கோவில் 1527 - கோயம்புத்தூர் பெரியநாயக்கன்பாளையம் பாலமுருகன் கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-1527
மன அமைதி தந்தருளும் கோயம்புத்தூர் பெரியநாயக்கன்பாளையம் பாலமுருகன் கோவில்
13.08.2025 புதன்
அருள்மிகு பாலமுருகன் திருக்கோவில்
யுனியன் டேங்க் சாலை [Union Tank Road]
பெரியநாயக்கன்பாளையம்
கோயம்புத்தூர் 641020
கோயம்புத்தூர் மாவட்டம்
இருப்பிடம்: காந்திபுரம் 19 கிமீ, துடியலூர் 9 கிமீ, காரமடை 11 கிமீ, மேட்டுப்பாளையம் 19 கிமீ, கோயம்புத்தூர் ரயில் நிலையம் 19 கிமீ
மூலவர்: பாலமுருகன்
தல மகிமை:
கோயம்புத்தூர் மாநகரம் காந்திபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 19 கிமீ தொலைவில் இருக்கும் பெரியநாயக்கன்பாளையத்தில் மன அமைதி தந்தருளும் கோயம்புத்தூர் பெரியநாயக்கன்பாளையம் பாலமுருகன் கோவில் அமைந்துள்ளது. துடியலூரிலிருந்து 9 கிமீ தொலைவு அல்லது காரமடையிலிருந்து 11 கிமீ தொலைவு அல்லது மேட்டுப்பாளையத்திலிருந்து 19 கிமீ தொலைவு அல்லது கோயம்புத்தூர் ரயில் நிலைய சந்திப்பிலிருந்து 19 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் கோயம்புத்தூர் பெரியநாயக்கன்பாளையம் பாலமுருகன் திருக்கோவிலை அடையலாம். மூலவராக பாலமுருகன் இத்திருக்கோவிலில் வீற்றிருந்து அருளாட்சி புரிகின்றார்.
கோயம்புத்தூர் பெரியநாயக்கன்பாளையம் பாலமுருகன் கோவிலில் ஒவ்வொரு வருடமும் தைப்பூசம் வெகுச் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. மேலும் இத்திருக்கோவிலில் பங்குனி உத்திரம், கந்த சஷ்டி வைகாசி விசாகம், திருக்கார்த்திகை உள்ளிட்ட முருகப்பெருமானின் திருவிழாக்களும் சிறப்பு பூஜைகளுடன் விமரிசையாக நடைபெறுகின்றன. சஷ்டி, கிருத்திகை திருநாட்களிலும் விசேஷ வழிபாடுகள் நடக்கின்றன.
தல வரலாறு:
கோயம்புத்தூர் பெரியநாயக்கன்பாளையம் பாலமுருகன் கோவில் இப்பகுதி புரவலர்கள் மற்றும் முருக பக்தர்கள் பேருதவியுடன் கட்டப்பட்டது.
தல அமைப்பு:
கோயம்புத்தூர் பெரியநாயக்கன்பாளையம் பாலமுருகன் திருக்கோவில் கருவறையில் மூலவர் பாலமுருகன் பொலிவுடன் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் மயில், பலிபீடம் உள்ளன. மேலும் பஞ்சமுக கணபதி, விஷ்ணு துர்க்கை, பழனி ஆண்டவர் உள்ளிட்ட அனைத்து தெய்வங்களும் இக்கோவிலில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, சஷ்டி, கிருத்திகை
பிரார்த்தனை:
மன அமைதி, நேர்மறை அதிர்வுகள் உண்டாக்க, வினைகள் விலக, பிணிகள் நீங்க, குழந்தைப்பேறு வேண்டி, தொழில் மேம்பட, தடைகள் அகல, நல்லன அருள, தோஷங்கள் போக்க
நேர்த்திக்கடன்:
அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
திறக்கும் நேரம்:
காலை 6-10 மாலை 5-8
நேர்மறை அதிர்வுகளை உண்டாக்கும் கோயம்புத்தூர் பெரியநாயக்கன்பாளையம் பாலமுருகனை மனமுருகி பிரார்த்திப்போம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
சைவ சித்தாந்தச் சுடர்
சைவ சித்தாந்தச் செம்மல்
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
bamikumar@gmail.com
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
Comments
Post a Comment