கோவில் 1574 - தஞ்சாவூர் தங்கம் நகர் திருமுருகன் கோவில்
🙏🏼🙏🏼
தினம் ஒரு முருகன் ஆலயம்-1574
எடுத்த காரியங்களில் வெற்றியடைய அருளும் தஞ்சாவூர் தங்கம் நகர் திருமுருகன் கோவில்
29.09.2025 திங்கள்
அருள்மிகு திருமுருகன் திருக்கோவில்
வெண்ணிலா தெரு
தங்கம் நகர்
முனிசிபல் காலனி
தஞ்சாவூர் 613007
தஞ்சாவூர் மாவட்டம்
இருப்பிடம்: தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் 2 கிமீ, தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் 5 கிமீ, தஞ்சாவூர் ரயில் நிலையம் 4 கிமீ
மூலவர்: திருமுருகன்
தேவியர்: வள்ளி, தெய்வானை
உற்சவர்: திருமுருகன் வள்ளி, தெய்வானை
கும்பாபிஷேகம்: 04.06.2017
தல மகிமை:
தஞ்சாவூர் மாநகரம் தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து 3 கிமீ தொலைவில் இருக்கும் தஞ்சாவூர் முனிசிபல் காலனி பகுதியில் தங்கம் நகர் வெண்ணிலா தெருவில் எடுத்த காரியங்களில் வெற்றியடைய அருளும் தஞ்சாவூர் தங்கம் நகர் திருமுருகன் கோவில் அமைந்துள்ளது. மேலும் தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து 5 கிமீ தொலைவு அல்லது தஞ்சாவூர் ரயில் நிலையத்திலிருந்து 4 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் தஞ்சாவூர் தங்கம் நகர் திருமுருகன் கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் திருமுருகன் வள்ளி, தெய்வானையுடன் திருக்காட்சி தந்து ஆற்றலுடன் அருள்பாலிக்கின்றார். சுமார் 42 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான இத்திருக்கோவிலின் திருப்பணிகள மேற்கொள்ளப்பட்டு 04.07.2004 மற்றும் 04.06.2017-ல் கும்பாபிஷேகங்கள் சிறப்புற நடைபெற்றது.
தஞ்சாவூர் தங்கம் நகர் திருமுருகன் கோவிலில் பங்குனி உத்திரத் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. 42 ஆண்டுகளாக ஏராளமான பக்தர்கள் கூட்டுறவுக் காலனி அ/மி கற்பக விநாயகர் கோவிலிலிருந்து தங்கம் நகர் திருமுருகன் கோவிலுக்கு ஒவ்வொரு வருடமும் பால்குடம் ஏந்தி வருகின்றனர். பின்னர் பங்குனி உத்திரத் திருநாளன்று பல்வகை அபிஷேகங்கள் நடைபெற்று, அழகிய அலங்காரத்துடன் காட்சியருளும் திருமுருகன் வள்ளி, தெய்வானைக்கு மகா தீபாரதனை நடைபெறும். அதனை தொடர்ந்து மகா அன்னதானம் நடைபெறுகின்றது. இது போலவே தைப்பூசம், கந்த சஷ்டி திருவிழாக்களும் சிறப்புப் பூஜைகளுடன் நடைபெறுகின்றன. மேலும் வைகாசி விசாகம், திருக்கார்த்திகை உள்ளிட்ட முருகப்பெருமானுக்குரிய அனைத்து திருவிழாக்களும் விமரிசையாகக் நடைபெறுகின்றன. சஷ்டி, கிருத்திகை திருநாட்களில் அபிஷேகம், அல்ங்காரம் மற்றும் சிறப்புப் பூஜைகள் நடக்கின்றன. தஞ்சாவூர் நகரில் முருகப்பெருமான் கோவில்கள் உட்பட ஏராளாமான கோவிகளில் நவராத்திரி திருவிழா 9-11 நாட்கள் மிகவும் கோலாகலாமாகக் கொண்டாடப்படுகின்றன. இத்திருக்கோவிலிலும் துர்க்கைக்கு 11 நாட்கள் வித விதமான அலங்காரங்களில் அம்மன் திருக்காட்சியருள்வது இத்திருக்கோவிலின் சிறப்பம்சமாகும். மேலும் விநாயகப்பெருமான், ஆஞ்சநேயர், ஐயப்பன், துர்க்கை முதலான தெய்வங்களின் திருவிழாக்களும் சிறப்புப் பூஜைகளுடன் நடைபெறுகின்றன.
தல வரலாறு:
தஞ்சாவூர் கூட்டுறவுக் காலனி மற்றும் தங்கம் நகர் பகுதி வாழ் புரவலர்கள் மற்றும் முருகப்பெருமான் பக்தர்கள் பேருதவியுடன் சுமார் 42 ஆண்டுகளுக்கு முன்னர் தங்கம் நகர் வெண்ணிலா தெருவில் திருமுருகன் கோவில் எழுப்பப்பட்டது. இக்கோவில் அறங்காவலர் குழு இத்திருக்கோவில் நிர்வாகத்தை நிர்வகித்து வருகிறது. தஞ்சாவூர் தங்கம் நகர் திருமுருகன் கோவிலில் அறக்கட்டளையின் மேற்பார்வையில் கோவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு 04.07.2004 மற்றும் 04.06.2017-ல் மகா கும்பாபிஷேகங்கள் மிகச் சிறப்பாக நடைபெற்றன.
தல அமைப்பு:
தஞ்சாவூர் தங்கம் நகர் திருமுருகன் கோவில் அழகிய கோபுரத்தைக் கொண்டுள்ளது. திருக்கோவில் சுவர்களில் அறுபடை வீட்டு சிற்பங்கள் மற்றும் இதர முருகப்பெருமான் சிற்பங்கள் அமைந்துள்ளன. இத்திருக்கோவில் கருவறையில் மூலவர் திருமுருகன் நான்கு திருக்கரங்களுடன் கையில் வேல் கொண்டு மயில் பின் நிற்க வள்ளி, தெய்வானையுடன் நின்ற திருக்கோலத்தில் வீற்றிருந்து ஆற்றலுடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறை வாயிலின் இருபுறமும் விநாயகர், ஆஞ்சநேயர் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர். கருவறைக்கு எதிரில் வேல், மயில், பலிபீடம் உள்ளன. மேலும் இத்திருக்கோவிலில் உற்சவர் திருமுருகன் வள்ளி, தெய்வானை சமேதராக அருள்பாலிக்கின்றார். மேலும் விநாயகர், துர்க்கை, ஐயப்பன், ஆஞ்சநேயர், நவக்கிரகங்கள் உள்ளிட்ட அனைத்துத் தெய்வங்களும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
பங்குனி உத்திரம், தைப்பூசம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, சஷ்டி, கிருத்திகை, நவராத்திரி, சங்கடஹர சதுர்த்தி
பிரார்த்தனை:
எடுத்த காரியங்களில் வெற்றியடைய, தடைகள் விலக, எண்ணியது ஈடேற, திருமணத்தடை அகல, குழந்தைப்பேறு உண்டாக, நோய்கள் குணமாக, நல்லன வேண்டி, நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்க, விவசாயம் செழிக்க, தொழில், வியாபாரம் மேம்பட, தோஷங்கள் அகல
நேர்த்திக்கடன்:
பால்குடம், அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
திறக்கும் நேரம்:
காலை 7-10 மாலை 5-8
தடைகளை விலக்கியருளும் தஞ்சாவூர் தங்கம் நகர் திருமுருகன் திருப்பாதங்கள் பற்றி தொழுதிடுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
சைவ சித்தாந்தச் சுடர்
சைவ நெறிச் செம்மல்
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
bamikumar@gmail.com
கோயம்புத்தூர் 25
🙏🏼🙏🏼
படம் 1 - 1574 எடுத்த காரியங்களில் வெற்றியடைய அருளும் தஞ்சாவூர் தங்கம் நகர் திருமுருகன்
Comments
Post a Comment