கோவில் 1637 - மலேசியா பாரிட் புந்தார் சுப்பிரமணியர் கோவில்

 🙏🏻🙏🏻

தினம் ஒரு முருகன் ஆலயம்-1637

செல்வம் பெருக அருளும் மலேசியா பாரிட் புந்தார் சுப்பிரமணியர் கோவில்

01.12.2025 திங்கள்


அருள்மிகு சுப்பிரமணியர் திருக்கோவில்

343, Jalan Stesen

Kampung Permatang Tok Mamat

34200 பாரிட் புந்தார் [Parit Buntar]

கிரியான் மாவட்டம் [Kerian District]

பேராக் மாநிலம் [Perak]

மலேசியா [Malaysia]

இருப்பிடம்: கோலாலம்பூர் [Kuala Lumpur] 309 கிமீ, பண்டார் பாரு [Bandar Baharu] 2 கிமீ, நிபோங் திபால் [Nibong Tebal] 6 கிமீ, கிரியான் [Kerian] 14 கிமீ, பினாங்கு [Penang] 20 கிமீ, ஈப்போ [Ipoh] 111 கிமீ


மூலவர்: சுப்பிரமணியர்

உற்சவர்: சுப்பிரமணியர் வள்ளி, தெய்வானை

தோற்றம்: 1963


தல மகிமை:

மலேசியா நாட்டின் தலைநகரம் கோலாலம்பூருக்கு வடக்கே அமைந்துள்ள பேராக் [Perak] மாநிலம் கிரியான் மாவட்டம் [Kerian District] பாரிட் புந்தார் [Parit Buntar] நகரில் செல்வம் பெருக அருளும் பாரிட் புந்தார் சுப்பிரமணியர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் மலேசியா திருநாட்டின் தலைநகரம் கோலாலம்பூர் [Kuala Lumpur] பேருந்து நிலையத்திலிருந்து 309 கிமீ தொலைவு அல்லது பண்டார் பாரு [Bandar Baharu] பேருந்து நிலையத்திலிருந்து 2 கிமீ தொலைவு அல்லது நிபோங் திபால் [Nibong Tebal] பேருந்து நிலையத்திலிருந்து 6 கிமீ தொலைவு அல்லது கிரியான் [Kerian] பேருந்து நிலையத்திலிருந்து 14 கிமீ தொலைவு அல்லது பினாங்கு [Penang] பேருந்து நிலையத்திலிருந்து 20 கிமீ தொலைவு அல்லது ஈப்போ [Ipoh] பேருந்து நிலையத்திலிருந்து 111 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் பாரிட் புந்தார் சுப்பிரமணியர் கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் சுப்பிரமணியர் கையில் வேலேந்தி வீற்றிருந்து அருள்புரிகின்றார்.


மலேசியா பேராக் மாநிலம் கிரியான் மாவட்டம் பாரிட் புந்தார் சுப்பிரமணியர் கோவிலில் மாசி மகம் 11 நாள் திருவிழாவாக மிகவும் விமரிசையாக நடைபெறுகிறது. தேரோட்டம் முக்கிய நிகழ்வாகும். கந்த சஷ்டி திருவிழா 7 நாட்கள் தினசரி சிறப்புப் பூஜைகளுடன் நடைபெறுகின்றன. ஆறாம் நாள் மாலை சூரசம்ஹாரம் மற்றும் 7-ம் நாள் திருக்கல்யாணம் முக்கிய நிகழ்வுகளாகும். மேலும் இத்திருக்கோவிலில் தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், சித்ரா பௌர்ணமி உள்ளிட்ட முருகப்பெருமானின் அனைத்து திருவிழாக்களும் விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. வருட பிறப்பு, தீபாவளி, பொங்கல், சஷ்டி, கிருத்திகை நன்னாட்களில் விசேஷ வழிபாடுகள் நடைபெறுகின்றன.

தல வரலாறு:

மலேசியா பேராக் மாநிலம் கிரியான் மாவட்டம் பாரிட் புந்தார் சுப்பிரமணியர் கோவில் இப்பகுதியில் வாழும் தமிழர்களால் 1963-ல் கட்டப்பட்டது.


தல அமைப்பு:

மலேசியா பேராக் மாநிலம் கிரியான் மாவட்டம் பாரிட் புந்தார் சுப்பிரமணியர் கோவில் கருவறையில் மூலவர் சுப்பிரமணியர் கையில் வேலேந்தி நின்ற திருக்கோலத்தில் திருக்காட்சியருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் மயில், பலிபீடம் உள்ளன. மேலும் இத்திருக்கோவிலில் விநாயகர், உற்சவர், மாரியம்மன் உள்ளிட்ட எல்லா தெய்வங்களும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.


திருவிழா:

மாசி மகம், கந்த சஷ்டி, தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, சித்ரா பௌர்ணமி, தீபாவளி, பொங்கல், தமிழ், ஆங்கில புத்தாண்டு தினம், சஷ்டி, கிருத்திகை


பிரார்த்தனை:

செல்வம் பெருக, மன மகிழ்ச்சி பெற, வேண்டியது கிடைத்திட, வினைகள் நீங்க, பிணிகள் அகல, சந்தான பாக்கியம் உண்டாக, நோய்கள் குணமடைய, நல்லன அருள, கஷ்டங்கள் தீர, நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்க, மன அமைதி வேண்டி, தோஷங்கள் போக்க


நேர்த்திக்கடன்:

பால்குடம், காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்


திறக்கும் நேரம்:

காலை 6.30-9 மாலை 5.30-9


மன மகிழ்ச்சி தந்தருளும் மலேசியா பேராக் பாரிட் புந்தார் சுப்பிரமணியரை பணிந்து வேண்டுவோம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


முருகாலய முரசு

சைவ சித்தாந்தச் சுடர்

சைவ நெறிச் செம்மல்

Dr K. முத்துக்குமரன் Ph. D

9489302842

bamikumar@gmail.com

கோயம்புத்தூர் 25

🙏🏻🙏🏻


படம் 1 - 1637 செல்வம் பெருக அருளும் மலேசியா பாரிட் புந்தார் சுப்பிரமணியர்


படம் 2 - 1637 மன மகிழ்ச்சி தந்தருளும் மலேசியா பேராக் பாரிட் புந்தார் சுப்பிரமணியர் கோவில்

Comments

Popular posts from this blog

கோவில் 1319 - சேலம் மல்லிகுந்தம் சின்ன பழனியாண்டவர் கோவில்

கோவில் 1326 - சேலம் K R தோப்பூர் பாலமுருகன் கோவில்

கோவில் 316 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்