கோவில் 1550 - மதுரை ரயில் சந்திப்பு செல்வ விநாயகர், தங்க பாலமுருகன் கோவில் 5.09.2025 வெள்ளி
🙏🏼🙏🏼
தினம் ஒரு முருகன் ஆலயம்-1550
நினைத்ததை நிறைவேற்றும் மதுரை ரயில் சந்திப்பு செல்வ விநாயகர், தங்க பாலமுருகன் கோவில்
5.09.2025 வெள்ளி
அருள்மிகு செல்வ விநாயகர், தங்க பாலமுருகன் திருக்கோவில்
மேற்கு வெளித் தெரு
மதுரை ரயில் சந்திப்பு
மதுரை 625001
மதுரை மாவட்டம்
இருப்பிடம்: மதுரை பழைய பேருந்து நிலையம் 1.5 கிமீ, மதுரை ரயில் சந்திப்பு 200 மீ, மாட்டுதாவணி பேருந்து நிலையம் 8 கிமீ, திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில் 8 கிமீ,
மூலவர் 1: தங்க பாலமுருகன்
மூலவர் 2: செல்வ விநாயகர்
தல மகிமை:
மதுரை மாநகரம் பழைய பேருந்து நிலையத்திலிருந்து 1.5 கிமீ தொலைவில் இருக்கும் மதுரை ரயில் சந்திப்பு வளாகத்தில் நினைத்ததை நிறைவேற்றும் மதுரை ரயில் சந்திப்பு செல்வ விநாயகர், தங்க பாலமுருகன் கோவில் அமைந்துள்ளது. மேலும் மதுரை ரயில் சந்திப்பு நிலையத்திலிருந்து 200 மீ தொலைவு அல்லது மாட்டுதாவணி பேருந்து நிலையத்திலிருந்து 8 கிமீ தொலைவு அல்லது உலகப் புகழ் பெற்ற திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலிலிருந்து 8 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் மதுரை ரயில் சந்திப்பு செல்வ விநாயகர், தங்க பாலமுருகன் கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் தங்க பாலமுருகன் மற்றும் செல்வ விநாயகர் இருவரும் மூலவர்களாக வீற்றிருந்து அருள்புரிகின்றனர்.
மதுரை ரயில் சந்திப்பு செல்வ விநாயகர், தங்க பாலமுருகன் கோவில் மதுரை ரயில் நிலைய சந்திப்பு, பெரியார் பேருந்து நிலையம் அருகில் இருப்பதால் பொது மக்கள், பக்தர்கள் என ஏராளமானோர் இக்க்கோவிலுக்க வந்து, தங்க பாலமுருகன் மற்றும் செல்வ விநாயகரை வழிபட்டு எண்ணற்ற பலன்களை பெற்று செல்வது இக்கோவிலின் கூடுதல் சிறப்பம்சமாகும்.
மதுரை ரயில் சந்திப்பு செல்வ விநாயகர், தங்க பாலமுருகன் கோவிலில் முருகப்பெருமானுக்குரிய தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை என அனைத்து திருவிழாக்களும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. சஷ்டி, கிருத்திகை திருநாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன. மேலும் செல்வ விநாயகர் விநாயகர் சதுர்த்தி மற்றும் பிரதி சங்கடஹர சதுர்த்தி நாட்களில் விசேஷ பூஜைகள் உண்டு.
தல வரலாறு:
மதுரை ரயில் சந்திப்பு செல்வ விநாயகர், தங்க பாலமுருகன் கோவில் லைசென்ஸ் கூலி போர்ட்டர்கள் யூனியன் அங்கத்தினர்கள் மற்றும் சீரிய பக்தர்கள் சேர்ந்து இக்கோவிலை கட்டினார்கள்
தல அமைப்பு:
மதுரை ரயில் சந்திப்பு செல்வ விநாயகர், தங்க பாலமுருகன் திருக்கோவில் கருவறையில் மூலவர் தங்க பாலமுருகன் வீற்றிருந்து கருணை பொங்க பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். அருகிலேயே மற்றொரு மூலவர் செல்வ விநாயகர் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றார்.
திருவிழா:
தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, விநாயகர் சதுர்த்தி, சஷ்டி, கிருத்திகை, சங்கடஹர சதுர்த்தி
பிரார்த்தனை:
நினைத்தது நிறைவேற, சகல ஐஸ்வர்யங்கள் பெற, வினைகள் தீர, பிணிகள் அகல, வியாபரம், தொழில் சிறக்க, விவ்சாயம் செழிக்க, சந்தான பாக்கியம் வேண்டி, திருமணம் நடைபெற, நோய்கள் நீங்க, நல்லன அருள, நேர்மறை எண்ணங்கள் உண்டாக, தோஷங்கள் விலக
நேர்த்திக்கடன்:
அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
திறக்கும் நேரம்:
காலை 5.30-7.30 மாலை 6-8
சகல ஐஸ்வர்யங்களும் பெற்றிட அருளும் மதுரை ரயில் சந்திப்பு செல்வ விநாயகர், தங்க பாலமுருகனை போற்றி வணங்குவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
சைவ சித்தாந்தச் சுடர்
சைவ நெறிச் செம்மல்
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
bamikumar@gmail.com
கோயம்புத்தூர் 25
🙏🏼🙏🏼
படம் 1 - 1550 நினைத்ததை நிறைவேற்றும் மதுரை ரயில் சந்திப்பு செல்வ விநாயகர், தங்க பாலமுருகன்
Comments
Post a Comment