கோவில் 1632 - மலேசியா கெடா பாலிங் பாலசுப்பிரமணியர் கோவில்

 🙏🏻🙏🏻

தினம் ஒரு முருகன் ஆலயம்-1632

நற்பலன்கள் தந்தருளும் மலேசியா கெடா பாலிங் பாலசுப்பிரமணியர் கோவில்

26.11.2025 புதன்


அருள்மிகு பாலசுப்பிரமணியர் திருக்கோவில்

Jalan Weng

09100 பாலிங் [Baling]

பாலிங் மாவட்டம் [Baling District]

கெடா மாநிலம்/கடாரம் [Kedah]

மலேசியா [Malaysia]

இருப்பிடம்: கோலாலம்பூர் [Kuala Lumpur] 384 கிமீ, பாலிங் [Baling] 3 கிமீ, சுங்கை பெடானி [Sungai Petani] 55 கிமீ, கெடா [Kedah] 82 கிமீ, பினாங்கு [Penang] 91 கிமீ


மூலவர்: பாலசுப்பிரமணியர்

உற்சவர்: பாலசுப்பிரமணியர் & முருகப்பெருமான் வள்ளி, தெய்வானை


தல மகிமை:

மலேசியா நாட்டின் வட பகுதியில் கெடா [Malacca] மாநிலம் பாலிங் மாவட்டம் [Baling District] தலைநகரம் உள்ள பாலிங் [Baling] நகரில் நற்பலன்கள் தந்தருளும் பாலிங் பாலசுப்பிரமணியர் கோவில் அமைந்துள்ளது. இத்திருக்கோவில் மலேசியா நாட்டின் தலைநகரம் கோலாலம்பூர் [Kuala Lumpur] பேருந்து நிலையத்திலிருந்து 384 கிமீ தொலைவு அல்லது பாலிங் [Baling] பேருந்து நிலையத்திலிருந்து 3 கிமீ தொலைவு அல்லது சுங்கை பெடானி [Sungai Petani] பேருந்து நிலையத்திலிருந்து 55 கிமீ தொலைவு அல்லது கெடா [Kedah] பேருந்து நிலையத்திலிருந்து 82 கிமீ தொலைவு அல்லது பினாங்கு [Penang] பேருந்து நிலையத்திலிருந்து 91 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் பாலிங் பாலசுப்பிரமணியர் கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் பாலசுப்பிரமணியர் அழகு பாலகனாக அருள்கின்றார்.


மலேசியா கெடா மாநிலம் பாலிங் மாவட்டம் பாலிங் பாலசுப்பிரமணியர் கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி உத்திரப் பெருவிழா வெகு விமரிசையாக நடைபெறுகின்றது. தினமும் சிறப்புப் பூஜைகள் நடைபெறுகிறது. இது போல ஒவ்வொரு வருடமும் தைப்பூசத் திருவிழா விசேஷ பூஜைகளுடன் நடைபெறுகிறது. கந்த சஷ்டி திருவிழா 7 நாட்கள் விமரிசையாக நடைபெறுகின்றது. ஆறாம் நாள் மாலை சூரசம்ஹார நிகழ்வும். 7-ம் நாள் திருக்கல்யாண வைபவமும் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. மேலும் இத்திருக்கோவிலில் வைகாசி விசாகம், மாசி மகம் உள்ளிட்ட முருகப்பெருமானின் எல்லா திருவிழாக்களும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. தமிழ் மற்றும் ஆங்கில புத்தாண்டு தினம், விநாயகர் சதுர்த்தி, பொங்கல், தீபாவளி, சங்கடஹர சதுர்த்தி, சஷ்டி, கிருத்திகை நன்னாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.


தல வரலாறு:

மலேசியா கெடா மாநிலம் பாலிங் மாவட்டம் தலைநகர் பாலிங் நகரில் அமைந்துள்ள பாலசுப்பிரமணியர் கோவில் இப்பகுதியில் மிகவும் பிரசித்திப் பெற்ற திருக்கோவிலாகும்.


தல அமைப்பு:

மலேசியா கெடா மாநிலம் பாலிங் பாலசுப்பிரமணியர் கோவிலில் அழகிய கோபுரங்கள் மற்றும் சிற்பங்கள் அமைந்துள்ளன. இத்திருக்கோவில் கருவறையில் மூலவர் பாலசுப்பிரமணியர் அழகு பாலகனாக வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் மயில், பலிபீடம் உள்ளன. மேலும் இத்திருக்கோவிலில் விநாயகர், உற்சவர், சிவபெருமான் உள்ளிட்ட எல்லா தெய்வங்களும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.


திருவிழா:

பங்குனி உத்திரம், தைப்பூசம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, மாசி மகம், விநாயகர் சதுர்த்தி, தீபாவளி, பொங்கல், தமிழ், ஆங்கில புத்தாண்டு தினம், சங்கடஹர சதுர்த்தி, பிரதோஷம், சஷ்டி, கிருத்திகை


பிரார்த்தனை:

நற்பலன்கள் தந்தருள, நினைத்தது நிறைவேற, வினைகள் நீங்க, பிணிகள் தீர, பிணிகள் போக்க, குழந்தைப்பேறு வேண்டி, நோய்கள் குணமாக, நல்லன அருள, இடர்கள் களைய, சகல ஐஸ்வர்யங்களும் பெற்றிட, தெய்வீக அருள் கிடைக்க, தோஷங்கள் விலக

நேர்த்திக்கடன்:

பால்குடம், காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்


திறக்கும் நேரம்:

காலை 6-9 மாலை 6-9


நினைத்ததை நிறைவேற்றும் மலேசியா கெடா பாலிங் பாலசுப்பிரமணியர் திருப்பாதங்கள் பணிந்து வேண்டுவோம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


முருகாலய முரசு

சைவ சித்தாந்தச் சுடர்

சைவ நெறிச் செம்மல்

Dr K. முத்துக்குமரன் Ph. D

9489302842

bamikumar@gmail.com

கோயம்புத்தூர் 25

🙏🏻🙏🏻


படம் 1 - 1632 நற்பலன்கள் தந்தருளும் மலேசியா கெடா பாலிங் பாலசுப்பிரமணியர் கோவில்


படம் 2 - 1632 நினைத்ததை நிறைவேற்றும் மலேசியா கெடா பாலிங் பாலசுப்பிரமணியர் கோவில்

Comments

Popular posts from this blog

கோவில் 1319 - சேலம் மல்லிகுந்தம் சின்ன பழனியாண்டவர் கோவில்

கோவில் 1326 - சேலம் K R தோப்பூர் பாலமுருகன் கோவில்

கோவில் 316 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்