கோவில் 1606 - மலேசியா ஜோகூர் பண்டார் டத்தோ ஒன் சுப்பிரமணியர் கோவில்
🙏🙏
தினம் ஒரு முருகன் ஆலயம்-1606
மங்கல வாழ்வு தரும் மலேசியா ஜோகூர் பண்டார் டத்தோ ஒன் சுப்பிரமணியர் கோவில்
31.10.2025 வெள்ளி
அருள்மிகு சுப்பிரமணியர் திருக்கோவில்
பண்டார் டத்தோ ஒன் [Bandar Dato Onn 81100]
தெப்ராவ் [Tebrau]
ஜோகூர் மாநிலம் [Johor Darul Ta'zi]
மலேசியா [Malaysia
இருப்பிடம்: கோலாலம்பூர் [KLBST/Airport] 328 கிமீ, தெப்ராவ் (Tebrau) 8 கிமீ, ஸ்கூடாய் 8 கிமீ, ஜோகூர் பாரு [Johor Bahru] 13 கிமீ, தம்போய் 14 கிமீ, பெர்லிங் 16 கிமீ, மூவார் [Muar] 162 கிமீ, மலாக்கா [Malacca] 207 கிமீ
மூலவர்: சுப்பிரமணியர்
தேவியர்: வள்ளி, தெய்வானை
உற்சவர்: சுப்பிரமணியர் வள்ளி, தெய்வானை
கும்பாபிஷேகம்: 02.02.202025 [2-வது கும்பாபிஷேகம்]
தல மகிமை:
மலேசியா நாட்டின் தெற்கு பகுதியில் ஜோகூர் [Johor] மாநிலத்தில் இருக்கும் தெப்ராவ் [Tebrau நகர் அருகில் இருக்கும் பண்டார் டத்தோ ஒன் [Bandar Dato Onn 81100] நகரில் பண்டார் டத்தோ ஒன் [Bandar Dato Onn 81100] மங்கல வாழ்வு தரும் பண்டார் டத்தோ ஒன் சுப்பிரமணியர் கோவில் அமைந்துள்ளது. மலேசியா தலைநகரம் கோலாலம்பூர் பேருந்து நிலையத்திலிருந்து 328 கிமீ தொலைவு அல்லது தெப்ராவ் பேருந்து நிலையத்திலிருந்து 8 கிமீ தொலைவு அல்லது ஸ்கூடாய் பேருந்து நிலையத்திலிருந்து 8 கிமீ தொலைவு அல்லது தம்போய் பேருந்து நிலையத்திலிருந்து 14 கிமீ தொலைவு அல்லது பெர்லிங் பேருந்து நிலையத்திலிருந்து 16 கிமீ தொலைவு அல்லது மூவார் பேருந்து நிலையத்திலிருந்து 162 கிமீ தொலைவு அல்லது மலாக்கா பேருந்து நிலையத்திலிருந்து 207 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் பண்டார் டத்தோ ஒன் சுப்பிரமணியர் கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் சுப்பிரமணியர் வள்ளி, தெய்வானை சமேதராக வீற்றிருந்து அருளாட்சி செய்கின்றார். இத்திருக்கோவிலில் திருப்பணி வேலைகள் மேற்கொள்ளப்பட்டு சுப்பிரமணியர் கோவிலின் இரண்டாவது மகா கும்பாபிஷேகம் 02.02.2025 அன்று மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
மலேசியா பண்டார் டத்தோ ஒன் சுப்பிரமணியர் கோவிலில் தைப்பூசத் திருவிழா விமரிசையாக நடைபெறுகின்றது. தைப்பூசத் திருநாளன்று பக்தர்கள் பால்குடம், காவடி ஏந்தி தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றி வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியரை வேண்டி நற்பலன்கள் பெற்று செல்கின்றனர். தொடர்ந்து அன்னதானம் நடைபெறுகின்றது. மேலும் கந்த சஷ்டி பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை வைகாசி விசாகம், ஆடிக்கிருத்திகை உள்ளிட்ட முருகப்பெருமானின் அனைத்து திருவிழாக்களும் இத்திருக்கோவிலில் விசேஷ பூஜைகளுடன் கொண்டாடப்படுகின்றன. சஷ்டி, கிருத்திகை நன்னாட்களில் விசேஷ வழிபாடுகள் நடைபெறுகின்றன. மேலும் இத்திருக்கோவிலில் அமைந்துள்ள அனைத்து தெய்வங்களின் பண்டிகைகளும் சிறப்புப் பூஜைகளுடன் கொண்டாடப்படுகின்றன.
தல வரலாறு:
மலேசியாவின் பண்டார் டத்தோ ஒன் சுப்பிரமணியர் கோவில் இப்பகுதியில் பிரசித்திப் பெற்றக் கோவிலாக திகழ்கின்றது. 2024-ல் திருக்கோவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு 02.02.2025 அன்று இந்தக் கோவிலின் இரண்டாவது கும்பாபிஷேகம் சிறப்புற நடைபெற்றது. இக்கோவிலில் நடைபெற்ற வேல் பூஜையின் போது நாகப்பாம்பு வந்தது என்று கோவில் குருக்கள் கூறினார். மேலும் சில நாட்களாக இந்நிகழ்வு (பாம்பு வலம்) தொடர்ந்து இத்திருக்கோவிலில் நடைபெற்றது.
தல அமைப்பு:
மலேசியா ஜோகூர் பாரு பண்டார் டத்தோ ஒன் சுப்பிரமணியர் புதிய கோவில் கட்டிட அமைப்புகள், சிற்பங்கள், கோபுரங்களுடன் அமைந்துள்ளது. இத்திருக்கோவிலில் அழகிய கொடிமரம் கருவறைக்கு எதிரில் உள்ளது. இத்திருக்கோவில் கருவறையில் மூலவர் சுப்பிரமணியர் வள்ளி, தெய்வானையுடன் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் மயில், பலிபீடம் உள்ளன. வேல் பூஜை விசேஷமாக நடைபெறுகிறது.. மேலும் இத்திருக்கோவிலில் விநாயகர், உற்சவர், சிவபெருமான், பார்வதி தேவி, தட்சிணாமூர்த்தி, துர்க்கை, ஐயப்பன், பைரவர், நவக்கிரகங்கள் உள்ளிட்ட அனைத்து தெய்வங்களும் தனித் தனி சந்நிதிகளில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
தைப்பூசம், கந்த சஷ்டி, பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, ஆடிக்கிருத்திகை, சஷ்டி, கிருத்திகை, தமிழ், ஆங்கில, தெலுங்கு வருடப் பிறப்பு, தீபாவளி, பொங்கல், பிரதோஷம், அமாவாசை, பௌர்ணமி, மாசி மகா சிவராத்திரி, மார்கழி திருவாதிரை, நவராத்திரி, செவ்வாய், வெள்ளி, சங்கடஹர சதுர்த்தி. விநாயகர் சதுர்த்தி
பிரார்த்தனை:
மங்கல வாழ்வு பெற, விருப்பங்கள் நிறைவேற, வினைகள் நீங்க, வினைகள் நீங்க, பிணிகள் தீர, திருமணத்தடை அகல, குழந்தை வரம் வேண்டி, நோய்கள் குணமாக, நல்லன அருள, மன அமைதி கிட்ட, சஞ்சலங்கள் போக்க, தோஷங்கள் விலக
நேர்த்திக்கடன்:
பால்குடம், காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
விருப்பங்கள் அனைத்தையும் நிறைவேற்றும் மலேசியா ஜோகூர் பண்டார் டத்தோ ஒன் சுப்பிரமணியர் திருவடிகள் போற்றி தொழுதிடுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
சைவ சித்தாந்தச் சுடர்
சைவ நெறிச் செம்மல்
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
bamikumar@gmail.com
கோயம்புத்தூர் 25
🙏🙏
படம் 1 - 1606 மங்கல வாழ்வு தரும் மலேசியா ஜோகூர் பண்டார் டத்தோ ஒன் சுப்பிரமணியர்
Comments
Post a Comment