கோவில் 1654 - மலேசியா பேராக் தாப்பா எஸ்டேட் சிவ சுப்பிரமணியர் கோவில்
🙏🏽🙏🏽
தினம் ஒரு முருகன் ஆலயம்-1654
ஞானம் மேம்பட அருளும் மலேசியா பேராக் தாப்பா எஸ்டேட் சிவ சுப்பிரமணியர் கோவில்
18.12.2025 வியாழன்
அருள்மிகு சிவ சுப்பிரமணியர் திருக்கோவில்
தாப்பா எஸ்டேட் [Tapah Estate]
35400 தாப்பா ரோடு [Tapah Road]
பத்தாங் பாடாங் மாவட்டம் [Batang Padang District]
பேராக் மாநிலம் [Perak]
மலேசியா [Malaysia]
இருப்பிடம்: கோலாலம்பூர் [Kuala Lumpur] 164 கிமீ, தாப்பா [Tapah] 12 கிமீ, பீடோர் [Bidor] 23 கிமீ, தெலுக் இந்தான் [Teluk Intan] 30 கிமீ, சுங்கை [Sungkai] 37 கிமீ, ஈப்போ [Ipoh] 76 கிமீ, பினாங்கு [Penang] 198 கிமீ
மூலவர்: சிவ சுப்பிரமணியர்
உற்சவர்: சிவ சுப்பிரமணியர்
தோற்றம்: 1925
தல மகிமை:
மலேசியா நாட்டின் தலைநகரம் கோலாலம்பூருக்கு வடக்கே அமைந்துள்ள பேராக் [Perak] மாநிலம் பத்தாங் பாடாங் மாவட்டத்தில் [Batang Padang District] உள்ள தாப்பா ரோடு [Tapah Road] நகரில் சங்கடங்கள் தீர்க்கும் தாப்பா ரோடு தாப்பா எஸ்டேட் சிவ சுப்பிரமணியர் கோவில் அமைந்துள்ளது. இத்திருக்கோவில் 1925-ல் இப்பகுதி முருக பக்தர்களால் எழுப்பப்ட்டது.
இத்திருக்கோவில் மலேசியா நாட்டின் தலைநகரம் கோலாலம்பூர் [Kuala Lumpur] பேருந்து நிலையத்திலிருந்து 164 கிமீ தொலைவு அல்லது தாப்பா [Tapah] பேருந்து நிலையத்திலிருந்து 12 கிமீ தொலைவு அல்லது பீடோர் [Bidor] பேருந்து நிலையத்திலிருந்து 23 கிமீ தொலைவு அல்லது தெலுக் இந்தான் பேருந்து நிலையத்திலிருந்து [Teluk Intan] 30 கிமீ தொலைவு அல்லது சுங்கை [Sungkai] பேருந்து நிலையத்திலிருந்து 37 கிமீ தொலைவு அல்லது ஈப்போ [Ipoh] பேருந்து நிலையத்திலிருந்து 76 கிமீ தொலைவு அல்லது பினாங்கு [Penang] பேருந்து நிலையத்திலிருந்து 198 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் தாப்பா ரோடு தாப்பா எஸ்டேட் சிவ சுப்பிரமணியர் கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் சிவ சுப்பிரமணியர் கையில் தண்டம் ஏந்திய திருக்கோலத்தில் அருள்புரிகின்றார்.
மலேசியா பேராக் மாநிலம் பத்தாங் பாடாங் மாவட்டம் தாப்பா ரோடு தாப்பா எஸ்டேட் சிவ சுப்பிரமணியர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசம் மிகவும் விமரிசையாக நடைபெறுகின்றது. சிறப்புப் பூஜைகள் நடக்கின்றன. அதிக அளவில் பக்தர்கள் காவடி ஏந்தி வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். கந்த சஷ்டி 6 நாட்கள் அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகளுடன் சிறப்பாக நடைபெறுகின்றது. ஆறாம் நாள் மாலை சூரம்சம்ஹாரம் நிகழ்வு இத்திருக்கோவிலின் சிறப்பம்சமாகும். மேலும் இத்திருக்கோவிலில் பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், மாசி மகம், திருக்கார்த்திகை, சித்ரா பௌர்ணமி உள்ளிட்ட முருகப்பெருமானின் அனைத்து திருவிழாக்களும் சிறப்புப் பூஜைகளுடன் கொண்டாடப்படுகின்றன. தமிழ், ஆங்கில வருட பிறப்பு, தீபாவளி, பொங்கல், சஷ்டி, கிருத்திகை திருநாட்களில் விசேஷ பூஜைகள் நடைபெறுகின்றன. நவராத்திரி, விநாயகர் சதுர்த்தி, மகா சிவராத்திரி, உள்ளிட்ட அனைத்து இந்து பண்டிகைகளும் சிறப்புப் பூஜைகளுடன் நடைபெறுகின்றன.
தல வரலாறு:
மலேசியா பேராக் மாநிலம் பத்தாங் பாடாங் மாவட்டம் தாப்பா ரோடு தாப்பா எஸ்டேட் சிவ சுப்பிரமணியர் கோவில் நூறாண்டுகள் பழமையான கோவிலாகும். இத்திருக்கோவில் இப்பகுதியில் மிகவும் பிரசித்திப் பெற்றக் கோவிலாகும். இணைய தரவுகளின் படி 2000-ம் ஆண்டில் மகா கும்பாபிஷேகம் சிறப்பாக ந்டந்தேறியது.
தல அமைப்பு:
மலேசியா பேராக் மாநிலம் பத்தாங் பாடாங் மாவட்டம் தாப்பா ரோடு தாப்பா எஸ்டேட் சிவ சுப்பிரமணியர் கோவில் ஆகம விதிகளின் படி கட்டப்பட்டுள்ளது. இக்கோவிலில் அழகிய கொடிமரம் உள்ளது. இத்திருக்கோவில் கருவறையில் சிவ சுப்பிரமணியர் வலக்கரத்தில் தண்டம் ஏந்தியபடியும், இடக்கரத்தை இடுப்பில் வைத்தப்படி வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் மயில், பலிபீடம் உள்ளன. மேலும் இத்திருக்கோவிலில் விநாயகர், உற்சவர், தட்சிணாமூர்த்தி, துர்க்கை, சிவபெருமான், பார்வதி, சண்டிகேஸ்வரர், முனீஸ்வரர், நவக்கிரகங்கள் உள்ளிட்ட அனைத்து தெய்வங்களும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
தைப்பூசம், கந்த சஷ்டி, பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, சித்ரா பௌர்ணமி, மாசி மகம், மகா சிவராத்திரி, நவராத்திரி, விநாயகர் சதுர்த்தி, தீபாவளி, பொங்கல், தமிழ், ஆங்கில புத்தாண்டு தினம், பிரதோஷம், சஷ்டி, கிருத்திகை
பிரார்த்தனை:
ஞானம் மேம்பட அருள, வேண்டியது நிறைவேற, வினைகள் தீர, பிணிகள் அகல, சந்தான பாக்கியம் வேண்டி, குடும்ப வாழ்வு சிறக்க, நோய்கள் குணமடைய, மன மகிழ்ச்சி கிட்ட, நல்லன நடைபெற, துன்பங்கள் போக்க, தொழில் விருத்தியடைய, தோஷங்கள் விலக
நேர்த்திக்கடன்:
பால்குடம், காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
திறக்கும் நேரம்:
காலை 6-9 மாலை 6-9
வேண்டியது நிறைவேற்றும் மலேசியா பேராக் தாப்பா எஸ்டேட் சிவ சுப்பிரமணியர் தாள் பணிந்து தொழுதிடுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
சைவ சித்தாந்தச் சுடர்
சைவ நெறிச் செம்மல்
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
bamikumar@gmail.com
கோயம்புத்தூர் 25
🙏🏽🙏🏽
Comments
Post a Comment