கோவில் 1634 - மலேசியா கெடா பீடோங் சுங்கை லாலாங் சுப்பிரமணிய சுவாமி கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-1634
குறைகள் தீர்க்கும் மலேசியா கெடா பீடோங் சுங்கை லாலாங் சுப்பிரமணிய சுவாமி கோவில்
28.11.2025 வெள்ளி
அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்
Taman Bandar Baru
சுங்கை லாலாங் [Sungai Lalang]
08100 பீடோங் [Bedong]
கோலா மூடா மாவட்டம் [Kuala Muda District]
கெடா மாநிலம்/கடாரம் [Kedah]
மலேசியா [Malaysia]
இருப்பிடம்: கோலாலம்பூர் [Kuala Lumpur] 375 கிமீ, சுங்கை பெடானி [Sungai Petani] 2 கிமீ, பீடோங் [Bedong] 11 கிமீ, கோலா மூடா [Kuala Muda] 34 கிமீ, பினாங்கு [Penang] 39 கிமீ, கெடா [Kedah] 67 கிமீ
மூலவர்: சுப்பிரமணிய சுவாமி
உற்சவர்: சுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானை
தோற்றம்: 1986
தல மகிமை:
மலேசியா நாட்டின் வட பகுதியில் கெடா [Malacca] மாநிலம் கோலா மூடா மாவட்டம் [Kuala Muda District] பீடோங் [Bedong] நகரம் அருகில் உள்ள சுங்கை லாலாங் [Sungai Lalang] பகுதியில் குறைகள் தீர்க்கும் பீடோங் சுங்கை லாலாங் சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இத்திருக்கோவில் மலேசியா திருநாட்டின் தலைநகரம் கோலாலம்பூர் [Kuala Lumpur] பேருந்து நிலையத்திலிருந்து 375 கிமீ தொலைவு அல்லது சுங்கை பெடானி [Sungai Petani] பேருந்து நிலையத்திலிருந்து 2 கிமீ தொலைவு அல்லது பீடோங் [Bedong] பேருந்து நிலையத்திலிருந்து 11 கிமீ தொலைவு அல்லது கோலா மூடா [Kuala Muda] பேருந்து நிலையத்திலிருந்து 34 கிமீ தொலைவு அல்லது பினாங்கு [Penang] பேருந்து நிலையத்திலிருந்து 39 கிமீ தொலைவு அல்லது கெடா [Kedah] பேருந்து நிலையத்திலிருந்து 67 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் பீடோங் சுங்கை லாலாங் சுப்பிரமணிய சுவாமி கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் சுப்பிரமணிய சுவாமி கையில் வேலுடன் வீற்றிருந்து அருளாட்சி புரிகின்றார்.
மலேசியா கெடா மாநிலம் கோலா மூடா மாவட்டம் பீடோங் சுங்கை லாலாங் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூசம் வருடந்தோறும் முக்கிய திருவிழாவாகக் கொண்டாடப்படுகின்றது. கந்த சஷ்டி திருவிழா தினமும் சிறப்புப் பூஜைகளுடன் விமரிசையாக நடைபெறுகின்றது. மேலும் இத்திருக்கோவிலில் பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், மாசி மகம் உள்ளிட்ட முருகப்பெருமானின் அனைத்து திருவிழாக்களும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. வருட பிறப்பு, தீபாவளி, பொங்கல், சஷ்டி, கிருத்திகை போன்ற திருநாட்களில் சிறப்புப் பூஜைகள் நடைபெறுகின்றன.
தல வரலாறு:
மலேசியா கெடா மாநிலம் கோலா மூடா மாவட்டம் பீடோங் சுங்கை லாலாங் சுப்பிரமணிய சுவாமி கோவில் இப்பகுதி புரவலர்கள் மற்றும் பக்தர்களால் 1986-ல் ஆரம்பிக்கப்பட்டது.
தல அமைப்பு:
மலேசியா கெடா மாநிலம் பீடோங் சுங்கை லாலாங் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கோபுரங்கள், ராஜ கோபுரத்தில் வேல், சிற்பங்கள், கொடிமரம் அழகுற அமைந்துள்ளன. இத்திருக்கோவில் கருவறையில் மூலவர் சுப்பிரமணிய சுவாமி கையில் வேலுடன் அழகிய திருக்கோலத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் மயில், பலிபீடம் உள்ளன. மேலும் இத்திருக்கோவிலில் விநாயகர், உற்சவர், சிவபெருமான், அம்பாள், நவக்கிரகங்கள் உள்ளிட்ட அனைத்துத் பரிவார மூர்த்திகளும் தனி சந்நிதிகளில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
தைப்பூசம், கந்த சஷ்டி, பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, தீபாவளி, பொங்கல், தமிழ், ஆங்கில புத்தாண்டு தினம், , சஷ்டி, கிருத்திகை
பிரார்த்தனை:
குறைகள் தீர, ஐஸ்வர்யங்கள் பெருக, நினைத்தது நிறைவேற, வல்வினைகள் விலக, சகல பிணிகள் அகல, திருமணதத்டை நீங்க, குழந்தை வரம் வேண்டி, கல்வி மேம்பட, தொழில் சிறக்க, உடல் ஆரோக்கியம் உண்டாக, மன மகிழ்ச்சி கிடைக்க, நல்லன அருள, தோஷங்கள் போக்க
நேர்த்திக்கடன்:
பால்குடம், காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
திறக்கும் நேரம்:
காலை 6-9 மாலை 5-9
ஐஸ்வர்யங்கள் பெருக அருளும் மலேசியா கெடா பீடோங் சுங்கை லாலாங் சுப்பிரமணிய சுவாமியை போற்றி வணங்குவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
சைவ சித்தாந்தச் சுடர்
சைவ நெறிச் செம்மல்
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
bamikumar@gmail.com
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
படம் 1 - 1634 குறைகள் தீர்க்கும் மலேசியா கெடா பீடோங் சுங்கை லாலாங் சுப்பிரமணிய சுவாமி கோவில்
Comments
Post a Comment