கோவில் 1600 - மலேசியா ஜோகூர் ஸ்கூடாய் பாலசுப்பிரமணியர் கோவில்

 🙏🙏

தினம் ஒரு முருகன் ஆலயம்-1600

வேண்டும் வரங்களை அள்ளி வழங்கும் மலேசியா ஜோகூர் ஸ்கூடாய் பாலசுப்பிரமணியர் கோவில்

25.10.2025 சனி


அருள்மிகு பாலசுப்பிரமணியர் திருக்கோவில்

Jalan Patin

ஸ்கூடாய் [Skudai, 81300]

ஜோகூர் பாரு [Johor Bahru]

ஜோகூர் மாநிலம் [Johor Darul Ta'zi]

மலேசியா [Malaysia]


இருப்பிடம்: கோலாலம்பூர் [KLBST/Airport] 316 கிமீ, ஸ்கூடாய் 600 மீ, ஜோகூர்[Larkin Sentral BST] 14 கிமீ, மூவார் [Muar] 158 கிமீ, மலாக்கா [Malacca] 200 கிமீ


மூலவர்: பாலசுப்பிரமணியர்

உற்சவர்: முருகப்பெருமான் வள்ளி, தெய்வானை


தல மகிமை:

மலேசியா நாட்டின் தெற்கு பகுதியில் ஜோகூர் பாரு [Johor Bahru] மாநிலத்தில் இருக்கும் ஸ்கூடாய் நகரில் Jalan Patin பகுதியில் பிரசித்திப் பெற்ற பாலசுப்பிரமணியர் கோவில் அமைந்துள்ளது. மலேசியா தலைநகரம் கோலாலம்பூர் பேருந்து நிலையத்திலிருந்து 316 கிமீ தொலைவு அல்லது ஸ்கூடாய் பேருந்து நிலையத்திலிருந்து 600 மீ தொலைவு அல்லது ஜோகூர் பாரு பேருந்து நிலையத்திலிருந்து 14 கிமீ தொலைவு அல்லது மூவார் பேருந்து நிலையத்திலிருந்து 158 கிமீ தொலைவு அல்லது மலாக்கா பேருந்து நிலையத்திலிருந்து 200 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் ஸ்கூடாய் பாலசுப்பிரமணியர் கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் பாலசுப்பிரமணியர் அதி அழகுடன் அற்புதமாக வீற்றிருந்து ஆற்றலுடன் அருள்பாலிக்கின்றார். இக்கோவிலில் அமைந்துள்ள திருமண மண்டபத்தில் ஏராளமான திருமணங்கள் பாலசுப்பிரமணியர் அருளாசியுடன் நடைபெறுகின்றன.


மலேசியா ஜோகூர் ஸ்கூடாய் பாலசுப்பிரமணியர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசத் திருவிழா 10 நாட்கள் அலங்காரம், அபிஷேகம் மற்றும் சிறப்புப் பூஜைகளுடன் கோலாகலமாக நடைபெறுகின்றது. ஏராளமான முருக பக்தர்கள் பால்குடம், காவடி ஏந்தியும், முடிக்காணிக்கை செலுத்தியும் தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றி, பாலசுப்பிரமணியரை வழிபட்டு நற்பலன்களை பெற்று செல்கின்றனர். மேலும் பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை ஆடிக்கிருத்திகை உள்ளிட்ட முருகப்பெருமானின் அனைத்து திருவிழாக்களும் இத்திருக்கோவிலில் விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. ஒவ்வொரு சஷ்டி, கிருத்திகை நன்னாட்களில் விசேஷ வழிபாடுகள் நடைபெறுகின்றன. மேலும் இக்கோவிலில் அமைந்துள்ள அனைத்து தெய்வங்களின் விசேஷ தினங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.


தல வரலாறு:

மலேசியா ஜோகூர் ஸ்கூடாய் பாலசுப்பிரமணியர் கோவில் ஜோகூர் பாரு [Johor Bahru] மாநிலத்தில் மிகவும் பிரசித்திப் பெற்றக் கோவிலாக திகழ்கின்றது. மலேசியத் தொழில்நுட்பப் பல்கலைகழகத்தின் வளாகத்தின் தலைமை இடமாகவும் ஸ்கூடாய் நகர்ப்பகுதி அமைகின்றது. மலேசியாவிலேயே அதிகமான தமிழ் மாணவர்கள் பயிலும் தமிழ்ப்பள்ளிகளில் ஒன்றான தாமான் துன் அமீனா தமிழ்ப்பள்ளி இங்குதான் உள்ளது. இந்தப் பள்ளியில் சுமார் மாணவர்கள் பயில்கிறார்கள். இம்மாநிலத்தில் தமிழர்கள் அதிகமாக வாழும் இடங்களில் ஒன்றாகவும் ஸ்கூடாய் நகரம் அமைகின்றது.


தல அமைப்பு:

மலேசியா ஜோகூர் ஸ்கூடாய் பாலசுப்பிரமணியர் கோவில் தமிழ்நாட்டு திருக்கோவில்கள் போல அழகிய கோபுரங்கள் மற்றும் சிற்பங்களுடன் அழகுற அமைந்துள்ளது. இத்திருக்கோவில் கருவறையில் மூலவர் பாலசுப்பிரமணியர் கைகளில் வேல் மற்றும் சேவற்கொடி ஏந்தி நெடிதுயர்ந்த திருக்கோலத்தில் நின்ற நிலையில் அதி அழகுடன் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் மயில், பலிபீடம் உள்ளன மேலும் விநாயகர், சிவபெருமான், பார்வதி தேவி, தட்சிணாமூர்த்தி, பெருமாள், துர்க்கை, நவக்கிரகங்கள் உள்ளிட்ட அனைத்து பரிவாரத் தெய்வங்களும் இத்திருக்கோவிலில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.


திருவிழா:

தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, ஆடிக்கிருத்திகை, சஷ்டி, கிருத்திகை, தமிழ், ஆங்கில வருடப் பிறப்பு, தீபாவளி, பொங்கல்


பிரார்த்தனை:

வேண்டும் வரங்களை அள்ளி வழங்க, மன அமைதி கிடைக்க, சங்கடங்கள் தீர, எண்ணிய காரியங்கள் வெற்றியடைய, கல்வி, ஞானம் மேம்பட, வியாபாரம், தொழில் சிறக்க, சகல பிரச்சினைகளும் விலக, வினைகள் அகல, பிணிகள் போக்க, குழந்தை, திருமண வரம் வேண்டி, தோஷங்கள் விலகிட, நேர்மறை அதிர்வுகள் உண்டாக, செல்வம் பெருக


நேர்த்திக்கடன்:

பால்குடம், காவடி, முடிக்காணிக்கை, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்


மன அமைதி தந்தருளும் மலேசியா ஜோகூர் ஸ்கூடாய் பாலசுப்பிரமணியரை போற்றி வணங்கிடுவோம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


முருகாலய முரசு

சைவ சித்தாந்தச் சுடர்

சைவ நெறிச் செம்மல்

Dr K. முத்துக்குமரன் Ph. D

9489302842

bamikumar@gmail.com

கோயம்புத்தூர் 25

🙏🙏


படம் 1 - 1600 வேண்டும் வரங்களை அள்ளி வழங்கும் மலேசியா ஜோகூர் ஸ்கூடாய் பாலசுப்பிரமணியர்


படம் 2 - 1600 மன அமைதி தந்தருளும் மலேசியா ஜோகூர் ஸ்கூடாய் பாலசுப்பிரமணியர் கோவில் உற்சவர்

Comments

Popular posts from this blog

கோவில் 1319 - சேலம் மல்லிகுந்தம் சின்ன பழனியாண்டவர் கோவில்

கோவில் 1326 - சேலம் K R தோப்பூர் பாலமுருகன் கோவில்

கோவில் 316 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்