கோவில் 1605 - மலேசியா ஜோகூர் பந்தர் பாரு கங்கர் புலாய் மலையாளும் முருகப்பெருமான் கோவில்

 🙏🏻🙏🏻

தினம் ஒரு முருகன் ஆலயம்-1605

மன அமைதி தந்தருளும் மலேசியா ஜோகூர் பந்தர் பாரு கங்கர் புலாய் மலையாளும் முருகப்பெருமான் கோவில்

30.10.2025 வியாழன்


அருள்மிகு மலையாளும் முருகப்பெருமான் திருக்கோவில்

பந்தர் பாரு கங்கர் புலாய் [Bandar Baru Kangkar Pulai]

ஜோகூர் பாரு [Johor Bahru] 80300

ஜோகூர் மாநிலம் [Johor Darul Ta'zi]

மலேசியா [Malaysia]


இருப்பிடம்: கோலாலம்பூர் [KLBST/Airport] 312 கிமீ, கங்கர் புலாய் 4 கிமீ, ஸ்கூடாய் 15 கிமீ, தம்போய் 21 கிமீ, பெர்லிங் 22 கிமீ, ஜோகூர் பாரு [Johor Bahru] 29 கிமீ, மூவார் [Muar] 152 கிமீ, மலாக்கா [Malacca] 197 கிமீ


மூலவர்: முருகப்பெருமான்

உற்சவர்: முருகப்பெருமான்


தல மகிமை:

மலேசியா நாட்டின் தெற்கு பகுதியில் ஜோகூர் [Johor] மாநிலத்தில் இருக்கும் பந்தர் பாரு கங்கர் புலாய் [Bandar Baru Kangkar Pulai] நகரில் பந்தர் பாரு கங்கர் புலாய் மலையாளும் முருகப்பெருமான் கோவில் அமைந்துள்ளது. மலேசியா தலைநகரம் கோலாலம்பூர் பேருந்து நிலையத்திலிருந்து 312 கிமீ தொலைவு அல்லது கங்கர் புலாய் பேருந்து நிலையத்திலிருந்து 4 கிமீ தொலைவு அல்லது ஸ்கூடாய் பேருந்து நிலையத்திலிருந்து 15 கிமீ தொலைவு அல்லது தம்போய் பேருந்து நிலையத்திலிருந்து 21 கிமீ தொலைவு அல்லது பெர்லிங் பேருந்து நிலையத்திலிருந்து 22 கிமீ தொலைவு அல்லது தலைநகரம் ஜோகூர் பாரு [Johor Bahru] பேருந்து நிலையத்திலிருந்து 29 கிமீ தொலைவு அல்லது மூவார் பேருந்து நிலையத்திலிருந்து 152 கிமீ தொலைவு அல்லது மலாக்கா பேருந்து நிலையத்திலிருந்து 197 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் பந்தர் பாரு கங்கர் புலாய் மலையாளும் முருகப்பெருமான் கோவிலை அடையலாம். மலையில் அமைந்துள்ள இத்திருக்கோவிலில் மூலவர் முருகப்பெருமான் சிலை வடிவிலும், சுதை வடிவிலும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றார்.


மலேசியா ஜோகூர் மாவட்டம் பந்தர் பாரு கங்கர் புலாய் மலையாளும் முருகப்பெருமான் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசம் நடைபெறுகின்றது. தைப்பூசத் திருநாளன்று பக்தர்கள் பால்குடம், காவடி ஏந்தி, தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றி மலையாளும் முருகப்பெருமானை வழிபடுகின்றனர். சிறப்புப் பூஜைகள் நடைபெறுகின்றன. இத்திருக்கோவிலில் பங்குனி உத்திரம், கந்த சஷ்டி உள்ளிட்ட முருகப்பெருமானின் திருவிழாக்களும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.


தல வரலாறு:

மலேசியாவின் ஜோகூர் மாவட்டம் பந்தர் பாரு கங்கர் புலாய் மலையாளும் முருகப்பெருமான் திருக்கோவில் இவ்வூர் மலையின் மீது அமைந்துள்ள பழைய கோவிலாகும். அழகிய மரங்கள் நிறைந்த இம்மலைக் கோவிலுக்கு செல்ல படிக்கட்டுகள் உண்டு.


தல அமைப்பு:

மலேசியா பந்தர் பாரு கங்கர் புலாய் மலையாளும் முருகப்பெருமான் கோவிலுக்கு ஏறிச் செல்ல படிக்கட்டுகள் உள்ளன, மலையேறு வழியில் முதலில் விநாயகர், சிவமுனி கருப்பர் மற்றும் சிவலிங்கம், மாரியம்மன், மற்றுமொரு விநாயகர் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர். மலையில் திறந்த கருவறையில் மூலவர் மலையாளும் முருகப்பெருமான் சிலை வடிவிலும், அழகிய சுதை சிற்ப வடிவிலும் நின்ற திருக்கோலங்களில் திருக்காட்சி அருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். மேலும் விநாயகர் மற்றும் சிவபெருமானும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.


திருவிழா:

தைப்பூசம், கந்த சஷ்டி, பங்குனி உத்திரம்


பிரார்த்தனை:

மன அமைதி வேண்டி, கேட்ட வரம் கிடைக்க, வினைகள் விலக, பிணிகள் தீர, நல்லன அருள, சஞ்சலங்கள் தீர


நேர்த்திக்கடன்:

பால்குடம், காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல்


கேட்ட வரம் வழங்கும் மலேசியா ஜோகூர் ஜோகூர் பந்தர் பாரு கங்கர் புலாய் மலையாளும் முருகப்பெருமானை மனமுருகி பிரார்த்திப்போம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


முருகாலய முரசு

சைவ சித்தாந்தச் சுடர்

சைவ நெறிச் செம்மல்

Dr K. முத்துக்குமரன் Ph. D

9489302842

bamikumar@gmail.com

கோயம்புத்தூர் 25

🙏🏻🙏🏻


படம் 1 - 1605 மன அமைதி தந்தருளும் மலேசியா ஜோகூர் பந்தர் பாரு கங்கர் புலாய் மலையாளும் முருகப்பெருமான்


படம் 2 - 1605 கேட்ட வரம் வழங்கும் மலேசியா ஜோகூர் ஜோகூர் பந்தர் பாரு கங்கர் புலாய் மலையாளும் முருகப்பெருமான்




Comments

Popular posts from this blog

கோவில் 1319 - சேலம் மல்லிகுந்தம் சின்ன பழனியாண்டவர் கோவில்

கோவில் 1326 - சேலம் K R தோப்பூர் பாலமுருகன் கோவில்

கோவில் 316 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்