கோவில் 1612 - மலேசியா ஜோகூர் மூவார் தெண்டாயுதபாணி கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-1612
மன அமைதி தந்தருளும் மலேசியா ஜோகூர் மூவார் தெண்டாயுதபாணி கோவில்
06.11.2025 வியாழன்
அருள்மிகு தெண்டாயுதபாணி திருக்கோவில்
[அ/மி தண்டாயுதபாணி திருக்கோவில்
நாட்டுக்கோட்டை செட்டியார்கள் கோவில்
Jalan Meriam
மூவார் [Muar 84000]
மூவார் மாவட்டம் [[Muar District]
ஜோகூர் மாநிலம் [Johor Darul Ta'zi]
மலேசியா [Malaysia]
இருப்பிடம்: கோலாலம்பூர் [KLBST/Airport] 178 கிமீ, மூவார் [Muar] 4 கிமீ, தங்காக் [Tangkak] 28 கிமீ, பஞ்சூர் [Panchor] 29 கிமீ, மலாக்கா [Malacca] 46 கிமீ ஜோகூர் பாரு [Johor Bahru] 173 கிமீ
மூலவர்: தெண்டாயுதபாணி (தண்டாயுதபாணி)
உற்சவர்: முருகப்பெருமான் வள்ளி, தெய்வானை & தெண்டாயுதபாணி
கும்பாபிஷேம்: 03.11.2023
தல மகிமை:
மலேசியா நாட்டின் தெற்கு பகுதியில் ஜோகூர் [Johor] மாநிலத்தில் இருக்கும் மூவார் மாவட்டத்தில் உள்ள மூவார் [Muar] நகரில் Jalan Meriam பகுதியில் நாட்டுக்கோட்டை செட்டியார்களுக்கு பாத்தியப்பட்ட மூவார் தெண்டாயுதபாணி கோவில் அமைந்துள்ளது. மலேசியா தலைநகரம் கோலாலம்பூர் பேருந்து நிலையத்திலிருந்து 178 கிமீ தொலைவு அல்லது மூவார் [Muar] பேருந்து நிலையத்திலிருந்து 4 கிமீ தொலைவு அல்லது தங்காக் [Tangkak] பேருந்து நிலையத்திலிருந்து 28 கிமீ தொலைவு அல்லது பஞ்சூர் [Panchor] பேருந்து நிலையத்திலிருந்து 29 கிமீ தொலைவு அலலது மலாக்கா பேருந்து நிலையத்திலிருந்து 46 கிமீ தொலைவு அல்லது ஜோகூர் பாரு 173 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் மூவார் தெண்டாயுதபாணி கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் தெண்டாயுதபாணி கையில் தண்டத்துடன் அருளாட்செய்கின்றார். இத்திருக்கோவிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு 03.11.2023 மகா கும்பாபிஷேகம் வெகுச் சிறப்பாக நடைபெற்றது. இத்திருக்கோவில் மூவார் தண்டாயுதபாணி கோவில் என்றும் அழைக்கப்படுகின்றது.
மலேசியா மூவார் தெண்டாயுதபாணி கோவிலில் தைப்பூசம் வருடந்தோறும் சிறப்புப் பூஜைகளுடன் வெகு விமரிசையாக நடைபெறுகிறது. பங்குனி உத்திரம் மற்றும் கந்த சஷ்டி திருவிழாக்களும் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. ஏராளாமான பக்தர்கள் பால்குடம், காவடி ஏந்தி தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றுகின்றனர். கந்த சஷ்டி பெருவிழா சமயத்தில் அதிக அளவில் பக்தர்கள் சஷ்டி விரதம் அனுஷ்டிக்கின்றனர். மேலும் வைகாசி விசாகம், திருக்கார்த்திகை உள்ளிட்ட முருகப்பெருமானின் அனைத்து திருவிழாக்களும் இத்திருக்கோவிலில் விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. சஷ்டி, கிருத்திகை திருநாட்களில் விசேஷ பூஜைகள் நடைபெறுகின்றன.
தல வரலாறு:
மலேசியாவின் ஜோகூர் மாநிலம் மூவார் மாவட்டம் மூவார் தெண்டாயுதபாணி கோவில் காரைக்குடி வட்டாரத்தில் இருந்து வாணிபத்திற்காக மலேசியா மூவார் பகுதியில் குடியேறிய நாட்டுக்கோட்டை செட்டியார் சமூகத்தினர் தமிழக திருக்கோவில்கள் போன்றே 1908-ம் ஆண்டு கட்டப்பட்ட மிகவும் பழமையான கோவிலாகும். நாட்டுக்கோட்டை செட்டியார் சமூகத்தினரால் இக்கோவில் நல்ல முறையில் நிர்வகிக்கப்பட்டு 08.09.1922, 18.01.1973, 07.07.1995, 07.11.2011-ம் ஆண்டுகளில் முறையாக கும்பாபிஷேகங்கள் நடத்தப்பட்டன. மீண்டும் 2023-ல் கோவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு 03.11.2023-ல் மகா கும்பாபிஷேகம் மிகச் சிறப்பாக நடந்தேறியது. மூவார் மாவட்டத்தில் மூவார் தெண்டாயுதபாணி கோவில் மிகவும் பிரசித்திப் பெற்றக் கோவிலாகும்.
மூவாரில் உள்ள மிகப் பழமையான மற்றும் மிகப்பெரிய இந்து கோயில். தென்னிந்தியக் கோயில்களின் தரத்தின்படி, நாட்டுக்கோட்டை செட்டியார்களால் கட்டப்பட்ட ஒரு இந்து கோயில். 03.11.2023 மஹா கும்பாபிஷேகம்
தல அமைப்பு:
மலேசியா ஜோகூர் மாநிலம் மூவார் மாவட்டம் மூவார் தெண்டாயுதபாணி கோவில் தென்னிந்தியக் கோவில்களின் ஆகமப் படி அழகிய சிற்பங்கள் மற்றும் பொலிவான கோபுரங்களுடன் அமைந்துள்ளது. இத்திருக்கோவிலில் அழகிய கொடிமரம் உள்ளது. இத்திருக்கோவில் கருவறையில் மூலவர் தெண்டாயுதபாணி கையில் தண்டத்துடன் வீற்றிருந்து ஆற்றலுடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் மயில், பலிபீடம் உள்ளன. மேலும் இத்திருக்கோவிலில் நர்த்தன விநாயகர், உற்சவர், சிவபெருமான், வேல் உள்ளிட்ட அனைத்து தெய்வங்களும் தனி சந்நிதிகளில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, சஷ்டி, கிருத்திகை, தீபாவளி, பொங்கல்
பிரார்த்தனை:
மன அமைதி தந்தருள, நல்ல அதிர்வுகள் உண்டாக, விருப்பங்கள் நிறைவேற, வல்வினைகள் தீர, சகல பிணிகள் போக்கிட, ஞானம் மேம்பட, சந்தான பாக்கியம் வேண்டி, குடும்ப வாழ்வு சிறக்க, நோய்கள் குணமாக, நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்க, சகல துன்பங்கள் அகல, தோஷங்கள் விலக
நேர்த்திக்கடன்:
பால்குடம், காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
திறக்கும் நேரம்:
காலை 7.30-12 மாலை 6.30-8.30
நல்ல அதிர்வுகளை உண்டாக்கும் மலேசியா ஜோகூர் மூவார் தெண்டாயுதபாணியை போற்றி வணங்குவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
சைவ சித்தாந்தச் சுடர்
சைவ நெறிச் செம்மல்
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
bamikumar@gmail.com
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
படம் 1 - 1612 மன அமைதி தந்தருளும் மலேசியா ஜோகூர் மூவார் தெண்டாயுதபாணி
Comments
Post a Comment