கோவில் 1599 - கோயம்புத்தூர் பொள்ளாச்சி ஜமீன் ஊத்துக்குளி பாலமுருகன் கோவில்
🙏🙏
தினம் ஒரு முருகன் ஆலயம்-1599
சகல ஐஸ்வர்யங்களையும் அள்ளி வழங்கும் கோயம்புத்தூர் பொள்ளாச்சி ஜமீன் ஊத்துக்குளி பாலமுருகன் கோவில்
24.10.2025 வெள்ளி
அருள்மிகு பாலமுருகன் திருக்கோவில்
ஜமீன் ஊத்துக்குளி
பொள்ளாச்சி 642004
பொள்ளாச்சி வட்டம்
கோயம்புத்தூர் மாவட்டம்
இருப்பிடம்: காந்திபுரம் 49 கிமீ, பொள்ளாச்சி 4 கிமீ, கிணத்துக்கடவு 23 கிமீ, உடுமலைப்பேட்டை 35 கிமீ, உக்கடம் 45 கிமீ
மூலவர்: பாலமுருகன்
உற்சவர்: முருகன் வள்ளி, தெய்வானை
தல மகிமை:
கோயம்புத்தூர் மாவட்டம் காந்திபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 9 கிமீ தொலைவில் இருக்கும் பொள்ளாச்சி நகரில் அமைந்துள்ள ஜமீன் ஊத்துக்குளி பகுதியில் சகல ஐஸ்வர்யங்களையும் அள்ளி வழங்கும் பொள்ளாச்சி ஜமீன் ஊத்துக்குளி பாலமுருகன் கோவில் அமைந்துள்ளது. மேலும் பொள்ளாச்சி பேருந்து நிலையத்திலிருந்து 4 கிமீ தொலைவு அல்லது கிணத்துக்கடவு பேருந்து நிலையத்திலிருந்து 23 கிமீ தொலைவு அல்லது உடுமலைப்பேட்டை பேருந்து நிலையத்திலிருந்து 35 கிமீ தொலைவு அல்லது உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து 45 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் பொள்ளாச்சி ஜமீன் ஊத்துக்குளி பாலமுருகன் கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் பாலமுருகன் அழகு பாலகனாக பொலிவுடன் வீற்றிருந்து அருள்புரிகின்றார். மேலும் இத்திருக்கோவிலில் கற்பக விநாயகரும் ஒரு முக்கிய தெய்வமாக அருள்பாலிக்கின்றார்.
கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி ஜமீன் ஊத்துக்குளி பாலமுருகன் கோவிலில் வருடந்தோறும் தைப்பூசம் சிறப்புப் பூஜைகளுடன் வெகு விமரிசையாக நடைபெறுகின்றது. மேலும் பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை உள்ளிட்ட முருகப்பெருமானின் அனைத்து திருவிழாக்களும் விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. பிரதி சஷ்டி, கிருத்திகை திருநாட்களில் விசேஷ பூஜைகள் நடைபெறுகின்றன.
தல வரலாறு:
கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி ஜமீன் ஊத்துக்குளி முருகன் கோவில் இப்பகுதியில் மிகவும் பிரசித்திப் பெற்றக் கோவிலாகும். இத்திருக்கோவிலை சேர குல வேளாளர் சமூகத்தினர் கட்டி, நிர்வகித்து வருகின்றது.
தல அமைப்பு:
பொள்ளாச்சி ஜமீன் ஊத்துக்குளி பாலமுருகன் கோவில் அழகிய கோபுரங்கள் மற்றும் சிற்பங்களுடன் அழகுற அமைந்துள்ளது. இத்திருக்கோவில் கருவறையில் மூலவர் பாலமுருகன் மயில் பின் நிற்க வலது திருக்கரத்தை அபயக்கரமளித்தும், வேல் கொண்டும், இடது திருக்கரத்தை ஒயிலாக இடுப்பில் வைத்தப்படியும், அழகு பாலகனாக நின்ற திருக்கோலத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் வேல், மயில், பலிபீடம் உள்ளன மேலும் கற்பக விநாயகர், சிவபெருமான் மற்றும் அனைத்து தெய்வங்களும் இத்திருக்கோவிலில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, சஷ்டி, கிருத்திகை
பிரார்த்தனை:
சகல ஐஸ்வர்யங்கள் வேண்டி, நல்லன அருள, கேட்டது கிடைத்திட, வினைகள் விலக, பிணிகள் அகன்றிட, குழந்தைப்பேறு கிட்ட, நோய்கள் குணமாக, கல்வி, ஞானம் சிறக்க, கஷ்டங்கள் தீர, நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்க, தோஷங்கள் அகல
நேர்த்திக்கடன்:
அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
நல்லன அருளும் கோயம்புத்தூர் பொள்ளாச்சி ஜமீன் ஊத்துக்குளி பாலமுருகன் திருவடிகள் பணிந்து வேண்டுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
சைவ சித்தாந்தச் சுடர்
சைவ நெறிச் செம்மல்
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
bamikumar@gmail.com
கோயம்புத்தூர் 25
🙏🙏
படம் 1 - 1599 சகல ஐஸ்வர்யங்களையும் அள்ளி வழங்கும் கோயம்புத்தூர் பொள்ளாச்சி ஜமீன் ஊத்துக்குளி பாலமுருகன்
Comments
Post a Comment