கோவில் 1517 - கேரளா திருச்சூர் புத்தூர்கரா சுப்பிரமணிய சுவாமி கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-1517
கேட்கும் வரங்களை அளிக்கும் கேரளா திருச்சூர் புத்தூர்கரா சுப்பிரமணிய சுவாமி கோவில்
3.08.2025 ஞாயிறு
அருள்மிகு புத்தூர்கரா சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்
புத்தூர்கரா 680003 [Puthurkkara]
திருச்சூர் 680003 [Thrissur}
திருச்சூர் மாவட்டம் [Thrissur District]
கேரளா மாநிலம் [Kerala]
இருப்பிடம்: திருச்சூர் 5 கிமீ, குருவாயூர் 24 கிமீ, ஷோரனூர் 37 கிமீ, பாலக்காடு 70 கிமீ, ஏர்ணாகுளம் 78 கிமீ
மூலவர்: சுப்பிரமணிய சுவாமி
தேவி: தெய்வானை
தல மகிமை:
கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டம் கொல்லம் நகரிலிருந்து 5 கிமீ அருகில் இருக்கும் புத்தூர்கரா பகுதியில் கேட்கும் வரங்களை அளிக்கும் திருச்சூர் புத்தூர்கரா சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இத்திருக்கோவில் அய்யந்தோல் மைதானம் மற்றும் உள்ளூர் நூலகத்திற்கு மிக அருகில் உள்ளது. மேலும் குருவாயூரிலிருந்து 24 கிமீ தொலைவு அல்லது ஷோரனூரிலிருந்து 37 கிமீ தொலைவு அல்லது பாலக்காட்டிலிருந்து 70 கிமீ தொலைவு அல்லது அடூரிலிருந்து 41 கிமீ தொலைவு அல்லது ஏர்ணாகுளத்திலிருந்து 78 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் திருச்சூர் புத்தூர்கரா சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலை அடையலாம். மூலவர் சுப்பிரமணிய சுவாமி இக்கோவிலில் மிகவும் சக்தி வாய்ந்த கடவுளாக திருக்காட்சி தந்து அருள்புரிகின்றார்.
கேரளா திருச்சூர் புத்தூர்கரா சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூசம் [தைப்பூயம்] திருவிழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. வேண்டுதல்கள் நிறைவேறியவர்களுக்காக இக்கோவிலில் நடைபெறும் காவடியாட்டம் மிகவும் பிரசித்திப் பெற்றதாகும். இதே போல கந்த சஷ்டி பெருவிழாவும் 6 நாட்கள் விமரிசையாக நடைபெறுகின்றது. ஆறாம் நாள் சூரசம்ஹார நிகழ்வு 50 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பாக நடக்கின்றது. மேலும் பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை உள்ளிட்ட முருகப்பெருமானின் அனைத்து திருவிழாக்களும் சிறப்புப் பூஜைகளுடன் நடைபெறுகின்றன. சஷ்டி, கிருத்திகை நன்னாட்களில் விசேஷ வழிபாடுகள் நடக்கின்றன.
தல வரலாறு:
கேரள மாநிலம் திருச்சூர் புத்தூர்கரா சுப்பிரமணிய சுவாமி கோவில் மிகவும் பழமையான கோவிலாகக் கருதப்படுகிறது. திருச்சூர் புத்தூர்கரா சுப்பிரமணிய சுவாமி கோவில் கேரளப் பாணியில் கட்டப்பட்ட ஒரு அழகிய திருக்கோவிலாகும்.
தல அமைப்பு:
திருச்சூர் புத்தூர்கரா சுப்பிரமணிய சுவாமி கோவில் அழகிய அமைப்புடன் உள்ளது. உள்ளே நுழைந்த உடன் ஒரு கொடிமரம் உல்ளது. இத்திருக்கோவில் கருவறையில் மூலவர் சுப்பிரமணிய சுவாமி மிகவும் சக்தி வாய்ந்த அருட்கடவுளாக வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். மேலும் இத்திருக்கோவிலில் விநாயகர், சிவபெருமான், பெருமாள், நாகராஜா உள்ளிட்ட அனைத்து தெய்வங்களும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
தைப்பூசம், கந்த சஷ்டி, பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, சஷ்டி, கிருத்திகை
பிரார்த்தனை:
கேட்கும் வரங்கள் கிடைக்க, செல்வம் பெருக, மன அமைதி கிட்ட, வினைகள் விலக, பிணிகள் அகல, குழந்தைப்பேறு வேண்டி, நோய்கள் குணமாக, கவலைகள் தீர, தோஷங்கள் போக்க
நேர்த்திக்கடன்:
காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
செல்வம் பெருக அருளும் கேரளா திருச்சூர் புத்தூர்கரா சுப்பிரமணிய சுவாமியை மனமுருகி வேண்டுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
சைவ சித்தாந்தச் சுடர்
சைவ சித்தாந்தச் செம்மல்
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
bamikumar@gmail.com
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
படம் 1 - 1517 கேட்கும் வரங்களை அளிக்கும் கேரளா திருச்சூர் புத்தூர்கரா சுப்பிரமணிய சுவாமி கோவில்
Comments
Post a Comment