கோவில் 1594 - கோயம்புத்தூர் தேவராயபுரம் பழனியாண்டவர் கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-1594
நல்லன அருளும் கோயம்புத்தூர் தேவராயபுரம் பழனியாண்டவர் கோவில்
19.10.2025 ஞாயிறு
அருள்மிகு பழனியாண்டவர் திருக்கோவில் [TM011578]
முருகன் கோவில் தெரு
தேவராயபுரம் 642110
கிணத்துக்கடவு வட்டம்
கோயம்புத்தூர் மாவட்டம்
இருப்பிடம்: காந்திபுரம் 38 கிமீ, கிணத்துக்கடவு 1 கிமீ, பொள்ளாச்சி 12 கிமீ, உக்கடம் 34 கிமீ, சிங்காநல்லூர் 37 கிமீ
மூலவர்: பழனியாண்டவர்
உற்சவர்: பழனியாண்டவர்
தல மகிமை:
கோயம்புத்தூர் மாவட்டம் காந்திபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 38 கிமீ தொலைவில் இருக்கும் கிணத்துக்கடவு வட்டம் தேவராயபுரம் கிராமத்தில் கோயம்புத்தூர் தேவராயபுரம் பழனியாண்டவர் கோவில் அமைந்துள்ளது. மேலும் கிணத்துக்கடவு பேருந்து நிலையத்திலிருந்து 1 கிமீ தொலைவு அல்லது பொள்ளாச்சி பேருந்து நிலையத்திலிருந்து 12 கிமீ தொலைவு அல்லது உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து 34 கிமீ தொலைவு அல்லது சிங்காநல்லூர் பேருந்து நிலையத்திலிருந்து 37 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் கோயம்புத்தூர் தேவராயபுரம் பழனியாண்டவர் கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் பழனியாண்டவர் மூலவராக வீற்றிருந்து அருள்பாலிக்கின்றார்.
கோயம்புத்தூர் தேவராயபுரம் பழனியாண்டவர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசம் சிறப்பு பூஜைகளுடன் விமரிசையாக நடைபெறுகிறது. மேலும் பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை உள்ளிட்ட முருகப்பெருமானின் அனைத்து திருவிழாக்களும் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. பிரதி சஷ்டி, கிருத்திகை நன்னாட்களில் விசேஷ பூஜைகள் நடைபெறுகின்றன.
தல வரலாறு:
கோயம்புத்தூர் மாவட்டம் தேவராயபுரம் பழனியாண்டவர் கோவில் மிகவும் பழமையான கோவிலாகக் கருதப்படுகிறது. இத்திருக்கோவில் நிர்வாகத்தை இந்து அறநிலையத் துறை தற்போது நிர்வகித்து வருகிறது. இந்து அறநிலையத் துறை தரவுகளின் படி இக்கோவிலின் கும்பாபிஷேகம் 03.03.1995 அன்று சிறப்பாக நடைபெற்றது.
தல அமைப்பு:
கோயம்புத்தூர் மாவட்டம் தேவராயபுரம் பழனியாண்டவர் கோவில் ஆகம விதிகளின் படி அமைந்துள்ளது. இத்திருக்கோவில் கருவறையில் மூலவர் பழனியாண்டவர் வலது திருக்கரத்தில் தண்டம் ஏந்தியும், இடக்கரத்தை பொலிவாக இடுப்பில் வைத்தப்படியும் நின்ற திருக்கோலத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் மயில், பலிபீடம் உள்ளன. மேலும் விநாயகர், கோஷ்ட தெய்வங்கள், சிவபெருமான், உமையம்மை, பைரவர், நவக்கிரகங்கள் உள்ளிட்ட அனைத்து பரிவார மூர்த்திகளும் இத்திருக்கோவிலில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, சஷ்டி, கிருத்திகை
பிரார்த்தனை:
நல்லன அருள, மனக்கவலைகள் தீர, ஞானம் மேம்பட, வினைகள் நீங்க, பிணிகள் விலக, குழந்தைப்பேறு வேண்டி, நோய்கள் குணமாக, பாவங்கள் போக்க, சஞ்சலங்கள் போக்க, தோஷங்கள் அகல
நேர்த்திக்கடன்:
அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
திறக்கும் நேரம்:
காலை 8-10 மாலை 5-7
மனக்கவலைகள் தீர்க்கும் கோயம்புத்தூர் தேவராயபுரம் பழனியாண்டவரை மனமுருகி வேண்டுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
சைவ சித்தாந்தச் சுடர்
சைவ நெறிச் செம்மல்
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
bamikumar@gmail.com
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
படம் 1 - 1594 நல்லன அருளும் கோயம்புத்தூர் தேவராயபுரம் பழனியாண்டவர் கோவில்
Comments
Post a Comment