கோவில் 1610 - மலேசியா ஜோகூர் பாண்டான் மரத்தாண்டவர் கோவில்
🙏🏽🙏🏽
தினம் ஒரு முருகன் ஆலயம்-1610
மன மகிழ்ச்சி தரும் மலேசியா ஜோகூர் பாண்டான் மரத்தாண்டவர் கோவில்
04.11.2025 செவ்வாய்
அருள்மிகு மரத்தாண்டவர் திருக்கோவில்
Perindustrian Temenggong
பாண்டான் [Pandan 81100]
[பாண்டன்]
கங்கார் டெப்ராவ் அருகில் [Near Kangkar Tebrau]
ஜோகூர் பாரு மாவட்டம் [Johor Bahru District]
ஜோகூர் மாநிலம் [Johor Darul Ta'zi]
மலேசியா [Malaysia]
இருப்பிடம்: கோலாலம்பூர் [KLBST/Airport] 323 கிமீ, தெப்ராவ் [Tebrau] 5 கிமீ, ஜோகூர் பாரு [Johor Bahru] 8 கிமீ, தம்போய் 12 கிமீ, பெர்லிங் 12 கிமீ, ஸ்கூடாய் 15 கிமீ, மூவார் [Muar] 163 கிமீ, மலாக்கா [Malacca] 208 கிமீ
மூலவர்: மரத்தாண்டவர்
உற்சவர்: முருகப்பெருமான் வள்ளி, தெய்வானை
தோற்றம்: 1928
கும்பாபிஷேகம்: 04.12.2025 [வியாழன் காலை 10.45-11.45]
தல மகிமை:
மலேசியா நாட்டின் தெற்கு பகுதியில் ஜோகூர் [Johor] மாநிலத்தில் இருக்கும் ஜோகூர் பாரு மாவட்டத்தில் உள்ள பாண்டான் [Pandan] நகரில் மன மகிழ்ச்சி தரும் பாண்டான் மரத்தாண்டவர் கோவில் அமைந்துள்ளது. மலேசியா தலைநகரம் கோலாலம்பூர் பேருந்து நிலையத்திலிருந்து 323 கிமீ தொலைவு அல்லது தெப்ராவ் பேருந்து நிலையத்திலிருந்து 5 கிமீ தொலைவு அல்லது ஜோகூர் பாரு பேருந்து நிலையத்திலிருந்து 8 கிமீ தொலைவு அல்லது தம்போய் பேருந்து நிலையத்திலிருந்து 12 கிமீ தொலைவு அல்லது பெர்லிங் பேருந்து நிலையத்திலிருந்து 12 கிமீ தொலைவு அல்லது ஸ்கூடாய் பேருந்து நிலையத்திலிருந்து 15 கிமீ தொலைவு அல்லது மூவார் பேருந்து நிலையத்திலிருந்து 163 கிமீ தொலைவு அல்லது மலாக்கா பேருந்து நிலையத்திலிருந்து 208 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் பாண்டான் மரத்தாண்டவர் கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் மரத்தாண்டவர் கையில் வேலுடன் அருள்புரிகின்றார். 97 ஆண்டுகள் பழமையான இத்திருக்கோவிலின் திருப்பணி வேலைகள் மேற்கொள்ளப்பட்டு 04.12.2025 அன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
மலேசியா பாண்டான் மரத்தாண்டவர் கோவிலில் ஒவ்வொரு வருடமும் தைப்பூசத் திருவிழா 11 நாட்கள் சிறப்புப் பூஜைகளுடன் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றது. பங்குனி உத்திரத் திருவிழாவும் விசேஷ பூஜைகளுடன் சிறப்பாக நடைபெறுகிறது. இரண்டு திருவிழாக்களுக்கும் பக்தர்கள் பால்குடம், காவடி ஏந்தி தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றி மரத்தாண்டவரை வழிபட்டு நற்பலன்கள் பெற்று செல்கின்றனர். மேலும் கந்த சஷ்டி பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை வைகாசி விசாகம், ஆடிக்கிருத்திகை உள்ளிட்ட முருகப்பெருமானின் அனைத்து திருவிழாக்களும் இத்திருக்கோவிலில் விசேஷ பூஜைகளுடன் கொண்டாடப்படுகின்றன. சஷ்டி, கிருத்திகை நன்னாட்களில் விசேஷ வழிபாடுகள் நடைபெறுகின்றன. இத்திருக்கோவிலில் மகா சிவராத்திரி உட்பட அனைத்து இந்து பண்டிகை மற்றும் திருநாட்களும் விசேஷ பூஜைகளுடன் சிறப்பாக ந்டைபெறுகின்றது.
தல வரலாறு:
மலேசியாவின் ஜோகூர் மாநிலம் ஜோகூர் பாரு மாவட்டம் பாண்டான் மரத்தாண்டவர் கோவில் 1923-ல் கட்டப்பட்டு, இப்பகுதியில் சிறப்பு மிக்க கோவிலாக திகழ்கின்றது. . 97 ஆண்டுகள் பழமையான இத்திருக்கோவிலின் திருப்பணி வேலைகள் மேற்கொள்ளப்பட்டு 04.12.2025 அன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
தல அமைப்பு: உலு திராம் முருகன்
மலேசியா ஜோகூர் பாரு மாவட்டம் பாண்டான் மரத்தாண்டவர் கோவில் பொலிவான சிற்பங்கள் மற்றும் கோபுரங்களுடன் அமைந்துள்ளது. இத்திருக்கோவிலில் அழகிய கொடிமரம் உள்ளது. இத்திருக்கோவில் கருவறையில் மூலவர் மரத்தாண்டவர் கையில் வேல் கொண்டு பொலிவான திருக்கோலத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் வேல், மயில், பலிபீடம் உள்ளன. மேலும் இத்திருக்கோவிலில் விநாயகர், உற்சவர், சிவபெருமான், மாரியம்மன், ஆஞ்சநேயர், நவக்கிரகங்கள் உள்ளிட்ட அனைத்து தெய்வங்களும் சந்நிதிகளில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, ஆடிக்கிருத்திகை, சஷ்டி, கிருத்திகை, தீபாவளி, பொங்கல், பிரதோஷம், மாசி மகா சிவராத்திரி, மார்கழி திருவாதிரை, நவராத்திரி, செவ்வாய், வெள்ளி, சங்கடஹர சதுர்த்தி. விநாயகர் சதுர்த்தி
பிரார்த்தனை:
மன மகிழ்ச்சி வேண்டி, வினைகள் தீர, பிணிகள் விலக, வேண்டுவன கிடைக்க, சந்தான பாக்கியம் வேண்டி, கல்வி, ஞானம் சிறக்க, நோய்கள் குணமாக, நல்லன வேண்டி, சஞ்சலங்கள் போக்க, நேர்மறை எண்ணங்கள் உண்டாக, தோஷங்கள் அகல
நேர்த்திக்கடன்:
பால்குடம், காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
வினைகள் தீர்த்தருளும் மலேசியா ஜோகூர் பாண்டான் மரத்தாண்டவரை மனமுருகி வேண்டுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
சைவ சித்தாந்தச் சுடர்
சைவ நெறிச் செம்மல்
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
bamikumar@gmail.com
கோயம்புத்தூர் 25
🙏🏽🙏🏽
படம் 1 - 1610 மன மகிழ்ச்சி தரும் மலேசியா ஜோகூர் பாண்டான் மரத்தாண்டவர்
Comments
Post a Comment