கோவில் 1536 - கோயம்புத்தூர் குரும்பபாளையம் வடபழனி முருகன் கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-1536
வல்வினைகள் போக்கும் கோயம்புத்தூர் குரும்பபாளையம் வடபழனி முருகன் கோவில்
22.08.2025 வெள்ளி
அருள்மிகு வடபழனி முருகன் திருக்கோவில்
[அ/மி பழனி ஆண்டவர் திருக்கோவில்]
பாலாஜி நகர்
குரும்பபாளையம்
மதுக்கரை PO
கோயம்புத்தூர் 641105
கோயம்புத்தூர் மாவட்டம்
இருப்பிடம்: காந்திபுரம் 15 கிமீ, மதுக்கரை 3 கிமீ, மலுமிச்சம்பட்டி 6 கிமீ, உக்கடம் 12 கிமீ, கோயம்புத்தூர் ரயில் நிலையம் 13 கிமீ, சிங்காநல்லூர் 19 கிமீ, பொள்ளாச்சி 36 கிமீ
மூலவர்: வடபழனி முருகன்
உற்சவர்: முருகப்பெருமான்
தல மகிமை:
கோயம்புத்தூர் மாநகரம் காந்திபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 15 கிமீ தொலைவில் இருக்கும் குரும்பபாளையம் பாலாஜி நகரில் வல்வினைகள் போக்கும் கோயம்புத்தூர் குரும்பபாளையம் வடபழனி முருகன் கோவில் அமைந்துள்ளது. மேலும் மதுக்கரையிலிருந்து 3 கிமீ தொலைவு அல்லது மலுமிச்சம்பட்டியிலிருந்து 6 கிமீ தொலைவு அல்லது உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து 12 கிமீ தொலைவு அல்லது கோயம்புத்தூர் ரயில் நிலையத்திலிருந்து 13 கிமீ தொலைவு அல்லது சிங்காநல்லூரிலிருந்து 19 கிமீ தொலைவு அல்லது பொள்ளாச்சி நகரிலிருந்து 36 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் கோயம்புத்தூர் குரும்பபாளையம் வடபழனி முருகன் கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் வடபழனி முருகன் கையில் வேலுடன் நின்ற திருக்கோலத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றார்.
கோயம்புத்தூர் குரும்பபாளையம் வடபழனி முருகன் கோவிலில் தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி திருவிழா ஆகிய திருவிழாக்கள் முக்கிய திருவிழாக்களாக சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. மேலும் இத்திருக்கோவிலில் வைகாசி விசாகம், திருக்கார்த்திகை உள்ளிட்ட முருகப்பெருமானின் எல்லா திருவிழாக்களும் விமரிசையாக நடக்கின்றன. சஷ்டி, கிருத்திகை நன்னாட்களிலும் விசேஷ வழிபாடுகள் நடைபெறுகின்றன.
தல வரலாறு:
கோயம்புத்தூர் மதுக்கரை அருகில் உள்ள குரும்பபாளையம் வடபழனி முருகன் கோவில் பழமையான, பிரசித்திப் பெற்ற கோவிலாகும்.
தல அமைப்பு:
கோயம்புத்தூர் குரும்பபாளையம் வடபழனி முருகன் திருக்கோவில் கருவறையில் மூலவர் வடபழனி முருகன் கைகளில் வேலுடன் நின்ற திருக்கோலத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் மயில், பலிபீடம் உள்ளன. மேலும் விநாயகர், உற்சவர் முருகப்பெருமான் மற்றும் அனைத்து பரிவார தெய்வங்களும் இத்திருக்கோவிலில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, சஷ்டி, கிருத்திகை
பிரார்த்தனை:
வல்வினைகள் போக்க, வேண்டும் வரங்கள் கிடைக்க, பிணிகள் அகல, சந்தான பாக்கியம் வேண்டி, சகல செல்வங்களும் வேண்டி, உடல் ஆரோக்கிய்ம உண்டாக, நல்லன நடைபெற, சஞ்சலங்கள் தீர, வாழ்வில் ஜெயம் கிட்ட, மன அமைதி கிடைத்திட, தோஷங்கள் விலக
நேர்த்திக்கடன்:
காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
வேண்டும் வரங்கள் தரும் கோயம்புத்தூர் குரும்பபாளையம் வடபழனி முருகனை போற்றி வணங்குவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
சைவ சித்தாந்தச் சுடர்
சைவ சித்தாந்தச் செம்மல்
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
bamikumar@gmail.com
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
படம் 1 - 1536 வல்வினைகள் போக்கும் கோயம்புத்தூர் குரும்பபாளையம் வடபழனி முருகன்
Comments
Post a Comment