கோவில் 1201 - கொழும்பு மாண்புமிகு பண்டாரநாயக்க மாவத்தை சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்
🙏🙏
தினம் ஒரு முருகன் ஆலயம்-1201
நினைத்த காரியங்கள் வெற்றியடைய அருளும் இலங்கை கொழும்பு மாண்புமிகு பண்டாரநாயக்க மாவத்தை சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்
21.9.2024 சனி
அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்
147, மாண்புமிகு பண்டாரநாயக்க மாவத்தை [Srimath Bandaranayake Mawatha]
கொழும்பு [Colombo]
கொழும்பு மாவட்டம் [Colombo]
மேல் மாகாணம் [Western Province]
இலங்கை
இருப்பிடம்: கொழும்பு மத்திய பேருந்து நிலையம் 2 கிமீ, கொழும்பு கோட்டை ரயில் நிலையம் 2.5 கிமீ, கொழும்பு வெளிநாட்டு விமான நிலையம் 18 கிமீ, மொறட்டுவை 22 கிமீ
மூலவர்: சிவசுப்பிரமணிய சுவாமி
தேவியர்: வள்ளி, தெய்வானை
தல மகிமை:
இலங்கை தலைநகரம் கொழும்பு மாநகரின் மையத்தில் அமைந்துள்ள (கொழும்பு மாவட்டம்-மேற்கு மாகாணம்) கொழும்பு மத்திய பேருந்து நிலையத்திலிருந்து 2 கிமீ தொலைவில் இருக்கும் மாண்புமிகு பண்டாரநாயக்க மாவத்தையில் நினைத்த காரியங்கள் வெற்றியடைய அருளும் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து 2.5 கிமீ தொலைவு அல்லது கொழும்பு வெளிநாட்டு விமான நிலையத்திலிருந்து 18 கிமீ தொலைவு அல்லது மொறட்டுவை நகரிலிருந்து 22 கிமீ பிரயாணம் செய்தாலும் கொழும்பு மாநகர் மாண்புமிகு பண்டாரநாயக்க மாவத்தை சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலை அடையலாம். இக்கோவிலில் சிவசுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானை சமேதராக அருளாட்சி செய்கின்றார்.
இத்திருக்கோவிலில் கந்த சஷ்டி திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. தினசரி சிறப்பு பூஜைகள், 6-ம் நாள் சூரசம்ஹாரம், 7-ம் நாள் திருக்கல்யாணம் வெகு விமரிசையாக ந்டைபெறுகிறது. மேலும் பங்குனி உத்திரம், தைப்பூசம், திருக்கார்த்திகை, வைகாசி விசாகம், கார்த்திகை, சஷ்டி போன்ற திருநாட்களில் விசேஷ பூஜைகள் நடக்கின்றன.
தல வரலாறு:
கொழும்பு வாழ் தமிழர்கள் மற்றும் புரவலர்கள் உதவியுடன் மாண்புமிகு பண்டாரநாயக்க மாவத்தை சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் கட்டப்பட்டது. திருக்கோவில் பரிபாலன குழு கோவில் நிர்வாகத்தை கவனித்து வருகிறது.
.
தல அமைப்பு:
அழகிய ராஜகோபுரத்துடன் கூடிய இக்கோவிலில் கொடிமரம், மயில், பலிபீடம் உள்ளன. கருவறையில் சிவசுப்பிரமணிய சுவாமி நின்ற திருக்கோலத்தில் வேல் கொண்டு வள்ளி, தெய்வானையுடன் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். மேலும் விநாயகர், தட்சிணா மூர்த்தி, விஷ்ணு, துர்க்கை, சண்டிகேஸ்வரர், உற்சவ மூர்த்திகள், சிவபெருமான், அம்பாள், பைரவர், நவக்கிரகங்கள் உள்ளிட்ட அனைத்து தெய்வங்களும் தனி சந்நிதிகளில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
கந்த சஷ்டி, பங்குனி உத்திரம், தைப்பூசம், திருக்கார்த்திகை, வைகாசி விசாகம், கார்த்திகை, சஷ்டி
பிரார்த்தனை:
நினைத்த காரியங்கள் வெற்றியடைய, செல்வம் செழிக்க, வல்வினைகள் வேரறுக்க, திருமணத்தடை அகல, குழந்தை பாக்கியம் வேண்டி, பிணிகள் தீர, தொழில் சிறக்க
நேர்த்திக்கடன்:
பால்குடம், அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
செல்வம் செழிக்க அருளும் இலங்கை கொழும்பு மாண்புமிகு பண்டாரநாயக்க மாவத்தை சிவசுப்பிரமணிய சுவாமி திருவடிகளை போற்றி வேண்டுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
bamikumar@gmail.com
கோயம்புத்தூர் 25
🙏🙏
படம் 1 - 1201 நினைத்த காரியங்கள் வெற்றியடைய அருளும் இலங்கை கொழும்பு மாண்புமிகு பண்டாரநாயக்க மாவத்தை சிவசுப்பிரமணிய சுவாமி
படம் 2 - 1201 செல்வம் செழிக்க அருளும் இலங்கை கொழும்பு மாண்புமிகு பண்டாரநாயக்க மாவத்தை சிவசுப்பிரமணிய சுவாமி
அண்ணா என்னையும் இந்த whatsapp குரூப்பில் இணைக்கவும் 9629535709deva
ReplyDelete