கோவில் 1560 - கோயம்புத்தூர் மதுக்கரை மார்க்கெட் பழனி ஆண்டவர் கோவில்

 🙏🏻🙏🏻

தினம் ஒரு முருகன் ஆலயம்-1560

நேர்மறை அதிர்வுகளை உண்டாக்கும் கோயம்புத்தூர் மதுக்கரை மார்க்கெட் பழனி ஆண்டவர் கோவில்

15.09.2025 திங்கள்


அருள்மிகு பழனி ஆண்டவர் திருக்கோவில்

மதுக்கரை மார்க்கெட்

மதுக்கரை

கோயம்புத்தூர் 641105

கோயம்புத்தூர் மாவட்டம்


இருப்பிடம்: காந்திபுரம் 15 கிமீ, உக்கடம் 11 கிமீ, கோயம்புத்தூர் ரயில் நிலையம் 12 கிமீ, சிங்காநல்லூர் 17 கிமீ


மூலவர்: பழனி ஆண்டவர்

உற்சவர்: பழனி ஆண்டவர்


தல மகிமை:

கோயம்புத்தூர் மாநகரம் காந்திபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 15 கிமீ தொலைவில் இருக்கும் மதுக்கரை மார்க்கெட் பகுதியில் நேர்மறை அதிர்வுகளை உண்டாக்கும் கோயம்புத்தூர் மதுக்கரை மார்க்கெட் பழனி ஆண்டவர் கோவில் அமைந்துள்ளது. மேலும் உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து 11 கிமீ தொலைவு அல்லது கோயம்புத்தூர் ரயில் நிலையத்திலிருந்து 12 கிமீ தொலைவு அல்லது சிங்காநல்லூர் பேருந்து நிலையத்திலிருந்து 17 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் கோயம்புத்தூர் மதுக்கரை மார்க்கெட் பழனி ஆண்டவர் கோவிலை அடையலாம். பழனி ஆண்டவர் இத்திருக்கோவிலில் மூலவராக கையில் தண்டத்துடன் அருளாட்சி புரிகின்றார்..


கோயம்புத்தூர் மதுக்கரை மார்க்கெட் பழனி ஆண்டவர் கோவிலில் தைப்பூசம் ஒவ்வொரு ஆண்டும் சிற்ப்புப் பூஜைகளுடன் வெகு விமரிசையாக நடைபெறுகின்றது. மேலும் பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை உள்ளிட்ட முருகப்பெருமானுக்குரிய அனைத்து திருவிழாக்களும் சிறப்பாக நடைபெறுகின்றன. பிரதி சஷ்டி, கிருத்திகை நாட்களில் விசேஷ பூஜைகள் நடக்கின்றன.


தல வரலாறு:

கோயம்புத்தூர் மதுக்கரை மார்க்கெட் பழனி ஆண்டவர் கோவில் இப்பகுதியில் மிகவும் பிரசித்திப் பெற்ற பழமையான கோவிலாகும்.


தல அமைப்பு:

கோயம்புத்தூர் மதுக்கரை மார்க்கெட் பழனி ஆண்டவர் கோவில் ஆகம விதிகளுடன் அழகிய அமைப்பை கொண்டுள்ளது. கோவிலில் அழகிய கொடிமரம் உள்ளது. இத்திருக்கோவில் கருவறையில் மூலவர் பழனி ஆண்டவர் கையில் தண்டத்துடன் பழனி முருகனை போல ஆற்றலுடன் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். மூலவர் பழனி ஆண்டவர் வேல் கொண்டும் பல்வேறு அலங்காரங்களில் திருக்காட்சி அருள்கின்றார். கருவறைக்கு எதிரில் மயில், பலிபீடம் உள்ளன. மேலும் விநாயகர், உற்சவ பெருமான் உள்ளிட்ட எல்லா தெய்வங்களும் இத்திருக்கோவிலில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.


திருவிழா:

தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, சஷ்டி, கிருத்திகை


பிரார்த்தனை:

நேர்மறை அதிர்வுகள் அதிகரிக்க, கேட்கும் வரங்கள் பெற, சங்கடங்கள் தீர, இரு வினைகள் அகல, பிணிகள் நீங்க, குழந்தை பாக்கியம் வேண்டி, ஞானம் சிறக்க, தொழில், வியாபாரம் மேம்பட, உடல் ஆரோக்கியம் உண்டாக, தோஷங்கள் விலக


நேர்த்திக்கடன்:

காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்


திறக்கும் நேரம்:

காலை 7.30-9 மாலை 6-7.30


கேட்கும் வரங்களை அள்ளி வழங்கும் கோயம்புத்தூர் மதுக்கரை மார்க்கெட் பழனி ஆண்டவர் திருவடிகளை பற்றி வேண்டுவோம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


முருகாலய முரசு

சைவ சித்தாந்தச் சுடர்

சைவ நெறிச் செம்மல்

Dr K. முத்துக்குமரன் Ph. D

9489302842

bamikumar@gmail.com

கோயம்புத்தூர் 25

🙏🏻🙏🏻


படம் 1 - 1560 நேர்மறை அதிர்வுகளை உண்டாக்கும் கோயம்புத்தூர் மதுக்கரை மார்க்கெட் பழனி ஆண்டவர்


படம் 2 - 1560 கேட்கும் வரங்களை அள்ளி வழங்கும் கோயம்புத்தூர் மதுக்கரை மார்க்கெட் பழனி ஆண்டவர்

Comments

Popular posts from this blog

கோவில் 1319 - சேலம் மல்லிகுந்தம் சின்ன பழனியாண்டவர் கோவில்

கோவில் 1326 - சேலம் K R தோப்பூர் பாலமுருகன் கோவில்

கோவில் 316 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்