கோவில் 1635 - மலேசியா பேராக் புருவாஸ் கங்கை நகரம் சுப்பிரமணியர் கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-1635
சங்கடம் தீர்க்கும் மலேசியா பேராக் பெருவாஸ் கங்கை நகரம் சுப்பிரமணியர் கோவில்
29.11.2025 சனி
அருள்மிகு சுப்பிரமணியர் திருக்கோவில்
கங்கை நகரம்
Jalan Parit
32700 பெருவாஸ் [Beruas]
[புருவாஸ்]
[புருவாஸ்]
மஞ்சோங் மாவட்டம் [Manjung District]
பேராக் மாநிலம் [Perak]
மலேசியா [Malaysia]
இருப்பிடம்: கோலாலம்பூர் [Kuala Lumpur] 237 கிமீ, புருவாஸ் [Beruas] 500 மீ, மஞ்சோங் [Manjung] 48 கிமீ, தைப்பிங் [Taiping] 49 கிமீ, ஈப்போ [Ipoh] 92 கிமீ, பினாங்கு [Penang] 127 கிமீ
மூலவர்: சுப்பிரமணியர்
தேவியர்: வள்ளி, தெய்வானை
உற்சவர்: சுப்பிரமணியர் வள்ளி, தெய்வானை
தோற்றம்: 1926
தல மகிமை:
மலேசியா நாட்டின் தலைநகரம் கோலாலம்பூருக்கு வடக்கே அமைந்துள்ள பேராக் [Perak] மாநிலம் மஞ்சோங் மாவட்டம் [Manjung District] பெருவாஸ் [Beruas] நகரில் இருக்கும் கங்கை நகரில் சங்கடம் தீர்க்கும் பெருவாஸ் கங்கை நகரம் சுப்பிரமணியர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் மலேசியா திருநாட்டின் தலைநகரம் கோலாலம்பூர் [Kuala Lumpur] பேருந்து நிலையத்திலிருந்து 237 கிமீ தொலைவு அல்லது புருவாஸ் [Beruas] பேருந்து நிலையத்திலிருந்து 500 மீ தொலைவு அல்லது மஞ்சோங் [Manjung] பேருந்து நிலையத்திலிருந்து 48 கிமீ தொலைவு அல்லது தைப்பிங் [Taiping] பேருந்து நிலையத்திலிருந்து 49 கிமீ தொலைவு அல்லது ஈப்போ [Ipoh] பேருந்து நிலையத்திலிருந்து 92 கிமீ தொலைவு அல்லது பினாங்கு [Penang] பேருந்து நிலையத்திலிருந்து 127 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் பெருவாஸ் கங்கை நகரம் சுப்பிரமணியர் கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் சுப்பிரமணியர் வள்ளி, தெய்வானை சமேதராக வீற்றிருந்து அருளாட்சி செய்கின்றார்.
மலேசியா பேராக் மாநிலம் மஞ்சோங் மாவட்டம் பெருவாஸ் கங்கை நகரம் சுப்பிரமணியர் கோவிலில் சித்ரா பௌர்ணமி திருவிழா மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்ப்டுகிறது. தைப்பூசம் மற்றும் கந்த சஷ்டி திருவிழாக்களும் விசேஷ பூஜைகளுடன் சிறப்பாக நடைபெறுகின்றன. மேலும் இத்திருக்கோவிலில் பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், மாசி மகம் உள்ளிட்ட முருகப்பெருமானின் அனைத்து திருவிழாக்களும்மரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. வருட பிறப்பு, தீபாவளி, பொங்கல், சஷ்டி, கிருத்திகை போன்ற திருநாட்களில் சிறப்புப் பூஜைகள் நடைபெறுகின்றன.
தல வரலாறு:
மலேசியா பேராக் மாநிலம் மஞ்சோங் மாவட்டம் பெருவாஸ் கங்கை நகரம் சுப்பிரமணியர் கோவில் 23.03.1926 அன்று தமிழ்நாட்டில் இருந்து குடியேறிய சைவ பெருமக்களால் கட்டப்பட்டது. ஆரம்ப நாட்களில் வேல் வைத்து வழிபாடு செய்ததால், இவ்வாலயம் குமாரவேல் ஆலயம் என்றழைக்கப்பட்டது. பின்னர் சுப்பிரமணியர் வள்ளி, தெய்வானை சமேதராக பிரதிஷ்டை செய்யப்பட்டு இக்கோவில் புருவாஸ் கங்கை நகரம் சுப்பிரமணியர் கோவில் என்றழைக்கப்பட்டு வருகின்றது. இக்கோவில் திருப்பணி வேலைகள் மேற்கொள்ளப்பட்டு 1962,1993, 2013-ல் கும்பாபிஷேகங்கள் நடைபெற்றன்.
தல அமைப்பு:
மலேசியா பேராக் மாநிலம் மஞ்சோங் மாவட்டம் பெருவாஸ் கங்கை நகரம் சுப்பிரமணியர் கோவில் தமிழக கோவிலை போல பொலிவுடன் அமைந்துள்ளது. இத்திருக்கோவில் கருவறையில் மூலவர் சுப்பிரமணியர் வள்ளி, தெய்வானை சமேதராக கையில் வேலுடன் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் கொடிமரம், கொடிமர விநாயகர், மயில், பலிபீடம் உள்ளன. மேலும் இத்திருக்கோவிலில் விநாயகர், உற்சவர், சிவபெருமான், அம்பாள், பைரவர், நவக்கிரகங்கள் உள்ளிட்ட அனைத்துத் தெய்வங்களும் தனி சந்நிதிகளில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
சித்ரா பௌர்ணமி, தைப்பூசம், கந்த சஷ்டி, பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, தீபாவளி, பொங்கல், தமிழ், ஆங்கில புத்தாண்டு தினம், சஷ்டி, கிருத்திகை
பிரார்த்தனை:
சங்கடம் தீர, மன மகிழ்ச்சி தர, கேட்கும் வரங்கள் கிட்ட, வினைகள் நீங்க, பிணிகள் அகல, திருமணத்தடை விலக, புத்திர பாக்கியம் வேண்டி, குடும்ப வாழ்வு சிறக்க, நோய்கள் குணமாக, நல்லன அருள, மன தைரியம் உண்டாக, தோஷங்கள் போக்க
நேர்த்திக்கடன்:
பால்குடம், காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
திறக்கும் நேரம்:
காலை 6-12 மாலை 5-9
மன மகிழ்ச்சி தரும் மலேசியா கெடா பேராக் பெருவாஸ் கங்கை நகரம் சுப்பிரமணியரை மனமுருகி வேண்டுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
சைவ சித்தாந்தச் சுடர்
சைவ நெறிச் செம்மல்
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
bamikumar@gmail.com
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
படம் 1 - 1635 சங்கடம் தீர்க்கும் மலேசியா பேராக் பெருவாஸ் கங்கை நகரம் சுப்பிரமணியர்
Comments
Post a Comment