கோவில் 1601 - மலேசியா ஜோகூர் பெர்லிங் செந்தில் முருகன் கோவில்
🙏🙏
தினம் ஒரு முருகன் ஆலயம்-1601
நேர்மறை அதிர்வுகளை உண்டாக்கும் மலேசியா ஜோகூர் பெர்லிங் செந்தில் முருகன் கோவில்
26.10.2025 ஞாயிறு
அருள்மிகு செந்தில் முருகன் திருக்கோவில்
3, Jalan Panglin
பெர்லிங் [Perling/Taman Perling 81200]
ஜோகூர் பாரு [Johor Bahru]
ஜோகூர் மாநிலம் [Johor Darul Ta'zi ]
மலேசியா [Malaysia]
இருப்பிடம்: கோலாலம்பூர் [KLBST/Airport] 313 கிமீ, ஸ்கூடாய் 10 கிமீ, ஜோகூர் பாரு [Larkin Sentral BST] 14 கிமீ, மூவார் [Muar] 163 கிமீ, மலாக்கா [Malacca] 209 கிமீ
மூலவர்: செந்தில் முருகன்
உற்சவர்: முருகப்பெருமான் வள்ளி, தெய்வானை
தல மகிமை:
மலேசியா நாட்டின் தெற்கு பகுதியில் ஜோகூர் பாரு [Johor Bahru] மாநிலத்தில் இருக்கும் பெர்லிங் நகரில் [Perling/Taman Perling] 3, Jalan Panglin பகுதியில் அழகிய பெர்லிங் செந்தில் முருகன் கோவில் அமைந்துள்ளது. மலேசியா தலைநகரம் கோலாலம்பூர் பேருந்து நிலையத்திலிருந்து 313 கிமீ தொலைவு அல்லது ஸ்கூடாய் பேருந்து நிலையத்திலிருந்து 10 தொலைவு அல்லது ஜோகூர் பாரு பேருந்து நிலையத்திலிருந்து 14 தொலைவு அல்லது மூவார் பேருந்து நிலையத்திலிருந்து 163 கிமீ தொலைவு அல்லது மலாக்கா பேருந்து நிலையத்திலிருந்து 209 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் பெர்லிங் செந்தில் முருகன் கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் செந்தில் முருகன் பொலிவுடன் வீற்றிருந்து அருளாட்சி புரிகின்றார். இத்திருக்கோவில் கும்பாபிஷேகம் ஜூலை 2025-ல் நடைபெற்றது.
மலேசியா ஜோகூர் பெர்லிங் செந்தில் முருகன் கோவிலில் தைப்பூசத் திருவிழா வருடந்தோறும் 11 நாட்கள் அலங்காரம், அபிஷேகம் மற்றும் சிறப்புப் தீபாராதனைகளுடன் விமரிசையாக நடைபெறுகின்றது. ஏராளமான முருக பக்தர்கள் பால்குடம், காவடி ஏந்தி தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றி, செந்தில் முருகனை வணங்கி வேண்டும் வரம் பெற்று செல்கின்றனர். மிகப் பெரிய அளவில் அன்னதானம் நடைபெறுகின்றது. மேலும் இத்திருக்கோவிலில் பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை ஆடிக்கிருத்திகை உள்ளிட்ட முருகப்பெருமானின் அனைத்து திருவிழாக்களும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. சஷ்டி, கிருத்திகை திருநாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. மேலும் இக்கோவிலில் அமைந்துள்ள அனைத்து தெய்வங்களின் விசேஷ தினங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.
தல வரலாறு:
மலேசியா ஜோகூரில் உள்ள மிக அழகான கோவில்களில் ஜோகூர் பெர்லிங் செந்தில் முருகன் கோவிலும் ஒன்று. தென்னிந்திய கட்டிடக்கலை மற்றும் நவீன மலாய் தொழில்நுட்பத்தையும் இணைத்து மிகவும் அழகாகக் கட்டப்பட்ட கோவில் இது. 1960-ல் கட்டப்பட்ட இத்திருக்கோவில் அமைதியான அதிர்வு நிறைந்த மற்றும் ஆற்றல் நிறைந்த கோவிலாகும். கோவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு ஜூலை 2025-ல் மகா கும்பாபிஷேகம் சிறப்புற நடைபெற்றது. இப்பகுதியில் அதிக அளவில் தமிழர்கள் வசிக்கின்றனர்.
தல அமைப்பு:
மலேசியா ஜோகூர் பெர்லிங் செந்தில் முருகன் கோவில் தமிழ்நாட்டு கட்டிடக்கலை மற்றும் நவீன மலாய் தொழில்நுட்பத்தையும் இணைத்து அழகிய கோபுரங்கள் மற்றும் சிற்பங்களுடன் அழகுற காட்சியளிக்கின்றது. இத்திருக்கோவில் கருவறையில் மூலவர் செந்தில் முருகன் கைகளில் வேல் மற்றும் சேவற்கொடி ஏந்தி அழகிய திருக்கோலத்தில் திருக்காட்சி தந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் கொடிமரம், வேல், மயில், பலிபீடம் உள்ளன மேலும் இத்திருக்கோவிலில் விநாயகர், சிவபெருமான், பார்வதி தேவி, தட்சிணாமூர்த்தி, பெருமாள், துர்க்கை, பெருமாள், பைரவர், நவக்கிரகங்கள் உள்ளிட்ட அனைத்து தெய்வங்களும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, ஆடிக்கிருத்திகை, சஷ்டி, கிருத்திகை, தமிழ், ஆங்கில வருடப் பிறப்பு, தீபாவளி, பொங்கல்
பிரார்த்தனை:
நேர்மறை அதிர்வுகள் உண்டாக, வேண்டும் வரமளிக்க, மன அமைதி கிட்ட,வினைகள் விலக, நல்லன அருள, திருமணம், குழந்தை பாக்கியம் வேண்டி, தொழில், வியாபாரம் மேம்பட, உடல் ஆரோக்கியம் சீராக, சஞ்சலங்கள் தீர, தோஷங்கள் அகல
நேர்த்திக்கடன்:
பால்குடம், காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
திறக்கும் நேரம்
காலை 6-10 மாலை 5-9
வேண்டும் வரமளிக்கும் மலேசியா ஜோகூர் பெர்லிங் செந்தில் முருகனை பணிந்து தொழுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
சைவ சித்தாந்தச் சுடர்
சைவ நெறிச் செம்மல்
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
bamikumar@gmail.com
கோயம்புத்தூர் 25
🙏🙏
படம் 1 - 1601 நேர்மறை அதிர்வுகளை உண்டாக்கும் மலேசியா ஜோகூர் பெர்லிங் செந்தில் முருகன்
Comments
Post a Comment