொங்கல், சஷ்டி, கிருத்திகை திருநாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. நவராத்திரி, விநாயகர் சதுர்த்தி, மகா சிவராத்திரி, உள்ளிட்ட அனைத்து இந்து பண்டிகைகளும் விசேஷ வழிபாடுகளுடன் நடைபெறுகின்றன.
தல வரலாறு:
மலேசியா பேராக் மாநிலம் கிந்தா மாவட்டம் துரோனோ சுப்பிரமணியர் கோவில் நூறாண்டுகள் பழைமையானாதாகும். கிந்தா மாவட்டத்தில் சிறப்புப் பெற்ற முருகப்பெருமான் கோவிலாகும்.
தல அமைப்பு:
மலேசியா பேராக் மாநிலம் கிந்தா மாவட்டம் துரோனோ சுப்பிரமணியர் கோவில் அழகிய கோபுரங்கள் மற்றும் சிற்பங்களுடன் அமைந்துள்ளது. இக்கோவிலினுள் நுழைந்தவுடன் அழகிய கொடிமரம் உள்ளது. இத்திருக்கோவில் கருவறையில் சுப்பிரமணியர் வலக்கரத்தில் தண்டம் ஏந்தியபடியும், இடக்கரத்தை இடுப்பில் வைத்தப்படி வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் மயில், பலிபீடம் உள்ளன. மேலும் விநாயகர், உற்சவர், சிவபெருமான், பார்வதி, சண்டிகேஸ்வரர், மாரியம்மன், நவக்கிரகங்கள் உட்பட எல்லா பரிவார மூர்த்திகளும் இத்திருக்கோவிலில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
சித்ரா பௌர்ணமி, தைப்பூசம், கந்த சஷ்டி, பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, மாசி மகம், மகா சிவராத்திரி, நவராத்திரி, விநாயகர் சதுர்த்தி, தீபாவளி, பொங்கல், தமிழ், ஆங்கில புத்தாண்டு தினம், பிரதோஷம், சஷ்டி, கிருத்திகை
பிரார்த்தனை:
வாழ்வில் ஏற்றம் பெற்றிட, மன அமைதி பெற, கேட்டது கிடைக்க, பழ வினைகள் விலக, சகல பிணிகள் போக்க, குழந்தைப்பேறு உண்டாக, குடும்ப ஒற்றுமை ஓங்க, உடல் நலம் வேண்டி, நல்வாழ்வு வாழ, ஆனந்தம் கிடைக்க, தெய்வீக உணர்வுகள் அதிகரிக்க, வியாபாரம், தொழில் மேம்பட, தோஷங்கள் அகல
நேர்த்திக்கடன்:
பால்குடம், காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
மன அமைதி தந்தருளும் மலேசியா பேராக் துரோனோ சுப்பிரமணியர் திருவடிகள் பற்றி வணங்கிடுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
சைவ சித்தாந்தச் சுடர்
சைவ நெறிச் செம்மல்
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
bamikumar@gmail.com
கோயம்புத்தூர் 25
🙏🏽🙏🏽
படம் 1 - 1655 வாழ்வில் ஏற்றம் தரும் மலேசியா பேராக் துரோனோ சுப்பிரமணியர்
Comments
Post a Comment